இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி... முதல் மனைவியுடன் விவாகரத்து !

0

பிரபல நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்தவர் தான் வரலட்சுமி சரத்குமார். படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே, டான்ஸ் மற்றும் நடிப்பிலும் ஆர்வம் காட்டிய இவருக்கு... 

இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி... முதல் மனைவியுடன் விவாகரத்து !
ஷங்கரின் பாய்ஸ், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும், அதனை தன்னுடைய தந்தையின் பேச்சை கேட்டுக்கொண்டு தவற விட்டார்.

இதன் பின்னர்... நடிப்பில் உறுதியாக இருந்த வரலட்சுமி கடந்த 2012-ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிக்கி நடிப்பில் உருவான 'போடா போடி' படத்தில் நடித்தார். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 

தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், மனம் தளராமல் வாய்ப்புகளை தேடி கொண்டே... கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் கவனம் செலுத்தினார். 

இந்நிலையில் தான், அதிரடியாக இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' பட வாய்ப்பு கிடைத்தது. 

இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறா விட்டாலும், இந்த படத்தின் கலைக்களமும், வரலட்சுமியின் கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 

இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி... முதல் மனைவியுடன் விவாகரத்து !

வரலட்சுமி திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. 

இப்படத்திற்கு பின்னர்... ஒரு குணச்சித்திர நடிகையாக அவதாரம் எடுத்த வரலட்சுமி, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, எச்சரிக்கை, சண்டை கோழி 2, சர்க்கார் என அடுத்தடுத்து சில படங்களில் தன்னுடைய வில்லத் தனத்தை காட்டி மிரள வைத்தார்.

தற்போது தமிழில் ராயன் படம் உட்பட, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

எம் சாண்ட் என்பது எப்படி தயாரிக்கிறார்கள்? #MSand

மேலும் நடிகர் விஷாலுடனான காதல் தோல்விக்கு பின்னர், தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை காதலிக்க துவங்கியுள்ளார். 

இதை தொடர்ந்து இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை மழை போல் பொழிந்தனர்.

இந்நிலையில் நிக்கோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, முதல் மனைவியான கவிதாவை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், இவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

இரண்டாவது மனைவியாகும் வரலக்ஷ்மி... முதல் மனைவியுடன் விவாகரத்து !

நிக்கோலய் சச்தேவ்வின் முதல் மனைவி கவிதா மற்றும் மகளின் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வரலட்சுமி சரத்குமாருக்கு இது முதல் திருமணமாக இருக்கும் நிலையில்... இவர் ஏற்கனவே விவாகரத்தான ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக மாற உள்ள தகவல் பல ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)