சுந்தர் பிச்சையின் குழந்தைப் பருவம்.. பேருந்தில் பயணம் !

கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சிறு வயதில் பணவசதி இன்றி இருந்ததாக ப்ளூம்பெர்க் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவன சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப் பட்டுள்ளார்.  
சுந்தர் பிச்சையின் குழந்தைப் பருவம்.. பேருந்தில் பயணம் !
சுந்தர் பிச்சையின் சொந்த கதையும் சினிமா கதை போன்று தான் உள்ளது. வறுமையில் வாழ்ந்த அவர் தனது படிப்பால் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். 
இது குறித்து ப்ளூம்பெர்க் பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது,

பிச்சை சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரது தாய் குழந்தைகள் பெறும் வரை ஸ்டெனோ கிராபராக பணியாற்றி யுள்ளார். 

அவரது தந்தை ரகுநாத பிச்சை ஜிஇசி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினியராக இருந்தவர்.

நான் அலுவலக த்தில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அன்றைய நாள் வேலை பற்றியும், நான் சந்தித்த சவால்கள் பற்றியும் சுந்தரிடம் தெரிவிப்பேன்.

சிறுவனாக இருக்கை யிலேயே அவனுக்கு எனது வேலை பற்றி கேட்க பிடிக்கும். அது தான் அவனை தொழில் நுட்பத்தின் பக்கம் ஈர்த்து ள்ளது என்று நினைக்கிறேன் என ரகுநநாத பிச்சை தெரிவித் துள்ளார்.
சுந்தர் அவரது தம்பி, பெற்றோர் ஆகியோர் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசித்துள்ளனர். சுந்தரும், அவரது தம்பியும் ஹாலில் தூங்கி யுள்ளனர். 
சுந்தர் சிறுவனாக இருக்கையில் அவரது வீட்டில் டிவியோ, காரோ இல்லை. சுந்தர் சிறுவனாக இருக்கையில் எங்கு சென்றாலும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். 

அப்போது அவரது வீட்டில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மட்டுமே இருந்துள்ளது. அந்த ஸ்கூட்டரில் நான்கு பேரும் பயணித் துள்ளனர்.
சுந்தருக்கு 12 வயது இருக்கையில் தான் அவர்களின் வீட்டில் தொலைபேசி வாங்கி யுள்ளனர். எந்த நம்பரை டயல் செய்தாலும் அதை அவரின் நினைவில் வைத்துள்ளார்.
Tags: