7 பேரை மணந்த சப்-இன்ஸ்பெக்டர் - 20 பேரிடம் பாலியல் வன்புணர்வு !

0
சென்னை எழும்பூரை சேர்ந்தவர் கவிதா(பெயர் மாற்றப் பட்டுள்ளது-வயது 24). பட்ட தாரியான இவர் சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார். 
20 பேரிடம் பாலியல் வன்புணர்வு



கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி அன்று கவிதா வழக்கம் போல சந்தோஷமாக வேலைக்கு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர் கவிதா வேலை பார்த்த கம்பெனிக்கு சென்று பார்த்தார்கள். 

உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தேடினார்கள். கவிதா என்ன ஆனார் என்று தெரிய வில்லை. பின்னர் கவிதாவின் பெற்றோர், எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள்.
எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்குப்பதிவு செய்து கவிதாவை தேடி வந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் கவிதாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்தி கவிதாவை துரிதமாக கண்டுபிடிக்க வேண்டும் என்று, ஐகோர்ட்டு உத்தர விட்டது.

அதன் பேரில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், இந்த வழக்கில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் சுகுநாத் சிங் ஆகியோர் மேற் பார்வையில், 

எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ் பெக்டர்கள் அய்யப்பன், ருத்ரசுதா ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படை அமைத்து உத்தர விட்டார்.

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கவிதா வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜேஷ் பிரித்வி (29) என்பவர் கவிதாவை கடத்திச் சென்று திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது.

ராஜேஷ் பிரித்வியின் சொந்த ஊரான திருப்பூர் அருகே உள்ள நொச்சி பாளையத்தில் கவிதாவை ஒரு வீட்டில் சிறை வைத்திருப்ப தாகவும் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்தனர். 
கவிதா சிறை வைக்கப்பட்ட வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். கவிதாவை போலீசார் பத்திரமாக மீட்டனர். கவிதாவோடு தங்கி யிருந்த ராஜேஷ் பிரித்வி போலீஸ் கையில் சிக்காமல், தப்பி ஓடிவிட்டார். 

மீட்கப்பட்ட கவிதா ஐகோர்ட்டு மூலம், அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டார். அடுத்த கட்டமாக ராஜேஷ் பிரித்வியை கைது செய்ய தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை யில் இறங்கினார்கள்.
7 பேரை மணந்த சப்-இன்ஸ்பெக்டர்



ராஜேஷ் பிரித்வியின் செல்போனில் கவிதாவை பேச வைத்து, கவிதாவின் வீட்டிற்கு ராஜேஷ் பிரித்வியை நேற்று வரவழைத்தனர். 

ராஜேஷ் பிரித்வி நேற்று கவிதாவின் வீட்டிற்கு வந்து, அவரை தன்னோடு வரும்படி அழைத்தார். தன்னோடு வராவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டலில் ஈடுபட்டார்.
அப்போது தனிப்படை போலீசார் கவிதாவின் வீட்டிற்கு சென்று, ராஜேஷ் பிரித்வியை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப் பட்டது. அவரைப் பற்றி அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது. 

இது பற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ராஜேஷ் பிரித்வி 7-வது வகுப்பு வரை தான் படித்துள்ளார். ஆனால் பல்வேறு பெயர்களில், பல்வேறு படிப்புகளை படித்துள்ள தாக கூறி ஏராளமான பெண்களை தனது காதல் வலையில் விழ வைத்து, அவர்களது கற்பை சூறையாடி யுள்ளார். 

அவர் ஒவ்வொரு ஊரிலும், பல பெயர்களில் தினேஷ், ஸ்ரீராமகுரு, தீனதயாளன், ராஜேஷ் பிரித்வி என்று வலம் வந்துள்ளார். சில ஊர்களில் தன்னை எம்.பி.ஏ. பட்டதாரி என்றும், என்ஜினீயர் என்றும், டாக்டர் என்றும் பந்தாவாக கூறியுள்ளார்.

ஏற்கனவே 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி, கோவை, திருப்பூர், ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி ஆகிய போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழக்கு உள்ளது. 
திருப்பதி போலீஸ் நிலைய வழக்கில் இவர் கோர்ட்டில் சிறை தண்டனை பெற்றுள்ளார். காளஹஸ்தி போலீசார் இவரை கோவையில் கைது செய்த போது போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடி யிருக்கிறார். 

இதற்காக காளஹஸ்தி போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.



7-வது திருமணம் செய்ய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேடத்தில் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை குற்றப்பிரிவு போலீசில் வேலை செய்வதாக போலீஸ் சீருடையில் பந்தாவாக வலம் வந்துள்ளார். 

தான் 2 குற்றவாளி களை என்கவுண்டர் முறையில் சுட்டு தள்ளி யிருப்பதா கவும் இவர் கதை விட்டுள்ளார். சப்- இன்ஸ்பெக்டர் வேலையை ராஜினாமா செய்யப் போவதாக சொல்லி, அமைந்த கரையில் கால்சென்டர் நிறுவனம் தொடங்கி யுள்ளார். 
அதுவும் போலியான நிறுவனம் தான். 20-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடைசியாக இவர் விரித்த வலையில் கவிதா மாட்டி யிருக்கிறார்.

இவரிடம் 100-க்கும் மேற்பட்ட செல்போன் சிம்கார்டுகள் உள்ளன. போலி ஆதார் அட்டை, போலி சப்- இன்ஸ்பெக்டர் அடையாள அட்டை, போலி வாக்காளர் அட்டை மற்றும் கைதிகளுக்கு போடும் கைவிலங்கு, போலீஸ் சீருடை ஆகிய வற்றை இவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளோம்.

மருத்துவ கல்லூரிகளில் சீட்டு வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட் டுள்ளார். அது தொடர்பாக இவர் மீது அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் 15 பேர் புகார் கொடுத்துள்ளனர். 

இவரை தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து விட்டு, மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும்.
இவரது காதல் லீலைகள், மோசடி லீலைகள் பற்றி முழுமையாக விசாரணை நடத்துவோம். இனிமேல், இவர் இதுபோன்ற குற்றங்களை செய்யாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)