வாகனங்களை மேல் நோக்கி இழுக்கும் அதிசய காந்த மலை !

இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் வாயை பிளக்க வைக்கிறது வாகனங்களை மேல் நோக்கி இழுக்கும் அதிசய காந்த மலை. இந்தியாவின் வடக்கே உள்ள ஸ்ரீநகரில் அமைந்துள்ள
வாகனங்களை மேல் நோக்கி இழுக்கும் அதிசய காந்த மலை !
லடாக்கில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள லேஹ் என்னும் இடத்தில் காந்த மலை என்ற ஒன்று அமைந் துள்ளது. தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள இந்த காந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 11000 அடி உயரத்தில் அமைந் துள்ளது.

இந்த மலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் போடப் பட்டுள்ள கட்டத் திற்குள் வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனம் மேல் நோக்கி இழுக்கப்பட்டு நகரும்.
வாகனங்களை மேல் நோக்கி இழுக்கும் அதிசய காந்த மலை !
கார்கள் போன்ற வாகனங்கள் மட்டு மல்லாமல், இந்த இடத்தை கடந்து செல்லும் விமானங்களும் இந்த மலையை நோக்கி இழுக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், சில ஆய்வாளர்கள் இந்த நிகழ்வுகளை, பூமியில் இருந்து வரும் சக்தி வாய்ந்த மின்காந்த ஈர்ப்பினால் ஏற்படுகின்றன என்று கூறினாலும், சிலர் இது ஒரு ஒளியியல் மாயை (Optical Illusion) என்று கூறுகின்றனர்.
வாகனங்களை மேல் நோக்கி இழுக்கும் அதிசய காந்த மலை !
இந்த அதிசய நிகழ்வின் காரணம் மின் காந்த ஈர்ப்போ அல்லது ஒளியியல் மாயையோ எதுவாக இருந்தாலும், சுற்றுலா வாசிகள் ஆண்டு தோறும் இங்கு படையெடுக்க தவறு வதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: