உங்கள் முடி இப்படி இருந்தால் மாரடைப்பு ஏற்படுமாம் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016உங்கள் முடி இப்படி இருந்தால் மாரடைப்பு ஏற்படுமாம் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
பழுப்பு நிறத்தில் உள்ள தலை முடிக்கும் மாரடைப்பு க்கு நெருங்கிய தொடர்பு உள்ளதென ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. 
எகிப்து நாட்டில் உள்ள பல்கலை கழக பேராசியர்கள் நடத்திய ஆய்வில் பழுப்பு நிறத் தலைமுடி ஏற்படும் போது மாரடைப்பு ஏற்படுவ தற்கான வாய்ப்பு களும் அதிகரிப்ப தாக கண்டறி யப்பட் டுள்ளது.

டிஎன்ஏ குறைபாடு, மன அழுத்தம், உடலுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக் காதது, புகைப் பிடித்தல் ஹார்மோன் மாற்றம், பரம்பரை பாதிப்பு போன்ற வற்றினால் செல்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுவ தால் தலை முடியும் பாதிக்கப் படுகிறது.


தலை முடியின் நிறமானது பழுப்பாக மாறும் போது நமது இதயத்தில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்பு களும் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளதென கண்டறியப் பட்டுள்ளது.

இதனால் எப்போது வேண்டு மானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என இந்த ஆய்வின் மூலமாக எச்சரிக்கப் பட்டுள்ளது.  மாரடைப்பு பற்றிய ஒரு விழிப்புணர்வு தகவல்கள். அனைவரு க்கும் பகிருங்கள்
நமது உடலில் ஓய் வில்லாமல் கடிகாரம் போல் இயங்கும் உறுப்புக் களில் இதயமும் ஒன்று. இவ் இதய த்தைத் தாக்கும் மாரடைப் பானது (Heart Attack) உயிரைப் பறிக்கக் கூடிய அபாய கரமான நோயாகும்.

இவ் ஆக்கத்தில் நாம் மாரடைப்பு ஏன் ஏற்படுகின்றது? 

மாரடைப் பிற்கான அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மாரடைப்பின் பின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றி சுருக்க மாக ஆராய வுள்ளோம்.

மாரடைப்பு என்றால் என்ன?

இதயத் தசைக்கான ஒட்சிசன் நிறைந்த குருதியை முடியுரு நாடிகள் வழங்கு கின்றன. முடியுரு நாடிகள் ஏற்படும் கொழுப்புப் படிவு களாலும் அக்கொழுப்புப் படிவுகளில் ஏற்படும்

வெடிப்பு களில் குருதிக் கட்டிகள் படிவதாலும் முடியுரு நாடிக் குழாய்கள் முற்றாக அடைக்கப் படும் போது இதயத் தசைக் கான ஒட்சிசன் நிறைந்த குருதி இல்லாது போகிறது.


இதனால் இதயத் தசை இறப்படை கின்றது. இதுவே மாரடைப்பு ஆகும். இதன் போது இதயத் துடிப்பின் போது சுருங்கி விரியும் செயற்பாடு பாதிப்படை கின்றது. 

இதயத் தசையின் இறப்படையும் பகுதியின் அளவு கூடும் போது இதயத் தொழிற்பாடு குறை வடைந்து இதயப் பலவீனம் ஏற்படு கின்றது. இதனால் இறப்பும் ஏற்படலாம்.

மாரடைப்புக் கான அறிகுறிகள் என்ன?

இடது பக்க அல்லது நடுநெஞ்சில் ஏற்படும் இறுக் கிப்பிடிப்பது போன்ற நெஞ்சுவலி நெஞ்சு வலியுடன் தாடைகள் இறுகுதல் அல்லது தோற் பட்டையில் ஏற்படும் நோ
தோல் தொல்லையும் அதற்கான காரணமும்  !
நெஞ்சு வலியுடன் வியர்த்தல், வாந்தி எடுத்தல் மூச்சு விடச் சிரமம், தலை சுற்றுதல், மயக்கம் நெஞ்சு பட படப்பு போன்றன ஏற்படல் நடந்து செல்லும் போது அல்லது பாரமான வேலை செய்யும் போது திடீரென ஏற்படும் நெஞ்சுநோ நடுநெஞ்சில் ஏற்படும் எரிவு அல்லது மேல் வயிற்று நோ. 

இது வயிற்றுக் கோளாற் றுடன் சம்பந்த மான தாக இருக்கலாம் என அநேகமான நோயாளிகள் புறக்கணிப் பதுண்டு.


மேற்கூறிய அறிகுறி களின்றியும் மாரடைப்பு ஏற்படலாம் இது (Silent myocardial infarction) பொதுவாக நீரிழிவு நோயாளி களில் ஏற்படும். அதை விட சில நோயாளிகள் நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் தசை நோவை தவறாக மாரடைப்பு என்று எண்ணி வைத்தியர் உதவியை நாடு வதும் உண்டு.

மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும் காரணங்கள் எவை?

மாரடைப்புக் கான சரியான காரணங் களைத் தெளிவாக அறிந்து கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்ப த்தைக் குறைக்கலாம். இக்காரண ங்கள் இரு வகையா னவை

1) மாற்ற முடியாத காரணங்கள்.

அதாவது இவை இயற்கை யான காரணங்கள். இவை பற்றி நாம் தெரிந்து கொண்டாலும் கூட மாரடைப்பு ஏற் படுவதை எம்மால் தவிர்க்க முடியாது.

ஆண்கள்

வயதானவர்கள் (65 வயது)

இதய நோயால் பாதிக்கப் பட்ட குடும்ப உறுப் பினர்களைக் கொண்ட வர்கள் இவர்களு க்கு சாதாரண மான ஒருவரை விட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

2) மாற்றக் கூடிய காரணங்கள்

இவற்றை நாம் கட்டுப் பாட்டில் வைத்தி ருப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்க லாம்.

நீரிழிவுநோய் :


இவர்களுக்கு மற்றவர் களுடன் ஒப் பிடும் போது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம். இவர்கள் மருந்து களை சரியான அளவில் ஒழுங்காகப் பாவிப்ப தாலும் உணவுக் கட்டுப் பாட்டை மேற் கொள்வ தாலும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக் கலாம்.
பாதம் மரத்துபோனால் எந்த நோயின் அறிகுறி? 
அதிகரித்த கொழுப்பின் அளவு இரத்த த்தின் கொழுப் பின் அளவு மரபு வழியா கவும் உணவுப் பழக்கங் களில் கவ னம் செலுத்தாமை யினாலும் தைரொயிட்.


சிறுநீரகக் கோளாறு கள் போன்ற நோய்க ளாலும் மதுப் பழக்கத் தாலும் அதிகரிக் கின்றது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக் கின்றது.

அதிகரித்த கொழுப்பின் அளவு உள்ளவர்கள் சரியான உணவுப் பழக்க வழக்கம், உடற் பயிற்சி மருந்துகள் உட்கொள் வதன் மூலம் மாரடைப்பைக் குறை க்கலாம்.

அதிகரித்த இரத்த அழுத்தம்:- 

சரியான மருந்துகள் உட்கொள்ளல், உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டு, புகைத் தல் மற்றும் மதுப் பாவனையை நிறுத்துதல் மூலம் அதிகரித்த இரத்த அழுத்த த்தைக் கட்டுப் பாட்டாக வைத்திருந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக் கலாம்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
அளவுக் கதிகமான மதுபாவனை, புகைப் பிடித்தல் சாதாரண ஒருவரை விட இவர்களு க்கு இரத்த அழுத்தம் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். புகைத்தல், மது பாவனையை நிறுத்துதல் மூலம் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக் கலாம்.

மன அழுத்தம் :- 

மன அழுத்தம் உள்ளவர்கள் தியானம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட யோகாப் பயிற்சி களை மேற்கொள் வதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

அதிக உடற்பருமன்:- 

எப்போதும் உடல் எடையைக் குறைத்து வைத்தி ருப்பது மாரடைப்பு மட்டு மல்லாது வேறு உடல் நலப் பிரச்சினை களில் இருந்தும் நம்மைக் காப் பாற்றும்.


இதனால் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கு நீரிழிவு அதிகரித்த இரத்த அழுத்தம், அதிகரித்த கொழுப்பு உள்ளதா என ஆண்டு தோறும் பரிசோதித்துப் பார்ப்பதன் மூலம் கண்டறியப் படாத நோய் களினால் ஏற்படும் மாரடைப்பு வீதத்தைக் குறைக்கலாம். 

மாரடைப்பு ஏற்ப்பட் டுள்ளதை வைத்தியர் எவ்வாறு இனங் காணுவார்?

நோயாளி யின் அறிகுறிகள் பூரணநோய் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலமும் நோயாளியைப் பரிசோதிப் பதன் மூலமும்.

ECG எனப்படும் இருதய வரைபுப் பட்டி:- 

இது மாரடைப்பின் தொடக்கத்தில் மாற்றங்கள் எதனையும் காட் டாது தொடர்ச்சி யாக எடுக்கப்படும் போது மாறுதல் களைக் காட்டுவதாக இருக்கலாம்.
கழுத்தெலும்பு அழற்சிக்கான அறி குறிகள்  !
பொதுவாக மாரடைப்பு ஏற்படும் போது ECG இல் உள்ள மாற்றங் களைக் கொண்டே ஆரம்ப சிகிச்சை முறை தீர்மானிக் கப்படும்.

இரத்தப் பரிசோதனைகள் :- 

குறிப்பாக ரொபோனின் -((Troponin-l) இது மாரடைப்பு ஏற்பட்டு 4-6 மணித் தியாலங் களில் அதிகரிக்கும். எக்கோ (Echo) பரிசோதனை இதன் மூலம் மாரடைப் பின் போது இருதயத் தசைகள் பலவீனமடைந் துள்ளதா அல்லது இருதயத் தொழிற்பாடு குறைவடைந் துள்ளதா என அறிந்து கொள்ளலாம்.ETT எனப்படும் (Treadmill test) இது மாரடைப் பின் பின்னரும் மாரடைப்பு ஏற்படும் முன்னரும் கூட நடக்கும் போது ECG இல் ஏற்படும் மாற்றங் களை வைத்து மேலதிக பரிசோதனை யான அஞ்சியோகிராம் பரிசோத னையைத் (Coronary Angiogram) தீர்மானிப் பதற்கு உதவியாக இருக்கும்.

அஞ்சியோகிராம் (Coronary Angiogram) பரிசோதனை இருதயத் திற்கான இரத்தக் குழாய் களில் ஏற்படும் அடைப்பு வீதத்தையும் அடைப்பு காணப்படும் குருதிக் குழாய் களையும் இனங்கண்டு கொண்டு சிகிச்சை முறையை (Angioplasty/ CABG) தீர்மானிப் பதற்கு உதவும்.

வைத்தியர் மாரடைப் பின் போது உங்களுக்கு வழங்கும் சிகிச்சை முறைகள் எவை?

இரத்தம் உறைவ தனைக் தவிர்க்கக் கூடிய மருந்து கள் வழங்கல்.

உ-ம் – அஸ்பிரின் (ASprin), குளோ பிடோகிறல் (Clopidogrel)

நெஞ்சுவலியைக் குறைக்கும் மருந்துகள் வழங்கல்.

உ-ம் -– ISMN, GTN

இரத்த அழுத்தத்தை சீராக்கும் மருந்து களும் இருதயத் துடிப்பைக் குறைத்து இருதயத் திற்கான இரத்த வழங்கலை அதிகரிக்கும் மருந்து களும் வழங்கல்.
கால் நரம்பு முடிச்சு என்றால் என்ன?
உ-ம் – கப்ரோபிறில் (Captopril), அடினலோல் (Atenolel)

ஒட்சிசன் இருதயப் பலவீனம் ஏற்பட்ட வர்களுக்கு பெரிதும் உதவும்.

இரத்த குழாய்களில் உள்ள இரத்தக் கட்டிகளைக் கரைக்கும் (Thromolyis) மருந்து களை வழங்கல்  உ-ம் – ஸ்ரெப்ரோ கைனேஸ் (Streptokainese), RTA இதனால் இரத் தோட்டத்தை இயத்தசை மீளப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.


நோயாளி ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு எவ்வளவு குறுகியநேர இடை வெளியில் சிகிச்சை பெற வருகி ன்றாரோ அவ்வளவு இம்மருந்துகள் பயன் படுத்தக் கூடியதா கவும் 12 மணித்தி யாலங்களு க்குள் பலனைத் தருவ தாகவும் இருக்கும்.

ஆரம்ப சிகிச்சை யைத் தொடர்ந்து அன்சி யோகி ராம் பரிசோதனை யின் பின்னர் அடைப்பு களுள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் ஸ்ரெனட் (stent), இடப் படுதலோ (Angioplasty) இருதய சத்திர சிகிச்சை (ABG) செய்யப் படுவதாலோ மீள் குருதி யோட்டம் பெறப்ப டும்.

இதனால் இருதயத் தசை களுக்கு ஒட்சிசன் நிறைந்த குருதி வழங் கப்படும். இருதயத் தசை இறப்படைதல் தடுக் கப்படும். இதனால் மரணம் தவிர்க்கப் படும்.

மாரடைப்பின் பின்னர் எமது வாழ்க்கை முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் என்ன?

உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம்

உணவில் கலோரி குறைந்த உணவு களான காய்கறிகள், விற்றமின்கள், கனியுப்புக்கள், நார்த் தன்மை நிறைந்த உணவுகள், பழங்கள் என்பவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்புச் சத்து குறைந்த தாவர எண்ணைய், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், ஆடை நீக்கிய பால் என்ப வற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சட்கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, நண்டு, இறால் கணவாய், பெரிய மின்கள் என்பவ ற்றைத் தவிர்க்க வேண்டும்.மருந்து களை சரியான அளவில் சரியான முறையில் பாவித்தலும் தவறாது கிளினிக் செல்வதன் மூலம் இரத்த அழுத்தம், இரத்தப் பரிசோத னைகளை கிரமமாகப் பார்த்துக் கொள்வதும் அத்தியா வசியம்.

மாரடைப் பினால் ஏற்படும் உடல் உளபாதிப்பை குடும்ப அங்கத்த வர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். சிலர் மீதமுள்ள ஆயுள் முழுவதும் பிறரில் தங்கி வாழும் நிலைமை ஏற்படும் போது ஏற்படும் மனச் சோர்வையும்

மன அழுத் தத்தையும் நீக்க வைத்தியரின் உதவியையோ அல்லது உளவள ஆலோச கர்களின் ஆலோசனை யையோ நாடலாம். உடற் பயிற்சி செய்வது மாரடைப் பினால் ஏற்படும் இருதயப் பலவீன த்தின் அளவைப் பொறுத்து தீர்மானிக் கப்படும்.

சாதாரண மாக நோயாளி தனக்கு களைப்பு ஏற்படாத வகையில் ஆரம்பித்து படிப்படி யாக வேக த்தையும் நேரத் தையும் அதிகரித்து ஒருநாளில் 20-30 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்வதை வழக்க த்தில் ஏற்படுத்த வேண்டும்.
இரவு தாமதமாக உணவு உட்கொண்டால்
இள வயதில் மாரடைப்பு ஏற்பட்ட வர்கள் சிக்கல்கள் அற்ற மாரடைப் பாயின் 4 கிழமை களின் பின்னர் உட லுறவை மேற்கொள் ளலாம். மது பாவனை யையும் புகைப் பிடித்தலையும் நிறுத் திக் கொள்ள வேண்டும்.

உடற் பருமனை உயரத்திற்கு ஏற்ப குறைக்க வேண்டும்.

இருதய சத்திர சிகிச்சை அல்லது ஸ்ரென்ட் (Stent) வைக்கத் தேவையா னவர்கள். தமக்கு உரிய சிகிச்சை முறையை உடடியாக தீர்மானி ப்பதன் மூலம் மாரடைப் பின் பின்னான மரணத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் முடி இப்படி இருந்தால் மாரடைப்பு ஏற்படுமாம் ! உங்கள் முடி இப்படி இருந்தால் மாரடைப்பு ஏற்படுமாம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 5/05/2017 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚