தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் அதற்கான காரணமும் !

ஒரு மனிதனின் அழகு ஆரம்பமாவது அவனது தோலிலிருந்து தான். சிவப்பு கருப்பு என்பதெல்லாம் தோலின் நன்கொடையே.
தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் அதற்கான காரணமும் !
ஆனால் மனிதர்களில் 80 சதவிகிதம் பேருக்கு... வெளியே தெரியாமல் பல தோல் தொல்லைகள் இருக்கின்றன. அதற்கான காரணங்களையும்... அவற்றை எப்படி விரட்டலாம் என்றும் பார்ப்போம்.

தோல் பகுதியில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

தோலில் பொதுவாக பலருக்கு வெயில் காலத்தில் வருவது வியர்க்குரு ஆகும். இது தவிர சொறி, சிரங்கு, காளாஞ் சகப்படை என்கின்ற சோரியாஸிஸ், வெண் புள்ளிகள் என்றழைக்கப்படுகிற  லூக்கோ டெர்மா,

கரப்பான், காணாக்கடி, தோல் பகுதியில் வரும் காளான் தொற்று, பெண்களுக்கு வருகிற முகப்பரு, பாலுண்ணிகள், மேக வெட்டு போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

காளான் தொற்று என்கிறீர்களே.... அது எதனால் தொற்றுகிறது?

இன்றைய நாளில் பலருக்கு தோல் பகுதியில் இந்த காளான் தொற்று இருக்கிறது. தோல் பகுதியில் வட்ட வடிவத்தில் இந்த காளான் தொற்று பாதிப்பு இருக்கும். 

இந்த பாதிப்பானது உடம்பில் தொடைப் பகுதி, அக்குள் பக்கம், இடுப்புப் பகுதி, போன்ற இடங்களில் ஏற்படும். 

பெரும்பாலும் வெளியே தெரியாத பகுதிகளில் தான் இந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் இதற்கு பொறுப்புடன் பலர் வைத்தியம் பார்த்துக் கொள்வதில்லை.

ஆனால் அவர்கள் அறியாமலே பொது இடத்தில்கூட சொரிவதற்காக கை அந்த இடங்களுக்கு செல்வதை இவர்களால் தடுக்க முடியாது. எனவே இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. 

பாதிப்பானது சுத்தத்தை பராமரிக்காமை, குளித்து முடித்த பின்னர் சரியாக துடைக்காமை, சுத்தமற்ற தண்ணீரில் புழங்குவது, ஈரமான உள்ளாடைகளை உடுத்துவது போன்றவை தான் காரணமாகும். 

இதற்கு சித்த மருத்துவத்தில் சிறந்த உள், வெளி மருந்துகள் உள்ளன.
நிறைய பேர்களுக்கு தேமல் இருக்க காரணம் என்ன? தேமலை நிரந்தரமாக போக்க முடியாதா?

சுய பராமரிப்பின்மை, ஈரமான ஆடைகளை உடுத்துவது, தண்ணீரில் உள்ள மாசு, மற்றவர்களின் ஆடைகளை உடுத்துவது, அதிக அளவில் வியர்வை வழிவது... போன்ற காரணங்களால் தேமல் வருகிறது.

இது தவிர நெருக்கமாக பழகும் சிலருக்கு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவலாம். 

இதற்கு ஆங்கில மருந்துக் கடைகளுக்கு சென்று... தாங்களாகவே மருந்து கேட்டு தடவும் பழக்கம் பலருக்கு உள்ளது, 

இதனால் தற்காலிகமான தேமல் மறைந்து மீண்டும் மீண்டும் வரக் கூடிய நிலையில் தான் உள்ளது. 

தேமலுக்கு சுய சுத்தத்தை பராமரிப்பதுடன் உயிர் சத்துள்ள உணவுகளை உண்பதும் அவசியம் ஆகும். 

தேமலை போக்குவதற்கு சீமை அகத்தி இலை சாறினை பக்குவம் செய்து நமது சித்த மருத்துவர்கள் கொடுத்து நிரந்தரமாக குணப்படுத்தி னார்கள். 

மீண்டும் தேமல் வராமல் செய்கிற நல்ல சித்த மருந்துகள் உள்ளன. 

இன்று கடையில் விற்கப்படுகிற வெளிப்பூச்சு ஆங்கில மருந்துகள் எரிச்சலையும் நமைச்சலையும் உண்டாக்கி புண்ணாக்கி, மேலும் பல தொந்தரவு தரும் வகையில் ஸ்டீராய்டு மருந்துகளாகத் தான் உள்ளன.

கரப்பான், பாலுண்ணிகள், காணாக்கடி போன்றவை எதனால் ஏற்படுகிறது - இதற்கு என்ன சிகிச்சை?
கரப்பான் என்பது ஆறு வகைகளில் ஏற்படும் தோல் பாதிப்பாகும். சாதாரணமாக வியர்க்குரு போல இது ஆரம்பிக்கும். 

பின்னர் அந்த இடத்தை சுற்றிலும் கரு வண்ணமாக தோல் நிறம் மாறும். சிறிது அரிப்பு ஏற்படும். 

பின்னர் கரப்பான் பகுதியி லிருந்து நீர் வரும். அந்த நீர் மற்ற எந்த இடத்தில் படுகிறதோ அங்கெல்லாம் கரப்பான் வரும். 

பெரும்பாலும் குழந்தைகளுக்குத் தான் இந்த பாதிப்பானது வரும். காணாக்கடி என்பது கால மாற்றத்திற்கேற்ப தோலில் ஏற்படும் பாதிப்பாகும். 

பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் இந்த காணாக்கடி அதிகரிக்கும். 

சுய சுத்தத்தை பராமரிக்காமை, சில வகை பூச்சிகள் கடிப்பதினால் இந்த காணாக்கடி பாதிப்பு ஏற்படும். கிராமப் புறங்களில் இப்பாதிப்பு அதிகமாக தென்படும்.

பொதுவாக தண்ணீர், மரம், செடி, கொடிகளில் இருக்கிற கண்ணிற்கு தெரியாக பூச்சிகள் கடிப்பதனால் வருகிற  

இந்த பாதிப்பினை நிரந்தரமாக அகற்றும் அற்புதமான மருந்துகளை நமது சித்தர் பெருமக்கள் சொல்லி யுள்ளார்கள்.

பாலுண்ணி என்பது - முகம் கழுத்துப் பகுதியில் சிவப்பு வண்ணத்தில் கொப்புளம் போல தோன்றும். இதனையும் சித்த மருந்தால் குணப்படுத்த முடியும். 

பொதுவாக கரப்பான், பாலுண்ணி, காணாக்கடி போன்ற தோல் தொந்தரவுகள் உள்ளவர்கள் கத்திரிக்காய், மீன், கருவாடு, நல்ல எண்ணெய், மது வகைகள், தக்காளி போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.  

இப்படி நாங்கள் சொல்வதற்கு காரணம் - இந்த வகையான உணவுகள் ஒவ்வாமையை உண்டாக்கி தோல் தொல்லைகளை தூண்டும் சக்தி பெற்றவை என்பதால் தான்.
பல பெண்களின் முகத்தில் பருக்கள் கூட்டணி நடத்துகின்றதே... இதனை வரவிடாமல் தடுக்க முடியாதா?

மனிதனால் முடியாதது எது உள்ளது. நிச்சயமாக இந்த கால பெண்கள் நினைத்தால் நிச்சயம் முகப்பருக்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் பால் சுரப்பிகள் எல்லாம் துரித கதியில் பணி புரிவதால் தான் இத்தகைய பாதிப்புகள் எல்லாம் முகம் காட்டுகின்றன.
HDL நல்ல கொழுப்பு ஏன்?
எப்படா நுழையலாம் என்று திருடன் காத்திருக்கின்ற போது.... அதற்கு தோதாக, வீட்டை பூட்டாமலே திறந்து வைத்து விட்டு ஒருத்தி வெளியூர் போனாளாம். 

அந்த கதை போலத் தான் பல இளம் பெண்கள் நடந்து கொள்கிறார்கள்.

ஐஸ்கிரீம், கேக் வகைகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பாஸ்ட் புட் என்கின்ற வேஷ்ட் புட்களை வயிறு முட்ட உண்பது, 

கொழுப்பு அதிகம் உள்ள பொருட்களை சதா சர்வகாலமும் திண்பது இவை தான் முகப்பரு வருவதற்கு காரணமாகும். 

முகத்தில் இருக்கிற கொழுப்பு வெளியேறுவதற் காக ஏற்படுவது தான் முகப் பருக்கள். அதற்காக இன்றைய நாளில் பெண்கள் ப்யூட்டி பார்லர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். 
அவர்களும் பல வழிகளில் முகப்பருவை கிள்ளியும் நசுக்கியும் ஏதேதோ செய்கிறார்கள். 

கடைசியில் மிஞ்சுவது வடுக்களும், கரும்புள்ளிகளும் தான். எனவே உணவு கட்டுப்பாடு, கொழுப்புள்ள பொருட்களை தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் முகப்பருக்கள் வராமலே தடுக்கலாம்.

முகப்பருக்கள் வந்தவர்களுக்கு தானாக உதிர செய்கிற உள்ளுக்குள் சாப்பிடுகிற சித்த மருந்துகள் உள்ளன.

காளாஞ் சகப்படை (சோரியாஸிஸ்) எதனால் உண்டாகிறது? அதற்கு என்ன சிகிச்சை?
தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் அதற்கான காரணமும் !
சோரியாஸிஸ் என்று ஆங்கில மருத்துவத்தில் அழைக்கப்படுவது தமிழ் மருத்துவர் களால் செதில் உதிர்தல் நோய் அல்லது காளாஞ் சகபடை என்றழைக்கப்படுகிறது.

சித்தர்கள் கஜசருமக்குட்டம், யானைச் சொறி, செம்படை என்றும் இதனை பெயரிட்டுள்ளார்கள். 

யூகி முனிவர் காளாஞ்சக வாதம் என்று இதனை கண்டறிந்து மூட்டுப்பகுதியில் வலி மற்றும்  வீக்கத்துடன் தோலில் வட்ட வட்டமாக காசு போல செந்நிறத்தில் இந்த படை ஏற்படும் என்று கண்டறிந்தார்.

மற்றவர்களுக்கு பரவாத குணத்தை கொண்ட இந்த தோல் பாதிப்பு தலை முதல் பாதம் வரை பரவி மிகுந்த கஷ்டத்தை கொடுக்கும்.  பார்ப்பதற்கு அருவருப்பை தருவதுடன் மிகுந்த அரிப்பையும் கொடுக்கும். 
இதனால் காளாஞ்சகப் படை வந்தவர்கள் சொரிந்து சொரிந்து படையிலிருந்து இரத்தம் வடியும். மன பாதிப்புள்ளவர் களுக்கும் இந்த பாதிப்பு வரலாம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். 
உலக அளவில் சோரியாஸிஸ் நோய்க்கு மிகச் சரியான மருந்து இல்லை, அப்படியே வெவ்வேறு மருத்துவர்கள் மருந்துகளை வழங்கினாலும் தற்காலிக நிவாரணியாகவே இம்மருந்துகள் உள்ளன.
சித்த மருத்துவத்தில் மீண்டும் வராமல் தடுக்கிற மிகச் சிறந்த மருந்துகளை சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

இந்த சித்த மருந்துகள் எல்லாம் அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு தயாரிக்கப் படுவதால் இவற்றினால் எந்த பக்க விளைவுகளும் வருவதில்லை. 

இந்த மருந்துகளில் உள்ளுக்குள் சாப்பிடும் மருந்து வெளிப்பூச்சு மருந்துகள் என்று சில வகைகள் உள்ளன. 

இவற்றை உபயோகிக்கிற போது - சில உணவு கட்டுப் பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings