இந்தத் தீபாவளியின் போது நீங்கள் கம்பி மத்தாப்புக் கொளுத்தி மகிழ்ந்திருக்கக் கூடும். அப்படி பளீர் ஒளியைத் தருவது மக்னீஷியம் தான்.
பளீர் ஒளி வீசும் மக்னீஷியம் !
புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்தப் படும் பிளாஷ் விளக்குகளில் தோன்றும் 

நீலநிறப் பிரகாசமான ஒளி, பல்பில் உள்ள மக்னீஷியக் கம்பி எரிவதன் காரணமாகத் தான் ஏற்படுகிறது.

மக்னீஷியம் மிகவும் இலேசான உலோகமாகும். அலுமினிய த்தை விட இது இலேசானது.
இந்தக் காரணத்தால், வானில் செல்லும் விமானங்க ளிலும், கடலில் செல்லும் கப்பல்களிலும் 

கட்டுமானப் பணியில் அலுமினிய த்துடன் மக்னீஷியம் பெருமளவு க்குப் பயன்படுத்தப் படுகிறது.

உலகில் அதிகமாகக் கிடைக்கும் உலோகங்களில் மக்னீஷியம் நான்காவது இடத்தில் உள்ளது. 

கடல், பூமி போன்ற எந்த இடத்திலும் மக்னீஷியம் தாராளமாகக் கிடைக்கிறது. 

ஆனால் இது தனியாகக் கிடைப்பதில்லை. மற்ற பொருட்களுடன் சேர்ந்தே கிடைக்கிறது.

சாதாரண மாக ஒரு கன மைல் கடல் நீரில் அறுபது லட்சம் டன் மக்னீஷியம் இருக்கிறது என்று கணக்கிட்டிருக் கிறார்கள். 

நமக்குத் தேவையான மக்னீஷியத்தை நம்மைச் சூழ்ந்திருக்கும் கடலில் இருந்தே பெற்று விட முடியும்.
அலுமினிய த்தைத் தனியாகப் பிரித்து எடுப்பதற்கு முன்னரே 1808-ம் ஆண்டில் சுத்தமான மக்னீஷியம் பிரித்தெடுக்கப்பட்டது.
பளீர் ஒளி வீசும் மக்னீஷியம் !
ஆனால் பெருமளவுக்குத் தொழில்நுட்ப முறையில் மக்னீஷிய த்தைப் பிரித்தெடுக்கும் 

பணி கடந்த ஐம்பது ஆண்டு களுக்குள் தான் வளர்ச்சி அடைந்திருக் கிறது. மக்னீஷியம் துரிதமாக ஆக்சிஜனுடன் சேரக்கூடிய இயல்பு கொண்டது. 
இதன் காரணமாக இந்த உலோகத்தில் இருந்து ஏற்படும் ஒளி கண்களைப் பறிக்கும் விதத்தில் உள்ளது.

மக்னீஷியத்தின் இந்த இயல்பு காரணமாக இதை ஆரம்பத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. 

மேலும் இலேசாக இருப்பதும் இது வளர்ச்சி அடைய இடையூறாக இருந்தது.

ஆனால் ஆகாய விமானம், கப்பல்கள் போன்றவை நவீனப் போக்கு வரத்துச் சாதனங்களாகப் பிரபலமடைந்த பிறகு, 

மக்னீஷியத்தின் மூலம் கிடைக்கும் பயன் அதிகரிக்கத் தொடங்கியது. விமானம்,

கப்பல் போன்றவை மிகவும் இலேசான உலோகத்தைக் கொண்டு அமைக்கப்பட வேண்டியிருந்ததால் மக்னீஷியத்தைத் தேடத் தொடங்கி னார்கள்.
பளீர் ஒளி வீசும் மக்னீஷியம் !
அமெரிக்காவைச் சேர்ந்த கார்லஸ் மார்ட்டின் ஹால் எப்படி மின்பகுப்பு முறையில் அலுமினிய த்தைப் பிரித்தெடுத்தாரோ,

அதைப் போல மற்றொரு அமெரிக்கரான டாக்டர் பெர்ட் ஹென்றி டோவ், கடல் தண்ணீரில் இருந்தும், 
பிற உப்புத் தண்ணீரில் இருந்தும் மக்னீஷியத்தை மின்பகுப்பு முறையில் அதிக அளவில் தயாரிப்பதற்கு வழிகாட்டினார்.