இஸ்லாமியராக மாறி விட்டீர்களே, பார்க்க கஷ்டமாக உள்ளது - யுவன் சங்கர் பதில் !





இஸ்லாமியராக மாறி விட்டீர்களே, பார்க்க கஷ்டமாக உள்ளது - யுவன் சங்கர் பதில் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய காரணத்தை வெளிப்படுத்தி யுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
யுவனின் மனைவி ஷாஃப்ரூன்

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, 2014-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டதாக அறிவித்தார். அப்துல் காலிக் என்றும் தனது பெயரை மாற்றிக் கொண்டார். 

பிறகு, 2015-ல் கீழக்கரையை சேர்ந்த ஷாஃப்ரூன் நிஷா என்கிறவரைத் திருமணம் செய்து கொண்டார். 2016 ஏப்ரலில் பெண் குழந்தை பிறந்தது. ஷாஃப்ரூன் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்குப் பதில் அளித்தார் யுவனின் மனைவி ஷாஃப்ரூன். அப்போது அவரிடம் ஒரு ரசிகர், நன்றாக இருந்த யுவனை இப்படி இஸ்லாமியராக மாற்றி விட்டீர்களே, பார்க்கவே கஷ்டமாக உள்ளது என்றார்.
காஞ்சிபுரம் இட்லி தயார் செய்வது எப்படி?
இதற்குப் பதில் அளித்த ஷாஃப்ரூன், எந்தளவுக்கு மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றார்.

இதற்குப் பிறகு அந்த ரசிகர் கூறியதாவது: 

இளையராஜா சார் கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவர் மகனை இப்படி மாற்றி வீட்டீர்களே என்றார். இது உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. 

நான் உங்களுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை. ஆனால் மக்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள் என எண்ணி அதிர்ச்சியடைகிறேன் என்றார் ஷாஃப்ரூன்.

மீண்டும் இதே விஷயம் குறித்து அந்த ரசிகர்கள் சீண்டவே, ஷாஃப்ரூன் கூறியதாவது: யுவனின் மனத்தில் நான் விஷத்தைக் கலக்கவில்லை. என்னைத் திருமணம் செய்யும் முன்பே அவர் இஸ்லாமியராக மாறி விட்டார்.

நான் அவரைச் சந்திக்கும் முன்பே நான்கு வருடங்களாக இஸ்லாத்தைப் பின்பற்றி வந்தார் என்று கூறினார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

இந்நிலையில் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய காரணத்தை விடியோவாக வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. அதில் அவர் கூறியதாவது:

எந்தத் தருணம் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. இஸ்லாமிய மதத்துக்கு மாறுவதற்கு முன்பு, என் அம்மா உயிருடன் இருந்த போது உலகுக்கு எப்போது முடிவு எனக் கேள்வி எழுந்தது.

2012-ல் உலகம் முடிவடையும், மாயன் காலண்டர் என அப்போது பேசி வந்தார்கள். அம்மாவிடம் இதுபற்றி விவாதித்துள்ளேன். அந்தச் சமயத்தில் தான் குர் ஆனை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது. அம்மா மறைந்த பிறகு மெக்கா சென்று வந்த நண்பர் எனக்கு ஒரு விரிப்பை அளித்தார். எப்போது மனது பாரமாக உள்ளதோ, அப்போது அதில் அமருங்கள் என்றார்.
லாக்டவுனில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைல் பார்க்குறாங்களா? - அதற்கான தீர்வுகள் !
என் உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அம்மா பற்றிய பேச்சு வந்து நான் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அப்போது வரை அந்த விரிப்பு பற்றி நினைவேயில்லை.

பிறகு கழிப்பறைக்குச் சென்று அழுத முகத்தைக் கழுவினேன். அப்போது போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு நண்பர் அனுப்பி யிருந்தார்.

வானத்தின் அருமையான தோற்றம் என ஒரு புகைப்படத்தை அனுப்பி யிருந்தார். இதில் ஏதாவது தெரிகிறதா எனக் கேட்டேன். உடனே பதில் வந்தது - அல்லாஹ். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
அல்லாஹ். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது

எப்படி அல்லாஹ் தெரிகிறது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டேன். மேகங்களுக்கிடையே அரபி மொழியில் அல்லாஹ் என உள்ளது என்றார்.

உடனே அந்த விரிப்பை எடுத்து விரித்தேன். அதில் என் தலையைக் கீழே வைத்து வைத்து, என் பாவத்தை மன்னித்து விடுங்கள் என்று அழுதேன்.

அதுதான் திருப்புமுனையாக அமைந்தது. அன்றிரவு செயலியின் வழியாக குர் ஆனை மறுபடியும் படித்தேன். அப்போதும் அது படிக்கக் கடினமாக இருந்தது. பிறகு தான் தோன்றியது, இது கடவுளின் வார்த்தைகள்.
பத்தரை மாற்று தங்கம் என்றால் என்ன? தெரியுமா? உங்களுக்கு !
பிரபஞ்சத்தைப் படித்தவர், குர் ஆன் மூலமாக நம்மிடம் பேசுகிறார் என்றால் அது கடினமாகத் தான் இருக்கும் என்று தனது விளக்கத்தை யுவன் சங்கர் ராஜா அளித்துள்ளார். 
Tags: