அட்லாண்டிக்கும் பசிபிக் பெருங்கடலும் கலக்கவில்லை ஏன்?

உண்மையில் இது அட்லாண்டிக் பசிபிக் சங்கமம் அல்ல. கடல்கள், பெருங்கடல்கள் என்றெல்லாம் வகை பிரித்து பெயர் சூட்டியதெல்லாம் மனிதன் தான். நம் வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டவையே.
அட்லாண்டிக்கும் பசிபிக் பெருங்கடலும் கலக்கவில்லை

இயற்கையாகவே எந்தவொரு வேறுபாடும் கிடையாது. கடலுக்கு நடுவில் எல்லைக்கோடோ, தடுப்புச்சுவரோ எதுவும் இல்லை.

புவியியல் ரீதியாக பார்த்தால் கூட நாம் கடல்களை வகைப்படுத்தும் முறைக்கும் நிலத்தட்டுகளின் (tectonic plates) அமைப்புக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.
அப்படி என்றால் அந்த படத்தில் காட்டப் பட்டுள்ளது என்ன? அந்த இணைப்பிலேயே இதற்கு பதிலும் உள்ளது. அதை இங்கு சுருக்கமாகச் சொல்கிறேன்.

கொடுக்கப் பட்டுள்ள அந்த படம் அலாஸ்கா வளைகுடாவில் எடுக்கப்பட்டது.

அவ்வாறு கலக்காமல் காணப்படும் தண்ணீரில் வலது பக்கத்தில் சற்றே வெளுத்த நிறத்தில் இருக்கும் தண்ணீர் அலாஸ்காவின் பனியாறுகள் மற்றும் பனிப்பாறைகள் உருகியதால் உருவான தண்ணீர்.

அந்த தண்ணீரின் வெப்பநிலை (temperature), திணிவு (density), உப்புத்தன்மை (salinity) போன்றவை எல்லாம் சாதாரண கடல் தண்ணீரைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும்.

இதனால் அவை ஒன்றோடொன்று கலக்கும் வேகம் (rate of diffusion) குறைவாக இருக்கும். இதுவும் இறுதியில் கலந்து விடும்.

காலத்துக்கும் இப்படியே இருக்காது. கலக்கும் வேகம் குறைவு என்பதால் சில பல நாட்கள் ஆகலாம்.

இந்த புகைப்படம் கென் ப்ருன்சென் என்ற கடல்சார் அறிவியல் (oceanic sciences) துறை பேராசிரியர் ஒருவரால் எடுக்கப்பட்டது.

அவர் அலாஸ்கா கரையி லிருந்து கடலுக்குள் பாயும் எட்டி (eddy) என்ற ஒரு வகையான குறைந்த வேக அலைகளைப் பற்றி ஆய்வு செய்ய கடலுக்குள் சென்றிருந்தார்.
பல் வலி வராமல் இருக்கனுமா அப்ப இதை சாப்பிடுங்க !
அப்போது எதேச்சையாக இந்த வினோதமான காட்சியை கண்டு அதனை படம் பிடித்தார்.

மேலும் ஒரு விஷயம். உலக வரைபடத்தில் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் சங்கமிக்கும் இடம் (சிவப்பு வட்டம்) அர்ஜென்டினா -சிலி நாடுகளுக்கு தெற்கே உள்ளது.

அலாஸ்காவுக்கு (பச்சை வட்டம்) அது கிட்டத்தட்ட 15,000 கி.மீ. அப்பால் உள்ளது.

Tags: