விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3D வீடுகள்... நாசா !

செவ்வாய் கிரகத்தை ஆராயும் முயற்சியில் நீண்ட காலமாக தீவிரமாகவே ஈடுபட்டு வரும் நாசா, தனது ஆய்வின் அடுத்த கட்டமாக விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் பிரிண்டிங் தொழில் நுட்பத்தில் தங்குமிடம் ஒன்றை அமைக்க வுள்ளது.  
விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3D வீடுகள்... நாசா !

மனிதனின் மண்டை ஓடு முதல் பீட்சா தயாரிப்பது வரை பல்வேறு சாதனை களை 3D பிரிண்டிங் தொழில் நுட்பம் நிகழ்த்தி வரும் நிலையில்

இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களுக்காக தங்குமிடம் ஒன்றை நாசா அமைக்கவுள்ளது.

கூடு போன்று தோற்றம் கொண்ட இந்த தங்குமிடத்தில் மொத்தம் 3 தளங்கள் இருக்கும். 3 ஆவது தளம் வெறும் 3 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டது.

2 ஆவது தளம் 29 சதுர மீட்டர் பரப்ப ளவில் இருக்கும் இதில் பணியி டமும் கழிவ றைகளும் இருக்கும், தரைத்தளம் 40 சதுர மீட்டர் அளவு இருக்கும்.

விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3D வீடுகள்... நாசா !

இதில் விண்வெளி வீரர்களு க்கான தங்கும் அறைகள் இருக்கும். மேலும் இந்த 3 தளங்க ளுக்கும் விரைவாக பயணிக்கும் வகையில் ஸ்பைரல் மாடிப் படியும் அமைக்க ப்படும்.

இதற்கான மாதி ரிகள் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் அனுபவம் கொண்ட பிரான்ஸ் கட்டிடக் கலைஞ ர்களால் லண்டனில் தயாரிக்க ப்படவுள்ளது.

தயாரிப்பு பணிகள் முடிந்ததும் கலிபோர்னியாவில் உள்ள பாலை வனத்தில் பரிசோ திக்கப்பட்டு  செவ்வாய் கிரகத்தில் இது நிறுவப் படவுள்ளது.
Tags:
Privacy and cookie settings