முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமு மில்லை என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிவித் துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில் விடுத் துள்ள அறிக்கை யில், 

ஜெ. மரணத்தில் எந்த சந்தேகமுமில்லை


'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் இறப்பு தமிழக மக்கள் மட்டு மின்றி மருத்துவர் களுக்கும் வேதனை தந்த நிகழ்வு. நவீன மருத்துவம் கொடிய நோய் கிருமி தொற்றி லிருந்து முதல்வரை காப்பாற்றி விட்டது என மருத்துவ மனை எதிர் பார்த்திருந்த நிலையில் இருதய செயல்பாடு நிறுத்தம், மருத்து வர்களின் வெற்றியை தட்டிப் பறித்து விட்டது. 

ஜெயலலிதா வின் மரணம் குறித்த வதந்திகள் தேவையற்ற வீண் விவாதங் களை எழுப்பி வருகிறது. இது தன்னலம் மறந்து உழைத்த மருத்துவர் களை மனவேதனை க்கும், ஒரு வித விரக்தி கலந்த சோர்வுக்கும் ஆளாக்கி யுள்ளது. மிகப்பெரிய மருத்துவ வல்லுநர் குழு ஜெயலலிதா விற்கு சிகிச்சை அளித்தது. 


தவிர தமிழக அரசு, மத்திய உள்துறை ஆகியோரின் நேரடி கண்காணி ப்பில் தான் அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. முன்னாள் முதல்வருக்கு அளிக்கப் பட்டது உயர்தர சிகிச்சை என்பது உண்மை. கீழே விழுந்த தால் ஏற்பட்ட காயங்களை மறைத்து ள்ளார்கள் என்பதற்கோ, இறந்த பின் சிகிச்சை அளித்து ள்ளார்கள் என்பதற்கோ துளியும் ஆதார மில்லை. 

இது போன்ற செயலுக்கு 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் துணை போனார்கள் என்பதும் உண்மைக்குப் புறம்பானது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் விஐபிக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயங்குவர்'' என்று செந்தில் தெரிவித் துள்ளார்.