முன்னாள் மனைவியின் உரையாடலை ஒட்டு கேட்ட கணவருக்கு அபராதம் !

திருமண உறவில் இருந்த போது பகிர்ந்து கொண்ட தொலைபேசி மற்றும் முகநூல் பக்கத்தை வேவு பார்த்த நபருக்கு தண்டனை கிடைத் துள்ளது. 
முன்னாள் மனைவியின் உரையாடலை ஒட்டு கேட்ட கணவருக்கு அபராதம் !

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதி கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனை யடுத்து மனைவி மீது சந்தேகப் பட்ட கணவனின் செயலால் உறவில் விரிசல் ஏற்பட்டு பாதிக்கப் பட்ட பெண், 


ஒரே ஆண்டில் அதாவது 2014ம் ஆண்டு ஜுன் மாதம் ஹவுரா நீதிமன்றத்தில் விவாகரத் துக்கு தாக்கல் செய் துள்ளார். 
இந்நிலை யில் தன்னுடைய அனுமதி யின்றி தொலைபேசி உரை யாடலை ஒட்டு கேட்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித் துள்ளார்.

மேற்கு வங்க சைபர் குற்றப் பிரிவு போலீ சாரிடம் பெண் அளித்துள்ள புகாரில், நான் என்னுடைய கணவருடன் உறவில் இருந்த போது முகநூல் மற்றும் ஈமெயில் அக்கவுண்ட்டை பகிர்ந்து கொண்டேன். 

அதை பயன் படுத்தி நாங்கள் பிரிந்த பின்னர் என்னுடைய மெயில் மற்றும் பேஸ்புக்கை நோட்ட மிட்டுள்ளார் என்று கூறி யுள்ளார். 

மேலும் எனக்கு தெரியா மலேயே என்னுடைய தொலை பேசியில் மேல்வேர் என்ற சாப்ட்வேரை இணைத்து எனக்கு வரும் அழைப்பு களை ஒட்டு கேட்டுள்ளார், 

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித் துள்ளார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப் பட்ட நபரிடம் இருந்து 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும் உத்தர விட்டுள்ளது. 
மேலும் ஐடி தண்டனைச் சட்டம் 43(A), (b),66(c) மற்றும் 72 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடி க்கை எடுக்க வேண்டும் ஆணை யிட்டுள்ளது. 

இந்த சட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: