தஞ்சாவூருக்கு காந்திஜி ரோடு வந்த கதை !





தஞ்சாவூருக்கு காந்திஜி ரோடு வந்த கதை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பழைய தஞ்சை . . . . தஞ்சாவூருக்கு இந்த ஆர்ச் ... மற்றும் “காந்திஜி ரோடு” வந்த கதை . .
தஞ்சை காந்திஜி ரோடு


இந்த படத்தில் காணப்படும் ஆர்ச் ஆனது, மணிக்கூண்டு அருகே ... இப்போது உள்ள வெங்கடா லாட்ஜ் ஹோட்டலின் வாசல்படி அருகே இருந்தது.

இந்த படம் வடக்கிலிருந்து ...அதாவது அண்ணா சிலை இருக்கும் இடத்தில இருந்து எடுக்கப்பட்டது . . இப்போது உள்ள மகாராஜா சில்க்ஸ் அருகே செல்லும் சாலை தான் நீங்கள் காண்பது....

அதாவது ஆபிரகாம் பண்டிதர் ரோடு காந்திஜி சாலை சந்திப்பு. 1995ல் நடந்த உலக தமிழ் மாநாட்டை ஒட்டி இந்த சாலை விரிவுபடுத்தும் திட்டத்தில் இந்த ஆர்ச் 1994ம் வருடம் இடிக்கப்பட்டது ..

அதற்கு முன் ... அதன் அருகில் சூர்யா ஸ்வீட் ஸ்டால் , இக்பால் ஸ்டோர்ஸ் , மங்களாம்பிகா ஓட்டல் .... K.M. வெங்கடாச்சலம் செட்டியார் மூக்குப்பொடி .. TAS ரத்தினம் பட்டினம் பொடி கடை (SNUFF STALL), செருப்பு தைப்பவர் (ஆர்ச்சின் சிரிய ஓட்டை வளைவில் செருப்பு தைப்பவர் உட்கார்ந்து இருப்பார்) , 
நம் உடலை எப்படி அழகாக வைத்துக் கொள்வது தெரியுமா?
பேனா ரிப்பேர் செய்யும் ஜானிபாய்.பேனா கடை, குடை ரிப்பேர் கடை, பூட்டு ரிப்பேர் / சாவி கடை, பனங்கற்கண்டு பால் கடை . .. சூர்யா ஸ்வீட் ஸ்டாலில் பக்கத்தில் உள்ள மூலை கடையில் "சிந்தாமணி சவுண்ட் சர்வீஸ்" கடை ... கடையின் வெளியே இரண்டு பெரிய டம்மி ஹார்ன் ஸ்பீக்கர் கட்டி இருப்பார்கள். 

மாலை நேரத்தில் ... மணிக்கூண்டு ராஜப்பா பூங்காவில் (அதன் பழைய பெயர் ராணி பூங்கா) பறவைகள் சப்தம் ரம்மியமாக கேட்ட காலம் ..
தஞ்சை பெரிய கோவில்


பக்கத்தில் உள்ள மணிக்கூண்டு மராட்டிய ராணி அவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டது.. ஒரு காலத்தில் ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி அமைந்திருக்கும் இடமானது “ராணி தோட்டம்” என்ற அழகிய சோலையாக இருந்தது . 

மராட்டிய ராஜ குடும்பத்தார் இந்த 40 ஏக்கர் நிலத்தை RMH ஆஸ்பத்திரி அமைக்க 1879ல் தானமாக கொடுத்தனர் .

1535க்கு முன் இந்த இடமெல்லாம் “அழகிய குளம்” என்கிற ஒரு நீர் நிலையாக இருந்திருக்க கூடும் .. 1535ல் அகழி உருவெடுத்த போது இதற்கு வரும் நீர் ஆதாரம் பாதிக்க பட்டு பெரும்பாலான “அழகிய குளம்” தூர்ந்து போனது.

இந்த இடங்கள் எல்லாம் தாழ்வான பகுதிகளாக இருந்தது. பெரும்பாலான இடங்கள் பூங்கொல்லையாக மாறின .. ஆதலால் தான் இப்பொது உள்ள ஆபிரகாம் பண்டிதர் சாலை ஒருகாலத்தில் “பூக்கொல்லை ரோடு” என்று அழைக்கப்பட்டது.. 

அதனை சார்ந்த இடங்கள் எல்லாம் “பூக்கொல்லை ரஸ்தா” என்று பட்டா மற்றும் அடங்கல் ரெக்கார்டுகளில் குறிப்பிடுவார்கள்.. 
தஞ்சை மேல வீதி வடக்கு வீதி சந்திப்பு


மணிக்கூண்டு கட்டிய பிறகு அதன் பெயர் “கிளாக் டவர் ரோடு” என்று பெயர் மாற்றம்.. பிறகு 1950களில் அதற்கு “ஆபிரகாம் பண்டிதர் ரோடு” பெயர் மாற்றம் செய்யப்பட்டது .

1799 ஆம் ஆண்டு தஞ்சாவூர் நாட்டை (Tanjore Country), தஞ்சாவூர் கோட்டை பகுதி நீங்கலாக, மராட்டிய ராஜாவிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனியார் கைப்பற்றினர். 

அதன் பிறகு தான் அதற்கு "டாஞ்சூர் டிஸ்ட்ரிக்ட்" என பெயரிட்டு முதன்முதலாக கலெக்டர் நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

1799ற்கு பிறகு ஆங்கிலேயர்க ளால் தஞ்சை கோட்டைக்குள் நுழைவதற்கு தெற்கு நுழைவாயில் ஒன்று உருவாக்கப்பட்டது .. அப்போது தான் இந்த ரோடும் போடப்பட்டிருக்க வேண்டும் ...
குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணங்களும் சிகிச்சைகளும் !
முதன் முதல் இந்த ரோடு உருவாக்கப்பட்ட போது இப்போது உள்ள இரண்டு பஸ் ஸ்டாண்ட் நடுவே அகழியை கடக்கும் வகையில் ஒரு சிறிய பாலம் இருந்தது.. 

(பெரிய கோவிலுக்கு செல்லும் போது ஒரு அகழியை கடக்கும் பாலம் இருக்கிறது அல்லவா .. அது போல) .பிற்காலத்தில் அகழி மண்ணால் நிரப்பப்பட்ட போது இந்த பாலம் காணாமல் போனது .

1862ஆம் ஆண்டு ரயில்வண்டி சேவை தஞ்சைக்கு அறிமுகமானது .. அதன் பின்னர் இந்த ரோட்டுக்கு “ரயில்வே ஸ்டேஷன் ரோடு” என்று பெயர் சூட்டப்பட்டது ..
தஞ்சை தெற்கு வீதி


1924ல் இந்த ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் தான் தஞ்சைக்கு முதன் முதலில் மின்சார லைன் அறிமுகப் படுத்தப்பட்டு, மின்சார தெரு விளக்குகள் (குண்டு பல்பு) எரிய ஆரம்பித்தன என்பது குறிப்பிடதக்கது.

1959 -ல் தான் தஞ்சையின் முதல் பஸ் ஸ்டான்ட் இந்த ரோட்டில் , அகழியின் மேற்கு பகுதியை தூர்த்து உருவாக்கப் பட்டது

சுதந்திரத்திற்கு பின்பு இந்த ரோட்டுக்கு “காந்திஜி ரோடு” என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

இந்த ரோடு தான் ஆங்கிலேயர் ஆட்சி முதல் இன்று வரை தஞ்சையின் பிரதான சாலை.

இந்த ஆர்ச் உருவானது ஒரு பெரிய கதை .. 1910ம் ஆண்டு, இந்தியாவின் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் ஆங்கிலேய மன்னர் (KING GEORGE V) பதவியேற்றார்.. 

அதை நினைவு கூறும் வகையில் இந்த ஆர்ச்சுக்கு "காரோனேசன் ஆர்ச்" என்று பெயர் சூட்டி டாஞ்சோர் முனிசிபாலிடி சார்பில் வேலைகள் ஆரம்பிக்க பட்டு இரண்டு பக்கமும் தூண்கள் எழுப்ப பட்டு வேலை அத்துடன் நிறுத்தப்பட்டன. 
கன்னத்தில் உள்ள கொழுப்பை கரைக்க !
பிறகு 1927ம் வருடம் டாஞ்சோர் முனிசிபாலிடி தனது 60ம் ஆண்டு "டயமண்ட் ஜூபிலி" கொண்டாடும் வகையில் இந்த ஆர்ச் பணிகள் 17 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப் பட்டன.. 
தஞ்சை மேல வீதி


ஆர்ச் கட்டி முடிக்கப்பட்டு அதன் மேல் கிரீடம் வடிவம் கொண்ட ஒரு அமைப்பினை அதன் மேல் வைத்த போது பாரம் தாங்காமல் அன்று இரவே ஆர்ச் இடிந்து விழுந்தது.. 

பிறகு அதே வருடத்தில் மீண்டும் ஒரு உறுதியான ஆர்ச் காட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது . இதனை "கோரோனேசன் ஆர்ச் " மற்றும் "டயமண்ட் ஜூபிலி ஆர்ச் " என்று குறிப்பிடுவார்கள்.

இதனை சிலர் "விக்டோரியா ஆர்ச் " என்று கூறுவார்கள் ... அது தவறு.

(தகவல் / எழுத்தாக்கம் : S.P.அந்தோணிசாமி M.A.,B.L.,, சேர்மன், பரிசுத்தம் பொறியியல் கல்லூரி,, தஞ்சாவூர்
Tags: