வயிறு குறைய அப்டாமினல் க்ரன்சஸ் !

பெரும்பாலான பெண்கள் 30 வயதை நெருங்கு வதற்குள் வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடி விடுகின்றனர். 
வயிறு குறைய அப்டாமினல் க்ரன்சஸ் !
தாய்மை, ஹார்மோன் மாற்றம், உணவு போன்ற காரணங்களோடு போதிய உடற்பயிற்சி இல்லாததும் கொழுப்பு அளவு அதிகரித்து, தசைகள் தளர்வு பெற முக்கியக் காரணம்.

சமச்சீரான உணவோடு, சில அப்டாமினல் பயிற்சிகள் செய்வது, வயிற்றுப் பகுதியில் த‌சைகளை இறுக்கி, உடலை ஃபிட்டாக்கும். 
பயிற்சி யாளரின் துணை யுட‌ன் இந்தப் பயிற்சி களைத் தொடர்ந்து செய்வது நல்ல ப‌லனைத் தரும். அப்டாமினல் க்ரன்சஸ் (Abdominal Crunc

hes) பயிற்சி வயிற்சி பகுதியை வலு வடையச் செய்யக் கூடியது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வயிற்று பகுதி அழகான வடிவம் பெறும். 

இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டி களை மடக்கிய படி வைக்க வேண்டும். 
கைகளை மடித்து, தலையின் பக்க வாட்டில் வைக்க வேண்டும். பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். கால்களை நகர்த் தாமல், உடலை முன் புறமாக உயர்த்த வேண்டும். 

எந்த அள‌வுக்கு முடியுமோ அந்த அள‌வுக்கு உடலை முன்னோக்கிக் கொண்டு சென்று, பழைய நிலை க்குத் திரும்ப வேண்டும். 

இப்படி 25 முறைகள் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க வேண்டும்.
பலன்கள்: 
வயிற்றுப் பகுதி தசைகள் இறுகி, வலுவடையும். முதுகு வலி, குறையும். வயிறு அழகான வடிவம் பெறும்.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !