கோடை காலமான ஜூலை மாதத்தை  மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், அனைத்து நாட்களையும் ஐஸ்கிரீம் நாளாகக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் அமெரிக்கர்கள்.
கோன் ஐஸ்கிரீம் பிறந்த கதை தெரியுமா? உங்களுக்கு... !
தொட்டதிற்கெல்லாம் ஐஸ்கிரீம் ட்ரீட் கொடுத்து மகிழும் மனிதர்களுக்காக இதோ ஐஸ்கிரீம் பற்றி ஒரு சில சுவையான தகவல்...

1776ம் ஆண்டு, ஐஸ்கிரீம் என்ற சொல் ஐஸ்டு கிரீம் என்னும் சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது.
4ம் நூற்றாண்டில் இருந்தே ஐஸ்கிரீம் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரோமாபுரி மன்னனான நீரோ, தன்னை சந்திக்க வரும் சிறப்பு விருந்தினர்களை மகிழ்விக்க, பணியாட்களை அனுப்பி

மலை உச்சியிலிருந்து ஐஸ்கட்டிகளை அள்ளி எடுத்து வரச் செய்து, பழங்களுடன் சேர்த்து கூழாக்கி பரிமாறுவாராம்.
கோன் ஐஸ்கிரீம் பிறந்த கதை தெரியுமா? உங்களுக்கு... !
அமெரிக்காவில் ஒரு பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனம். கூட்டம் அலைமோதும் இடம். 

கப்புகளைக் கழுவி அடுத்தவருக்கு சப்ளை செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

எத்தனை மெஷின் வந்தும் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை. இதனால் உரிமையாளர் சிந்தித்தார்.
பார்மலின் மீனால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா?
ஒரு போட்டி வைத்தார். சிறந்த யோசனை சொல்பவருக்குப் பரிசு என்றார். ஆளாளுக்கு பல யோசனைகளை சொன்னார்கள்.

ஆனால் ஒருவர் சொன்ன யோசனை மட்டும் அனைவரையும் சிரிக்க வைத்தது. உரிமையாளரை மட்டும் சிந்திக்க வைத்தது.

கப்புகளைக் கழுவுவதற்குப் பதிலாக அதையே சாப்பிடும்படி செய்தால் என்ன? இது தான் அவர் சொன்ன யோசனை.
கோன் ஐஸ்கிரீம் பிறந்த கதை தெரியுமா? உங்களுக்கு... !
அவருக்குப் பரிசு கிடைத்தது. கோன் ஐஸ்க்ரீம் பிறந்த கதை இது தான். வித்தியாசமான சிந்தனை வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

1904ம் ஆண்டு தான் முதன் முதலில் ஐஸ்கிரீம் கோன் கண்டுபிடிக்கப்பட்டது.
ஐஸ்கிரீம் பிரியர்கள்...

உலக அளவில் அதிக ஐஸ்கிரீம் பிரியர்கள் வாழ்வது அமெரிக்காவில் தானாம். 

சராசரியாக ஒரு அமெரிக்கர் 2 நாட்களில் 5 ஹாலன் ஐஸ்கிரீம்களை சுவைப்பதாக கருத்துக்கணிப்புத் தெரிவிக்கிறது.