குவாரண்டைன் மலச்சிக்கல் என்பது என்ன? எப்படி விடுபடுவது?

கொரோனா வைரஸ் நமது பரப்பரப்பான வாழ்க்கைக்கு மட்டுமல்ல, நமது ஆரோக்கியம் மற்றும் உடல் ஃபிட்னெஸிற்கும் தடை போட்டுள்ளது. 
குவாரண்டைன் மலச்சிக்கல் என்பது என்ன?

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கிட்டதட்ட வீட்டுக் காவலில் இருப்பது போலவே நம்மை மாற்றியுள்ளது. 

அது மட்டுமல்லாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல், சுத்தமாக இருத்தல் ஆகியவை கட்டாய மாக்கப்பட்டுள்ளன.

அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால், பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கின்றனர். வீட்டிலிருந்து வேலை செய்வதால் என்ன நடக்கும் என்பது நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். 
காலையில் தாமதமாக எழுந்திருப்பது, பிற்பகலில் குட்டித் தூக்கம் போடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, சோம்பேறித்தனம் ஆகியவை இவற்றுள் சில.

இவற்றுக்கு இடையில் குவாரண்டைன் மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. 

இந்த தனிமைப் படுத்தப்பட்ட காலங்களில், மலச்சிக்கல் மற்றும் ஜீரணப் பிரச்சனைகளால் பெரும்பாலான மக்கள் கஷ்டப்படுகின்றனர். 

குவாரண்டைன் மலச்சிக்கல் என்றால் என்ன? இதிலிருந்து விடுபடுவது எப்படி? இதற்கெல்லாம் பதில் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

லாக்டவுனும்.. மலச்சிக்கலும்..
லாக்டவுனும்.. மலச்சிக்கலும்

மலச்சிக்கல் என்பது வயிறு தொடர்பான ஒரு பிரச்சைனை, அதாவது ஒருவருக்கு மலம் கழிப்பதில் ஏற்படும் சிக்கலே மலச்சிக்கல் எனப்படுகிறது. 

ஆரோக்கியமற்ற சூழ்நிலை காரணமாக சாப்பிடும் சாப்பாடு சரியாக ஜீரணமாவதில் சிரமம் ஏற்படுகிறது. 
இதற்கு சாப்பாட்டை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. முறையற்ற தூக்கம், சரியான உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம் ஆகியவையும் இதற்கு காரணங்களாகும்

மலச்சிக்கலுக்கு என்ன காரணம்?
மலச்சிக்கலுக்கு என்ன காரணம்?
* நமது உடலின் சர்க்கேடியன் இசைவில் (circadian rhythm) தொந்தரவு ஏற்படும் போது இந்தப் பிரச்சனை உருவாகிறது. 

நமது உடலின் இயற்கை கடிகாரம் (Natural Clock) அல்லது உயிரியல் கடிகாரம் என்பது தூக்கம்- எழுந்திருத்தல் சுழற்சியை முறைப்படுத்துகிறது.

* உங்கள் வயிற்றுக்கு ஒரு முறையான சுழற்சி உள்ளது. உங்கள் ஷெட்டியூல் (schedule) காரணமாக இது பாதிக்கப் படுகிறது. 

லாக்டவுன் காலங்களில், பொரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சனையால் துன்பப் படுகின்றனர்.

* குவாரண்டைன் காரணாமாக வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுள்ளதால், கொரோனா நோய் வருவதற்கு முன்னர், 

நாம் வழக்கமாக பின்பற்றிய ஷெட்யூலை பின்பற்ற முடிவதில்லை என்பது இதற்குக் காரணமாகும்.
மலச்சிக்கலுக்கு என்ன காரணம் என்பது இப்போது நமக்குத் தெரியும். இதில் இருந்து விடுபட என்ன வழிகள் என்பதைப் பார்ப்போம்.

மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட வழிகள்:

தேவையான அளவு தண்ணீர் குடித்தல்
தேவையான அளவு தண்ணீர் குடித்தல்

* வீட்டில் இருப்பதாலும், வியர்ப்பது இல்லை என்பதாலும், உங்கள் உடலில் தேவையான நீர் மூலக்கூறுகள் (hydrates) இருக்கும், அதனால் தண்ணீர் குடிக்கத் தேவையில்லை என்பது அர்த்தம் இல்லை.

* நாள் முழுவதும் உங்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம். பல உடல் பிரச்சனைகளுக்கு, அதிலும் முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைக்கு தண்ணீர் ஒரு சிறந்த தீர்வாகும்.

* சாதாரண தண்ணீர், எலுமிச்சை ஜூஸ் (லெமொனேட்), இளநீர் அல்லது பழ ஜூஸ் ஆகியவற்றைக் குடிக்கலாம். சோடா, மதுபானம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் உணவுப் பழக்கத்தைக் கவனித்தல்
உங்கள் உணவுப் பழக்கத்தைக் கவனித்தல்
* வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, நாம் அதிகமாக தின்பண்டகளும் (snacks), உணவுகளும் சாப்பிடுகிறோம். ஆனால், சுறுசுறுப்பாக இருப்பது குறைவு.

* நம்மில் பலர் மளிகைப் பொருட்கள் வாங்கும் போது, திண்பண்டங் களையும் (snacks), உடனடியாக சமைக்கக்கூடிய உணவுப் பொருட்களையும் அதிகமாக வாங்குகிறோம்.
* மேலும் இரண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பசி எடுப்பதால், சமையலைறை க்குச் சென்று எதையாவது எடுத்துக் கொறித்துக் கொண்டே இருக்கிறோம். இவைதான் மலச்சிக்கலைத் தூண்டுகிறது.

நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுதல்
நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுதல்

* மலச்சிக்கல் வராமல் தடுக்க, அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* குடலில் இருந்து மலம் எளிதாக வெளியேறுவதற்கு நார்ச்சத்துள்ள உணவுகள் உதவுகின்றன.

* தானிய வகைகள், பயறு வகைகள், பருப்பு வகைகள், கீரை மற்றும் பழங்கள் ஆகிய வற்றை சாப்பிடுவது சிறந்தது.

உங்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்து கொள்ளுங்கள்
உங்களை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்து கொள்ள

* உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் மூன்றாவதாக செய்ய வேண்டிய முக்கியமான மாற்றம் உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது.

* நீங்கள் சாப்பிடும் அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். வீட்டில் எளிதான உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
* சாப்பிட்ட பின்னர், மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ அல்லது புல்வெளியிலோ நடப்பது சிறந்தது.

* தினமும் 30 நிமிடங்கள் நடனம் ஆடுங்கள். யோகா பயிற்சிகள் செய்வதும் நல்லது. சோம்பலைத் தவிர்ப்பதற்கு அலுவலக வேலைக்கு இடையில் வீட்டு வேலைகளையும் செய்யுங்கள்.
Tags: