ஆணுக்கு தொப்பை.. பெண்ணுக்கு தொடை !

உழைக்கும் ஆரோக்கியமான மனிதனையும், உழைக்காமல் உடலை வளர்ப்பவர்களையும் பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து விடலாம்.
ஆணுக்கு தொப்பை.. பெண்ணுக்கு தொடை !
உழைப்பாளி களிடம் உபரியான கொழுப்பு இருப்ப தில்லை.  ஆனால், உடலை வளர்ப்பவர் களுக்கு உபரியான கொழுப்பு அதிகமாக இருக்கும்.

நாம் சாப்பிடும் உணவின் கலோரியும், உழைப்பினால் எரிக்கப் படும் கலோரியின் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. 

அப்படியி ல்லாமல் உழைப்பால் கலோரி எரிக்கப் படாத பொழுது உடலில் அது கொழுப்பாக சேமிக்கப் படுகிறது. இப்படி கொழுப்பை உடலில் சேமித்து வைப்ப தற்கும் காரண மிருக்கிறது. 

ஆதிகாலத்தில் இன்றைக்கு உணவு சேமித்து வைப்பது போல் சேமிக்கப் பட வில்லை. அப்போது பஞ்சமும் பட்டினியும் அடிக்கடி ஏற்பட்டன.
அப்படி பட்டினி கிடக்கும் காலங்களில் உயிர் வாழ உடல் இந்த கொழுப்பை எடுத்துக் கொள்ளும். அதற்காக சேமிக்கப் படுவதே இத்தகைய கொழுப்பு. இன்றைக்கு பட்டினி இல்லை. 

பஞ்சமும் இல்லை அதனால் சேமிக்கப் படும் கொழுப்பு செலவாக வழியே யில்லை. உடலுழைப் பும் இல்லாத தால் தொடர்ந்து கொழுப்பு சேகரிக்கப் படுகிறது.

மனித உடலில் கொழுப்பு சேமித்து வைப்பதற்கு என்றே சில இடங்கள் இருக்கின்றன. 
ஆணுக்கு தொப்பை.. பெண்ணுக்கு தொடை !
உடலின் முக்கிய உறுப்பு களுக்கும் அதிகமாக இயங்கும் உறுப்பு களையும் விட்டு விட்டு மற்ற இடங்களில் கொழுப்பு சேமிக்கப் படுகிறது.

மூளை, இதயம், இனப்பெருக்க உறுப்புகள் மனிதனின் முக்கிய உறுப்புகள் பட்டியலில் வருகிறது. 

அதனால் இவற்றின் அருகில் கொழுப்பு சேமிக்க ப்படுவ தில்லை. வயிற்றுப் பகுதி சும்மாதானே இருக்கிறது. அதனால் அங்கு உபரியான கொழுப்பு சேமிக்கப் படுகிறது. 
தோலுக்கு அடியில் கொஞ்சம் கொஞ்ச மாக சேரும் கொழுப்பு தான் பானை வயிறாக தோற்றம் தருகிறது.

தொந்தி, தொப்பை என்று அழைக்கப்படும் பெருத்த வயிறு ஆண்களு க்கு மட்டும் தான். பெண்களு க்கு கிடையாது.

பெண்களு க்கு மூளை, இதயம், இனப்பெருக்க உறுப்புகள் தவிர இன்னொரு முக்கிய மான உறுப்பு கூடுதலாக உள்ளது. அது கர்ப்பப்பை. ஒரு உயிரை உருவாக்கும் உறுப்பு. 

அதன் செயல் திறன் குறைந்து விடக் கூடாது என்பதற்காக இயற்கை பெண்களின் வயிற்றில் கொழுப்பை சேர்த்து வைப்ப தில்லை. 
ஆணுக்கு தொப்பை.. பெண்ணுக்கு தொடை !
கர்ப்பத்தின் போது வயிறு பெருத்தும், அதன் பின் வயிறு சுருங்கியும் இருவேறு வேலைகள் நடை பெறுகின்றன.
கர்ப்பம் என்ற ஒரு காரணத் திற்காகவே பெருத்த வயிறு இல்லாத பெண்கள் நடமாடு கிறார்கள்.

வயிற்றில் உபரிக் கொழுப்பு சேமிக்கப் படா விட்டால் வேறு எங்காவது சேமிக்க வேண்டும். அப்படி இயற்கை பெண்களு க்கு தேர்ந்தெடுத்த இடம் தொடை. 
தாய்மார்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்க !
இதனால் தான் ஒல்லியாக இருக்கும் பெண்களின் தொடை கூட உருண்டு திரண்டு பெரிதாக இருக்கிறது. இப்படி தொடையி லும் ஓரளவே கொழுப்பு சேமிக்கப் படுகிறது. 

அதனையும் மீறி கொழுப்பு சேமிக் கப்பட வேண்டும் என்ற நிலை வரும் போது உடல் பெண்ணின் பின்புறத்தை தேர்ந் தெடுக்கிறது.

பெண்ணின் பின்புறம் பெரிதாக தெரிவதற்கு உபரி கொழுப்பே காரணம். 

பெண்களு க்கு இந்த இரண்டு இடங் களிலும் கொழுப்பு சேமித்து முடித்த பின் மூன்றா வதாக ஒரு இடத்தை இயற்கை தேர்ந்தெடு க்கிறது. 
ஆணுக்கு தொப்பை.. பெண்ணுக்கு தொடை !
அது கைகளின் மேற்புறத்தில் இருக்கும் பின்பகுதி. பல பெண்க ளுக்கு கையும் பெரிதாக தெரிய கொழுப்பே காரணம். இது குழந்தை களுக்கு பால் கொடுக்கும் போது சக்தி தர பயன்படுகிறது.

சரி, ஆணுக்கும் தொடையில் கொழுப்பை சேமித்து வைக்கலாமே ஏன் வயிற்றில் என்று கேட்கலாம். அதற்கு மரபணு தான் காரணம். ஆதிகால ஆண் வேட்டை யாடினான். 
அப்போது வேகமாக விலங்குகளை துரத்தி செல்ல அல்லது துரத்தும் விலங்குக ளிடமிருந்து தப்பித்து ஓட கால்கள் மிக அவசியமாக இருந்தது. 

தொடையில் கொழுப்பை சேர்த்தால் ஓட முடியாது. அதனால் ஆண்களு க்கு வயிற்றில் கொழுப்பு சேமிக்கப் பட்டது.

ஆதிகால பெண்கள் குகையில் குழந்தை களை வளர்ப்பதில் ஈடுபட்டி ருந்தனர். அவர்கள் ஓட வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தனர்.
ஆணுக்கு தொப்பை.. பெண்ணுக்கு தொடை !
அதோடு அவர்கள் தொடர்ந்து கர்ப்பம் அடைவதும் குழந்தை களை பெற்றெடுப் பதுமாக இருந்தனர். அதனால் வயிற்றில் கொழுப்பை சேமிக்காமல் தொடையில் சேமித்து வைக்கப் பட்டது.

அதோடு குழந்தை பிறப்புக்கு அதாவது பிரசவத்து க்கு வசதியாக பின்புற த்திலும் உபரி கொழுப்பு சேமிக்கப் பட்டது.

கடந்த தலைமுறை வரை பெருத்த வயிற்றோடு பெண் களை பார்ப்பது மிக மிக அரிது. அப்படியே இருந்தாலும் அது குழந்தை பேற்றை முடித்த வயதான பெண்களாக இருப்பார்கள். 
ஆனால், இப்போது பல பெண்கள் அதிலும் இளம் பெண்களே தொப்பை யுடன் காணப்படு கிறார்கள்.

அதற்கும் காரண மிருக்கிறது. அந்தப் பெண்களிடம் கேட்டுப் பார்த்தால் அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்ப ப்பையை நீக்கிய வர்களாக இருப்பார்கள். 

அதே போல் மெனோபாஸ் என்ற மாதவிலக்கு நிரந்தரமாக நின்று போன பெண்களு க்கும் ஆண்களைப் போல் பானை வயிறு தோன்று கிறது.

அதாவது, இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப் பில்லை என்று தெரிந்ததும் இயற்கை பெண்ணின் வயிற்றுக் கான முக்கியத் துவத்தை குறைத்து விடுகிறது. 
ஆணுக்கு தொப்பை.. பெண்ணுக்கு தொடை !
அதிகப் படியான உபரி கொழுப்பை அங்கேயும் சேமிக்க தொடங்கி விடுகிறது.

ஏனென்றால் பெண்களுக்கு ஆண்களை விட கொழுப்பின் அளவு கூடுதல். அதை சேமித்து வைக்க நிறைய இடம் தேவைப் படுகிறது.
இப்படி உபரியான கொழுப்பு தான் ஆண்களுக்கு தொந்தியாகவும் பெண்களுக்கு தொடையிலும் பின்புறத்திலும் சேமித்து வைக்கப் படுகிறது.

இதுவே ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசத்தை மேலும் அதிகப்படுத் துகிறது.
Tags: