கொரோனா வைரஸை விரட்டியடிக்க இந்தியா செய்த வித்தை என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸை விரட்டியடிக்கும் விஷயத்தில், உலகின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது. கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலகமே ஆடி போயுள்ளது. 
கொரோனா வைரஸை விரட்டியடிக்க


தற்போது வரை உலகம் முழுவதும் 8,978 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 2,19,763 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மற்றவர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக, கொரோனா வைரஸ் நோயாளிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 85,751 பேர் மீண்டு வந்திருந்தாலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருவதால், பொது மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது. 

சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பலி எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
மேற்கண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது என்பது நமக்கு கொஞ்சம் ஆறுதலான ஒரு விஷயம் தான். 

இத்தனைக்கும் மேற்கண்ட நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், இந்தியாவில் தான் மக்கள் அடர்த்தி மிகவும் அதிகம் (சீனாவை தவிர). எனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும் அந்த விபரீதம் அரங்கேறி விடாமல், மத்திய அரசு உறுதியாக போராடி வருகிறது. இந்தியாவில் 168 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. மத்திய அரசுக்கு உறுதுணை யாக மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க


இதன்படி பள்ளி, கல்லூரிகளு க்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்தி வைப்பு, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை என இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக் குரியது. 

மிக முக்கியமாக விமான நிலையங் களை சுகாதார துறை அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகின்றனர்.

அத்துடன் பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்திய அரசாங்கம் தவற வில்லை. இந்தியாவில் செல்போன் காலர் ட்யூன் வாயிலாகவும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

முதலில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏற்படுத்தப் பட்ட இந்த விழிப்புணர்வு தற்போது தமிழிலும் மேற்கொள்ளப் படுவது சிறப்பான ஒரு விஷயம்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்காக மத்திய அரசுக்கு பாராட்டுக்களும் வர தொடங்கி யுள்ளன. 

குறிப்பாக ஐஆர்எஃப் எனப்படும் சர்வதேச சாலை கூட்டமைப்பு (IRF - International Road Federation), இந்திய அரசாங்கத்திற்கு பாராட்டுக் களை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்திய அரசு எடுத்து வரும் விரைவான நடவடிக்கை களை வரவேற்பதாக சர்வதேச சாலை கூட்டமைப்பு கூறியுள்ளது. 

அதே சமயம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் அவர்கள் விடுத்துள்ளனர். அதாவது சாலை விபத்துக் களையும் இதே போன்று கருதி உயிரிழப்பு களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐஆர்எஃப் வலியுறுத்தி யுள்ளது.

இது குறித்து ஐஆர்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா பரவுவதை தடுக்கவும், நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை களை போன்று, 

சாலை விபத்துக் களை தடுக்கவும் இந்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என வலியுறுத்து கிறோம்' என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து ஐஆர்எஃப் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் 4.67 லட்சம் சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில், 1.51 லட்சம் பேர் உயிரிழந் துள்ளனர். 

அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 417 பேர் சாலை விபத்துக் களால் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட உடனேயே மத்திய, மாநில அரசுகள் விழித்தெழுந் துள்ளன.

கொரோனா பரவுவதை தடுப்பதற் காக இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை களை எடுக்கின்றன. 

கொரோனா பரவுவதை தடுப்பதற் காக இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை


சாலை விபத்துக்களில் உயிரிழப்பு களை தடுப்பதற்கும் இதே போன்று நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என இந்திய அரசாங்கத்தை ஐஆர்எஃப் வலியுறுத்தி கொள்கிறது' என்றனர்.
டூவீலர்களில் பயணிப்பவர்கள் தலை கவசம் அணிவது, ஆக்கிரமிப்பாளர் களிடம் இருந்து நடை பாதைகளை மீட்பது, பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது, 

சாலை பாதுகாப்பு தணிக்கைளை ரெகுலராக மேற்கொள்வது மற்றும் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகிய எளிய நடவடிக்கைகள் மூலம் விபத்து உயிரிழப்பு களை தடுக்கலாம் என ஐஆர்எஃப் கூறி யுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறை களை பின்பற்றுவ தில்லை. சாலை விபத்துக் களுக்கு இதுவே முக்கியமான காரணமாக உள்ளது. 
இதற்கு அடுத்த படியாக குண்டும், குழியுமான சாலைகளும் விபத்துக்க ளுக்கு ஒரு காரணமாக உள்ளன. 

இந்த 2 பிரச்னை களையும் தீர்க்க உண்மையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை களை தற்போது எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் மத்திய அரசால் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக் கான அபராதங்கள் கடுமையாக உயர்த்தப் பட்டுள்ளன. 
சாலை போக்குவரத்து


அதே போன்று தரமான சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக தரவுகளின் படி, இந்தியாவில் இருக்கும் வாகனங்களில் 72 சதவீத வாகனங்கள் டூவீலர்கள் ஆகும். 

அதே சமயம் 24 சதவீத வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்க ளாக உள்ளன. சாலை விபத்துக்களால் உயிரிழப் பவர்களின் மொத்த எண்ணிக்கையில் டூவீலர்களின் பங்களிப்பு 35 சதவீதமாக உள்ளது.
அதே சமயம் நான்கு சக்கர வாகனங்களின் பங்களிப்பு 18 சதவீதமாகவும், லாரிகள் மற்றும் இதர கன ரக வர்த்தக வாகனங்களின் பங்களிப்பு 11 சதவீத மாகவும், பாதசாரிகளின் பங்களிப்பு 10 சதவீதமாகவும் இருக்கிறது. 

விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதில், அரசாங்கத்திற்கு உதவும் கடமை நம் அனைவரு க்குமே உள்ளது என்பதை எல்லோரும் உணர வேண்டிய நேரமிது.
Tags: