வடக்கு ட்ரான்ஸ்வால் பிரதேசத்தில் மெஸ்ஸினா நகருக்குப் போனால், அங்கு பூதம் போல ஊதிய ஒரு மரத்தைப் பார்க்கலாம். இந்தப் பக்கம் வந்த டேவிட் லிவிங்ஸ்டன் இதனை ‘தலைகீழாக நடப்பட்ட கேரட் ‘ என்று சொன்னார்.


இது ஆப்பிரிக்கா வின் மிக வினோதமான மரம் – பாவோபாப் என்று அழைக்கப்படும் அடன்ஸோனியா டிஜிடாடா (ADANSONIA DIGITATA) இதனை பலர் தாவர உலகின் பிசாசு என்று கூறி வந்திருக்கி றார்கள்.

பாவோபாப் மரங்கள் மிக உறுதி யானவை, சட்டென்று இறக்காதவை. பிடுங்கி கீழே தரை மட்டமாகப் போட்ட பின்னரும் நீட்ட வாக்கில் சில முறை இந்த மரங்கள் வளர்ந்திருக் கின்றன.

மரங்களை வெட்டிச் சாய்த்த பின்னரும், இந்த மரத்தின் வேர்கள் மரத்தின் ஆணி வேரிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவு வரை இருக்கும் இதன் வேர்கள் உயிரோடு பலவருடங்கள் இருப்பதை பார்த்திருக்கி றார்கள்.

இந்த மரங்கள் ஆயிரக் கணக்கான வருடங்கள் உயிரோடு இருக்கும். மிக மெதுவாக வளர்கின்றன. சுமார் 5 மீட்டர் சுற்றளவுக்கு இந்த மரம் வளர்வதற்கு சுமார் ஆயிரம் வருடங்கள் ஆகும்.

பெரும் வெள்ளம் வருவதற்கு முன்னர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஒரு மரம் 25 மீட்டர் சுற்றளவு உள்ளதாக பார்த்திருக்கிறார். மொம்பாஸா தீவில் இதனை விட பெரிய மரங்கள் இருக்கின்றன.


பல நூற்றாண்டு களுக்கு முன்னர் நடந்த போர்களில் பெற்ற பீரங்கிக் குண்டுகளை இன்னும் தாங்கிக் கொண்டு உயிர்வாழும் பாவோபாப் மரங்களை இன்றும் பார்க்கலாம்.

எங்கே காணப் படுகின்றன ? இந்த பாவோபாப் மரங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் பல இடங்களில் வாழ்கின்றன.

இவைகளை மடகாஸ்கர், இந்தியா, இலங்கை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கூட பார்க்கலாம்.