நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?





நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ரம்லான் நோன்பு இருப்பவர்களை நாம் கட்டாயம் பார்த்திருப்போம். இந்த வருடமும் ரமலான் விரதங்கள் தொடங்கி விட்டன.
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
அதிகாலையில் சூரிய உதயம் உண்டாகும் முன்னதாகவே சாப்பிட்டு விட்டு, பின்னர் நாள் முழுக்க தண்ணீர் கூட குடிக்காமல், எச்சில் விழுங்காமல் விரதம் இருப்பார்கள்.

உடல் நிலைக்கு ஒத்துக் கொள்ளாதவர்கள் மட்டும் தண்ணீர், பால் ஏதாவது குடிப்பார்கள். மாலையில் தான் மீண்டும் உணவு அருந்தும் மிகக் கடினமான விரத முறை அது.
ரமலான் நோன்பு

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருப்பது வழக்கம். 

கடந்த சில வருடங்களாக வடதுருவப் பகுதிகளில் தான் மலான் நோன்பு கடைபிடிக்கப் படுகிறது. இந்த கோடை காலத்தில் தான் பகல் பொழுது நீளமானதாக இருக்கும். 
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
அப்படி இருக்கும் போது பகல் முழுவதும் சாப்பிடாமல் நோன்பு இருப்பது உடலுக்கு நல்லதா? 

அப்படி நம்பிக்கையின் அடிப்படையில் இருக்கப்படும் அந்த நோன்பினால் நம்முடைய உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்பது பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.
நோன்பு நிலை உடல்

நோன்பு இருப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. நம்முடைய உடலும் எடுத்ததும் நோன்பு நிலைக்குச் சென்று விடாது. 
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
அதற்கு நம்முடைய உடலை நாம் தயார்படுத்த வேண்டும். நோன்பு சமயங்களில் நம்முடைய உடலின் செயல்பாட்டுக்கு ஏற்ப உடலில் ஆற்றல் சேமிக்கப்பட வேண்டும். 

கடைசியாக நாம் சாப்பிட்ட உணவை நம் உடலில் தங்கி யிருக்கும். அது தான் நம்முடைய செயல் பாட்டுக்காக செலவிடப்படும்.

உடல் எடை

நம்முடைய கல்லீரலில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் குளுக்கோஸின் மூலம் உடல் இயங்கத் தொடங்கும். 
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
இந்த குளுக்கோஸ் முற்றிலும் தீர்ந்த பின்னர் தான் உடலில் உள்ள கொழுப்புகளைக் கொண்டு செயல்படத் தொடங்கும். 
கொழுப்பின் மூலம் உடல் இயங்கத் தொடங்கும் போது தான் நம்முடைய உடல் எடை குறையத் தொடங்கும். தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்படும்.

ரத்த சர்க்கரை

கொலஸ்ட்ரால் அளவு குறைந்து நீரிழிவு நோய் அபாயமும் குறையத் தொடங்கும். ஆனால் அதே சமயம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் உடல் பலவீனப்படும். 
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
இந்த காலக்கட்டத்தில் தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பசி அதிகமாகும் போது இப்படி நடப்பது இயல்பு தான்.

நோன்பின் 3 ஆம் நாளுக்கு பின்

நோன்பின் 3 ஆம் நாளில் இருந்து உடல் வறட்சி பற்றிய கவனம் தேவை. தொடர்ந்து விரதம் இருக்கிற பொழுது, கொழுப்பு உணவுகள் உடைந்து ரத்தத்தில் கரைந்து சர்க்கரையாக மாற்றப்படும். 
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
இரண்டு நோன்புகளுக்கு நடுவே ஆகாரம் உண்ணும் காலகட்டங்களில் நீராகாரமாக நிறைய எடுத்துக் கொள்வது நல்லது. 

இல்லை யென்றால் உடல் வறட்சி ஏற்பட்டு விடும். எடுத்துக் கொள்ளும் உணவில் கார்போ ஹைட்ரேட்டும் கொழுப்பும் சரியான அளவில் எடுத்துக் கொள்வது மிக அவசியம். 
அதே போல், புரதம், உப்பு, நீர்ச்சத்து போன்ற வற்றிலும் கவனம் கொள்ளுதல் வேண்டும்.

எட்டாம் நாள்

நோன்பு தொடங்கப் பெற்று எட்டாம் நாளில் இருந்து நோன்புக்கு ஏற்றபடி நம்முடைய முழு தகவமைப்பையும் பெற்றுவிடும். 
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
அப்படி தகவமைக்கப் பட்ட பின் இருக்கும் நோன்பில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கலோரிகள் அளவு

சாதாரண நாட்களில் நாம் எடுத்துக் கொள்ளும் அதிக அளவிலான கலுாரிகள் நம்முடைய உடல் பிற வேலைகளைச் செய்வதைத் தடுத்து விடுகிறது. 
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
அதனால் உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்வதும் இதனால் தடைபடுகிறது. 

ஆனால் நோன்பு காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் குறைந்த கலோரிகள் இந்த பிரச்சினைகளை சரி செய்து விடும்.

தற்காப்பு நிலை
நோன்பு என்பது நமக்கு உண்டாகும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற் காகவும் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் பேருதவி புரிகிறது.

கடைசி 15 நாட்கள்

நோன்பின் கடைசி 15 நாட்களில் நோன்பு செயல்முறைக்கு நம்முடைய உடல் முற்றிலும் மாறியிருக்கும். 
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தோல் ஆகியவை இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றி வெளியேற்றும்.

ஆற்றல் மாற்றம்

நம்முடைய உடலானது புரதத்தை எரித்து ஆற்றலாக மாற்றிக் கொள்ளும். தசைகளிலில் இருந்து ஆற்றலை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். 
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
குறிப்பாக ரமலான் விரதத்தில் சூரிய உதயம், மறைவு இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சாப்பிடுவதால் என்ன உணவைச் சாப்பிடுகிறோம், 
அதன் அளவுகளை முறையாகப் பின்பற்றுவதும், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமான எடுத்துக் கொள்வதும் அவசியம்.
Tags: