இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம்... தடுமாறும் டால்பின்கள் !

இந்தியாவின் தேசிய விலங்கு எது என்று கேட்டால் புலி என்று அனைவரிடம் இருந்தும் பதில் வரும்.
இந்தியாவின்  தேசிய நீர்வாழ் உயிரினம்... தடுமாறும் டால்பின்கள் !
இந்தியாவின் தேசிய பறவை எது என்று கேட்டால் மயில் என்று பதில் கிடைக்கும். அதே போல, இந்தியாவின் தேசிய மலர், என்று கேட்டால் சட்டென்று தாமரை என்று கூறுவர்.

ஆயினும் இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் எது? என்று கேட்டால் பலருக்கும் தெரியாது.

பள்ளி மாணவர்களுக்கு படித்த பெரியவர்களுக்கும் தெரியாது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம், தெற்காசிய நதி வாழ் டால்பின்கள்.

கங்கை, பிரம்மபுத்ரா, சிந்து நதிகளில் வாழும் இந்த டால்பின்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

டால்பின்கள் என்றாலேயே கடலில் வாழும் உயிரினம் என்று நினைத்தவர் களுக்கு இந்த தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அது தான் உண்மை.
பல நூற்றாண்டு களாக இந்த டால்பீன்கள் நதிகளில் வாழ்ந்து வந்தாலும், 19ஆம் நூற்றாண்டில் தான் உயிரியல் ஆராய்ச்சி யாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதன் பிறகு இந்த டால்பின்கள் தனி இனமாகவே கருதப்பட்டு வந்தது. 1970 களில் இந்த டால்பின்கள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டன.

அப்போது, கங்கை நதியில் வாழ்பவையும், சிந்து நதியில் வாழ்பவையும் ஒரே இனம் இல்லை என்று தகவல் உறுதியானது.

அதன் பிறகு இரண்டு தனித்தனி இனம் என்றும், பல ஆயிரம் வருடங்களில் இவ்விரு இனங்களுக்கு

இடையே கலப்பு எதுவும் ஏற்பட வில்லை என்று தெரிந்தது.
இந்தியாவின்  தேசிய நீர்வாழ் உயிரினம்... தடுமாறும் டால்பின்கள் !
கடல் வாழ் டால்பின்களைப் போல நீண்ட மூக்கைக் கொண்டிருந் தாலும்

இவற்றின் கண்பார்வை கடல் டால்பின்களைப் போல கூர்மை யானதல்ல. ஆண் டால்பின்கள் 2 முதல் 2.2 மீட்டர் அளவுக்கும்,

பெண் டால்பின்கள் 2.4 முதல் 2.6 மீட்டர் அளவுக்கும் வளரக் கூடியவை.

இவை டிசம்பர் & ஜனவரி வாக்கிலும், மார்ச் முதல் மே மாதம் வரையிலும் குட்டி போடும்.

மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத இதன் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களாக குறைந்து வருகின்றது.

தொழிற் சாலையில் இருந்து வரும் கழிவுகள், விவசாய பூச்சிகொல்லிகள் போன்ற காரணங்களால் நதி நீர் கடுமையாக மாசு படுகின்றது.

அதனால் இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகின்றது. இந்தப் பூமியில் தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்த இந்த டால்பின்கள் தடுமாறி வருகின்றன.
இந்தியாவின்  தேசிய நீர்வாழ் உயிரினம்... தடுமாறும் டால்பின்கள் !
இது தவிர, மீன் பிடிக்கும் வலைகளின் மூலமாகவும் இவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகின்றது.

இது மட்டுமல்லாமல் எண்ணற்ற அணைகள் கட்டப் படுவதால் இவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப் படுகின்றது.

சமீபத்தில் இந்திய அரசும், எண்ணற்ற சர்வதேச அமைப்புகளும் நதிவாழ் டால்பின் களைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றன.

சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் இந்த டால்பின் இடம் பெற்றுள்ளது.
Tags: