பழைய கல்லறைகளைத் தோண்டும் அரசு... கொரோனாவால் உறைந்த பிரேஸில் !

கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக பிரேஸில் உள்ளது. 
பழைய கல்லறைகளைத் தோண்டும் அரசு... கொரோனாவால் உறைந்த பிரேஸில் !

அந்நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ வின் அலட்சியமான நடவடிக்கை களால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை மட்டுமல்லாது, இறந்தவர்களின் எண்ணிக்கை யிலும் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக பிரேஸில் உள்ளது. 
பிரேஸிலில் இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிப்படைந் துள்ளனர். ஏறக்குறைய 42,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு உயிரிழக்கின்றனர். 

ஏற்கெனவே, சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தவர் களைப் புதைக்க வரிசையாகக் குழிகள் தோண்டப் பட்டிருக்கும் காட்சி, பிரேஸிலில் இருந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், தற்போது இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் பிரேஸில் அரசு தவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேஸிலின் மிகப்பெரிய நகரமான சாவோ பவுலோவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி யுள்ளது. 

சுமார் 12 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில், கடந்த வியாழக்கிழமை வரை 5,480 பேர் உயிரிழந்துள்ளனர். 

அந்நகரங்களில் உள்ள மருத்துவ மனைகளில், அதிக அளவில் படுக்கை வசதிகள் குறைந்து கொண்டே வருகின்றன. 

சாவோவின் மேயர் புரூனோ கோவாஸ், பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார். 
இதனால், பொது இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் செல்வதாகவும் போக்குவரத்துகள் நெரிசலுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையால், பாதிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

சுகாதார வல்லுநர்கள் பலரும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரேஸிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடையும் என கணித்துள்ளனர். 

உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட இயக்குநர் ரியான், `பிரேஸிலின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகள் 80% குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

பிரேஸிலில் உள்ள சுகாதார நெருக்கடியைச் சமாளிக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இறந்தவர்களைப் புதைக்கத் தேவையான கல்லறைகளையும் அரசு தயார் செய்து கொண்டிருக்கிறது என்ற செய்தி, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சாவோ பவுலோ நகரத்தில் உள்ள மிகப்பெரிய கல்லறையான விலா ஃபார்மோசாவில், பழைய கல்லறைகளைத் தோண்டி சமீபத்தில் இறந்தவர் களைப் புதைப்பதற்கு ஏற்ற வகையில் கல்லறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப் பட்டவர்களின் எச்சங்களை கல்லறைப் பகுதியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தோண்டி எடுத்து பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வருகின்றனர். 
இந்த எச்சங்கள், அந்தக் கல்லறைப் பகுதிகளில் இருந்து லாரிகளின் மூலமாக வெளியேற்றப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கல்லறையில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவரான அடெனில்சன் கோஸ்டா பேசும் போது, கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால், எங்களின் பணி மிகவும் கடுமையாக மாறி விட்டது. 

இந்தக் கல்லறைகளில் இருந்து எலும்புகளை அகற்றிவருகிறோம். இதனால், என்ன நடக்கப் போகிறது என்பது தெரிய வில்லை. மால்கள், கடைகள் என அனைத்தும் திறக்கப்படுகின்றன. 

நாங்கள் மிகவும் கவலையுடன் உள்ளோம். நாங்கள் பாதிப்பின் உச்சத்தில் உள்ளோம். மக்கள் இதை உணரவே இல்லை. இந்த நிலை முடிந்துவிடப் போவதில்லை. 

மிகவும் கவலைக்குரிய தருணம் இது. ஆனால், இன்னும் பாதிப்புகள் அதிகமாகும்” என்று வருத்தத்துடன் பேசியுள்ளனர். 
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தக் கல்லறையில் சுமார் 1,654 பேர் அடக்கம் செய்யப்ப ட்டுள்ளனர். மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்ணிக்கைகள் இன்னும் வெளியிடப்பட வில்லை.
பழைய கல்லறைகளைத் தோண்டும் அரசு... கொரோனாவால் உறைந்த பிரேஸில் !

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதி லிருந்து சாவோ பவுலோ கல்லறைகளில் தினமும் அதிக அளவில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

கோஸ்டா, கல்லறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, அவர் பணிபுரிந்த இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் அவருடைய உறவினர்களில் ஒருவர் புதைக்கப் பட்டுள்ளார். 
ஆனால், இந்த விஷயம் தனக்குத் தெரியாது எனக் குறிப்பிடுகிறார், கோஸ்டா. அடுத்த நாள்தான் இதைக் கண்டுபிடித்ததாக வும் கூறியுள்ளார். 

`கல்லறைகளில் பணிபுரிபவர்கள் எதையும் பார்த்து அச்சப்பட மாட்டார்கள் என்று மக்கள் கூறுவதுண்டு. ஆனால், இந்த கொரோனா வைரஸ் அவர்களையும் அச்சப்படுத்தி யுள்ளது" என்கிறார், கோஸ்டா.... விகடன்...
Tags: