மது உடலானது கோடிக்கணக்கான கலங்களால் ஆனாது. மனிதனது மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் அவ்வாறே. உதாரணமாக 200 வகையான சிறப்பான பணிகளை
ஸ்டெம் செல் என்றால் என்ன? அதன் வகைகள் !
ஆற்றும் கலங்கள் மனித உடலில் உள்ளன. சருமக் கலங்கள், எலும்புக் கலங்கள், நரம்புக் கலங்கள், ஈரல் கலங்கள், நோயெதிர்புக் கலங்கள் எனப் பல உதாரணங் களைச் சொல்லலாம்.

இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான சிறப்பியல்புகள் உள்ளன. அவ்வாறே தனித் தனியான விசேட பணிகளும் உள்ளன. நரம்புகக் கலங்கள் செய்திகளைக் கடத்துகின்றன.

நோயெதிர்புக் கலங்கள் நோயைக் கொண்டு வரும் கிருமிகளை அழிக்கின்றன. அதே போல சூலகத்தில் உள்ள கலங்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. 

ஸ்டெம் செல்கள் வேறொரு விதத்தில் விதந்து குறிப்பிட வேண்டிய கலங்கள் ஆகும். இவை நிரந்தரமாக தனியொரு பணிக்கானவை அல்ல.
ஆண்களின் விரல் சொல்லும் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வர்கள் என்று !
ஆனால் பல்வேறு வகைப்பட்ட கலங்களாக வேறு பாடடைந்து பெருகும் ஆற்றல் பெற்றவை. 

அதாவது இவை ஈரல் கலங்களாகவோ, எலும்புக் கலங்களாகவே அல்லது வேறெந்தக் கலங்களாகவும் மாற்ற முற்று பெருகக் கூடியவை.

இன்றைய மருத்துவ உலகில் அதிகம் ஆராயப்படுகின்ற விசயம் ஸ்டெம் செல் ஆகும். 

இது உயிரினங்களில் உள்ள மிகநுண்ணிய மூலசெல்லாகும். இந்த ஸ்டெம் செல்ஸ் பல்கிப் பெருகும் குணமுடையது. அது உடலின் எந்த ஒரு முதிர்ந்த செல்லாகவும் மாறக்கூடியது.
ஸ்டெம் செல் என்றால் என்ன? அதன் வகைகள் !
இதில் பலவகை உள்ளது. 

1. எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) 

2. அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (adult stem cells) 

3. கார்ட்பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cordblood stem cells) 

எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) மனித சினை முட்டையுடன் Ovum விந்து Sperm இனைந்து கருவுற்று, மூன்றாவது நாள் ஒற்றைசெல் கரு Zycote நிலையி லிருந்து, 

நான்காவது நாள் Totipotent தன்மையுடன் உள்ள Morula என்ற பிரிக்கப் படாத (undifferentiated) 16 செல் என்ற நிலையை அடையும். 

இந்த நிலையில் இது மேலும் பல எம்பிரயோனிக் செல்களை உருவாக்க இயலும். பின்பு ஐந்தாம் நாள் Blastocyst என்ற 64 செல்லிருந்து 150 செல் வரையிலுள்ள நிலையை அடையும், அப்போது அது மூன்று பகுதிகளாக (differentiate) பிரியும்,

அதில் வெளிப் பகுதியான trophoblast தொப்புள் கொடியுடன் (umbilical cord) சேர்ந்த (Placenta) நஞ்சுக் கொடியாகவும், தலைப்பகுதி போன்ற Embryoblast 

மற்ற அனைத்து வகை செல்களை inner cell mass உள்ளடக்கிய தாகவும் இருக்கும், உள்ளிருக்கும் Blastocoele என்ற காலி இடத்தில் கரு வளரும்.

இந்த வகை ஸ்டெம் செல்ஸ், உடலில் உள்ள அனைத்து செல்களு க்கும் மூல ஆதாரம் blueprint போன்று இருப்பதால் இதனை பயன்படுத்தி அனைத்து வகை (pluripotent) செல்களையும் உருவாக்கலாம். 
ஸ்டெம் செல் என்றால் என்ன? அதன் வகைகள் !
இந்த எம்பிரயோனிக் செல் Blastocyst என்ற நிலையி லிருந்து Gastrula என்ற நிலையை அடையும். 
15 வயதில் திருமணம், பாலியில் கொடுமை விலை மாதுவின் கதை !
இது Ectoderm, Mesoderm, Endoderm மற்றும் Germ cell உள்ளடக்கியது. இது மேலும் 220 விதமான செல் தொகுதியாக பிரிந்து இறுதியில் முதிர்ந்த Adult செல்களாக மாறும். 

இனி இந்த எம்பிரயோ, நஞ்சுக் கொடியுடன் (Placenta) கர்ப்பப் பையில் ஒட்டிக் கொண்டு வளரத் தொடங்கும். இனி இந்த எம்பிரயோ 2 மாதம் வளர்ந்ததின் பிறகு பேடஸ் (Fetus) என்று கூறலாம். 

இந்த Morula/Blastocyst நிலையில் உள்ள எம்பிரயோவில் உள்ள எந்த ஒரு செல்லும் பல்கிப்பெருகி உடலில் உள்ள மற்ற செல் தொகுதியாக மாறக்கூடியது.

ஆனால், இந்த எம்பிரயோனிக் ஸ்டெம் செல் பிரித்தெடுக் கப்படும் போது அந்த கரு அழிந்து விடக்கூடியதாக இருப்பதால் 

இந்த வகையான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை தடுக்கப்பட வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.

அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (Adult Stem Cells) 
ஸ்டெம் செல் என்றால் என்ன? அதன் வகைகள் !
இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான Multipotent செல்களாக மாறக்கூடியது. இது somatic stem cells என்றும் அழைக்கப்படும். 

தற்போது மனித தோல் மற்றும் முடியிலிருந்து கூட இந்த வகை ஸ்டெம் செல்லை தேர்ந்தெடுக்கி றார்கள்.

இந்த வகை ஸ்டெம் செல்லிலிருந்து ஆண், பெண் பாலிணத்திர்குறிய விந்து Sperm மற்றும் கருமுட்டை Ovum செல்களை (Germ cells) உருவாக்க இயலாது. 

இவ்வகை செல்லை சில மாற்றங்களை ஏற்படுத்தி எம்பிரயோனிக் ஸ்டெம் செல் போன்றதாக Induced Pluripotent Stem Cells (iPSCs) மாற்ற முடியும்.

கார்ட் பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cord blood stem cells) Cord blood-derived embryonic-like stem cells (CBEs) 

இந்த வகை ஸ்டெம் செல்ஸ், குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தி லிருந்து எடுக்கப் படுகின்ற ஸ்டெம் செல் ஆகும். 

தொப்புள்கொடி இரத்தத்தில் உள்ள CD34+, CD38- வகை செல்கள் பிரிக்கப்படாத (undifferentiated) செல்களாகும்.

இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான வியாதிகளுக்கு எலும்பு மஞ்சை (bone marrow) மாற்று சிகிச்சையை போல பேருதவியாக இருக்கும்.
எம்பிரயோனிக் ஸ்டெம் செல்


தற்போது உலகமெங்கிலும் இவ்வித சிகிச்சைக்கு உதவியாக இருக்க குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் 

தொப்புள் கொடி இரத்தத்தை எடுத்து அதற்கான தொப்புள்கொடி இரத்த வங்கியில் சேமித்து வைக்கிறார்கள்.

இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கோ அல்லது மற்றவர் களுக்கோ ஏற்படும் வியாதியைக் குணப்படுத்தவும் அல்லது அவர்களின் பழுதுபட்ட உறுப்புகளின் குறைபாட்டை சரிசெய்யவும் பயன்படும்.
இந்த ஸ்டெம் செல் மருத்துவத்தில் Adult Stem cell மற்றும் Cord blood stem cell சிறந்ததாக இருந்தாலும் இவற்றைக் கொண்டு 

மனித உயிர்செல் Human Cloning உருவாக்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய வண் செயலாகும்.