பச்சை காய்கறிகள், இலை தழை உணவுகள் என சைவம் மட்டும் தான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும் என யார் கூறியது. 
ஆட்டிறைச்சியினால் கிடைக்கும் நன்மைகள் !
தற்போது மனிதன் என்ன தான் நவீன வாழ்க்கை வாழ்ந்தாலும் அனைவரும் தினமும் ஆசைப்படுவது சாப்பிட்டிற்காக தான். 

தற்போதைய உணவு பழக்க வழக்க முறை தான் மனிதனின் ஆயுட்காலத்தை நீடிக்கிறது,  விதவிதமான சாப்பாடு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. 
அதிலும் அசைவம் என்றால் தனி சந்தோசம் தான். குறிப்பா அசைவ ப்ரியர்களில் மட்டன் சாப்பிடாதவர்கள் மிகவும் குறைவு தான். அசைவ உணவில் மட்டன் எனும் ஆட்டிறைச்சி மட்டும் மிகவும் ஆரோக்கியமானது. 

மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது ஆட்டிறைச்சி. ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என அனைத்தும் மனிதர் களுக்கு மருத்துவ பயன் தருகிறது.

உங்களது, இதயம், மூளை, குடல், எலும்பு என தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களு க்கும் நன்மை விளை விக்கிறது ஆட்டு இறைச்சி. 

வெறும் சதை இறைச்சியை மட்டும் உண்பதை தவிர்த்து உறுப்பு இறைச்சியை சாப்பிட பழகுங்கள் இது உங்கள் உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும்.

இந்த ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான B1, B2, B3, B9, B12, E, K, கோலைன், புரோட்டீன், அமினோ அமிலங்கள், மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

மட்டன் வெறும் சுவையையும் தாண்டி  மனிதர்களுக்கு பல்வேறு மருத்துவ பயன் தருகிறது. ஆட்டின் தலை, கால், கண், குடல் என அனைத்தும் பல்வேறு நன்மைகளை தருகிறது. 

ஆட்டிறைச்சி உண்பதால் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்கள், நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை நீக்கி, கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதை தடுக்கும். 
அதே போல் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் அது ரத்தச்சோகை வராமல் தடுக்கும். 

வாரத்தில் ஒரு முறை ஆட்டிறைச்சியை சாப்பிட்டு வந்தால், அது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த செய்யும். 

ஆட்டின் நாக்கு.
ஆட்டிறைச்சியினால் கிடைக்கும் நன்மைகள் !
உடல் சூட்டை தணிக்கும். தோலுக்குப் வலிமை தரும் மற்றும் சருமம் பளபளக்க உதவும். உடலின் அனைத்து பிரச்சனை க்கும் தீர்வளிக் கிறது ஆட்டிறைச்சி, பின் நூறு வருஷம் எளிது தானே!

(பி.கு: தண்ணிய டிச்சுட்டு சைடுடிஷ்க்கு இத சேத்தி சாப்பிடுவது எல்லாம் உடல் நலத்துக்கு ஒத்துவராது! )

ஆட்டின் சிறுநீரகம்.

இடுப்புக்கும், சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும். இடுப்பு வலி மற்றும் கோளாறு களுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தி யாகும். ஆண் குறிக்கு வலிமை தரும்.
ஆட்டின் கொழுப்பு.

ஆட்டின் கொழுப்பு இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும்.
ஆட்டின் நுரையீரல்.

உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும்.

ஆட்டின் இதயம்.

இதயத்தி ற்குப் நல்ல பலம் தரும் மற்றும் மன ஆற்றல் அதிகரிக்க வெகுவாக பயன் தருகிறது ஆட்டின் இதயம்.

ஆட்டின் மார்பு.

கபத்தை நீக்கும். மார்புக்குப் வலிமையை தரும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் குணப் படுத்தும்.

ஆட்டின் மூளை.

கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது ஆட்டின் மூளை. தாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினை வாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம்.

ஆட்டின்கண்.
ஆட்டிறைச்சியினால் கிடைக்கும் நன்மைகள் !
பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்க ளுக்கு மிகுந்த வலிமை யைக் கொடுக்கும்.

ஆட்டுக்கால்கள்.

ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால், எலும்புக் களுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றல் தரும்

ஆட்டு தலை.

இதயம் சார்ந்த வலிகளும் கோளாறு களும் நீங்கும். குடலை வலிமை யாக்க உதவும். தலை பகுதி எலும்பினை வலுப் படுத்தும்.