கடலூரில் தோழியை கொன்ற பெண் தற்கொலை !

காதல் விவகாரத்தால் தோழியைக் கொன்று பெண் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கடலூரில் தோழியை கொன்ற பெண் தற்கொலை !
கடலூர் மாவட்ட த்தில் வசித்து வரும் செவிலியர் சித்ரா ஒரு தனியார் சித்தா கல்லூரி யில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். இவரு டன் அதே கல்லூரி யில் நித்யாவும் படித்து வருகிறார். 

இருவ ருமே பல ஆண்டு களாக நல்ல நண்பர்கள் . இந்த நிலை யில் வேலை க்கு செல்வ தாக கூறிவிட்டு சென்னை க்கு நித்யா சென்றிரு க்கிறார். 

அவர் சென்னை க்கு சென்று பல நாட்கள் ஆன போதும் அவரிட த்தில் இருந்து எந்த தகவலும் வராத நிலை யில் அவரின் தந்தை கடலூர் காவல் நிலைய த்தில் புகார் அளித்து ள்ளார். 

புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையி னரால் விசாரணை நடத்தப் பட்டது. நித்யாவிற்கு தெரிந்த அனை வரையும் போலீசார் தீவிரமாக விசாரித் தனர். 

அவ்வாறு விசாரித்த போது நித்யாவின் தோழி சித்ராவிடமும் விசாரணை நடந்தது. அப்போது திடுக் கிடும் தகவல் கள் பல வெளியா யின.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது:

காதல் விவகா ரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் நித்யாவை சித்ரா கொடூர மாக கொன்றுள்ளார். இருவருக்குமே கல்லூரி படிக்கும் போதே மது அருந்தும் பழக்கம் இருந் துள்ளது. 

ஒன்றாக மது அருந்த லாம் என்று நித்யாவை சித்ரா அழைத்து சென் றுள்ளார். நித்யா வும் அவரை நம்பி காமாசிப் பேட்டை ஆற்று க்கு சென்றார். 

இருவரும் ஒன்றாக மது அருந் தினர். நித்யா அருந்தும் மதுவில் சித்ரா எலி மருந்தை கலந்து கொடுத் துள்ளார்.

இதை யடுத்து இறந்த நித்யா வின் உடலை காமாட்சிப் பேட்டை ஆற்று க்கு அருகில் சித்ரா புதைத்து விட்டார். 

இதை முதலில் சித்ராவே கூறிய போது நாங்கள் நம்ப வில்லை. நித்யா வின் உடலை புதைத்த இடத்தை அடை யாளம் காட்டுவ தாக அவரே கூறினார். 
அவர் கூறிய இடத்தில் தான் நித்யா வின் உடலும் இருந்தது. நித்யா வின் செல்போனை வேறு இடத்தில் மறைத்து வைத்தி ருப்பதாக அவர் கூறினார். 

அந்த இடத்தி ற்கு எங்களை அழைத்து சென்ற போது, அருகில் இருந்த பாழடைந்த கிணற்று க்குள் சித்ரா குதித்தார். இவ்வாறு காவல் துறையினர் தெரிவி த்தனர்.

தற்கொலை க்கு முயன்ற சித்ராவை காப்பாற்ற காவல் துறையினர் தீயணைப்பு படை யினரை அழைத் துள்ளனர். 

ஆனால் அந்தக் கிணறு பல ஆண் டுகள் பயன் படுத்தாமல் இருந்த தால் விஷ வாயு இருக்க வாய்ப் புள்ளது என்று தீயணைப்பு வீரர்கள் கூறினர். 
அதை வெளி யேற்றி விட்டு தான் அவரை மீட்க முடியும் என்று தீயணைப்பு படை யினர் கூறிய தால் விஷ வாயுவை வெளி யேற்றும் பணி நடை பெற்று வருகிறது. 

அவர் உயிருடன் இருப் பதே சந்தேகம் என்று காவல் துறையினர் தெரிவி த்தனர்.
Tags:
Privacy and cookie settings