உங்கள் கோபத்தை குறைத்தால் லாபமே !

0
உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர் பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். 
கோபம் உருவாக காரணம்
நம்பிக்கை யின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்க ளால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். 

எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக் கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.
குழந்தைகள் கோபப்பட்டால் என்ன செய்ய?
பலரும் தங்கள் கோபத்தின் காரணத்தை உணராமல் இருக்கிறார்கள். சகிப்புத் தன்மை குறைவே கோபம் வெளிப்பட காரணமாகும்.

கோபம் ஏற்படும் போது மூளையை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், ‘அமிக்டாலா’ என்ற பகுதியில் இருந்து கோப உணர்வுகள் வெளிப்படுவதை கண்டு பிடித்தனர். 

உற்சாகம் தரும் விஷயங்களில் மனதை ஈடுபடுத்தினால் இந்த அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை குறைத்து கோபத்தை கட்டுப்படுத்தி விடலாம் என்றும் அவர்கள் கண்டு பிடித்தனர்.

உடலில் செரொடானின் ரசாயனப் பொருள் அதிகமானால் தீவிர மனப்போக்கு தூண்டப்படும். இதுவே கோபம், எரிச்சல், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை தூண்டுகின்றன. 

செரோடானின் திரவத்தை கட்டுப் படுத்தினால் அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை தடுத்து கோபத்தையும் இல்லாமல் செய்து விடலாம்.
எதிர்மறை உணர்வு
கோபமானது அட்ரினலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை அதிகமாக தூண்டுகின்றன. இவை ஒரு வகையில் உடலுக்கு சில நிமிடங்க ளுக்கு தீவிர ஆற்றலை வழங்குகின்றன. 

அதனால் கோபம் அளவாக வரு வது நல்லது தான் என்று சொல்லப் படுகிறது. அளவுக்கு அதிகமான கோபமே, உடல் எந்திரத்தின் வேகத்தை அதிகமாக்கி எளிதில் சூடாக்கி விடுகிறது. அது பலவித சிக்கல்களை தந்து விடுகிறது.

கோபம் உணர்வுகளின் வடிகால் என்றும் கருதப் படுகிறது. கவலை, வலி, ஏமாற்றம் போன்ற வேதனையான உணர்வுகளின் வடிகாலாக கோபம் வெளிப்படுவ தால் அது கொடிய உணர்வல்ல என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 

எனவே மற்றவர்களை காயப் படுத்தாத அளவுக்கு கோபத்தை வெளிப் படுத்துவது ஒன்றும் தவறல்ல.
கோபம் நமது திறன்களை பாதிக்ககக் கூடியது. கோபத்துடன் தொடர்புடைய ரசாயனப் பொருட்கள் மூளை செல்களை அழிக் கிறது. மேலும் புதிய மூளை செல்கள் வளர்வதையும் தடுக்கிறது. 

இதனால் கோபமானது நமது நினைவுத் திறனில் தடுமாற்றத்தை உருவாக்கும். உலகில் சரி பாதிக்கும் மேலானவர்கள் கோப வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.

கோபத்தின் விளைவால் பகை, விரோதம், உறவு முறிவு, போர்கள், வன்முறைகள் நிகழ்வதால் கோபம் கட்டுப்படுத்தக் கூடிய உணர்வாக வலியுறுத்தப் படுகிறது. 

கோபம் அழிவின் பாதை என்பது அனைத்து மத போதனை களிலும் சொல்லப் பட்டுள்ளது. ஆண்களைவிட பெண்கள் கோபக்காரர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. 

அவர்கள், ஆண்களைவிட 12 சதவீதம் அதிகமாக கோபத்தை வெளிப்படுத்து கிறார்களாம். ஆனால் கோபத்தின் விளைவாக ஆண்களே அதிகமாக வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 

போதைப் பழக்கம் கோப உணர்வை அதிகமாகத் தூண்டி கொடுமை யானதாக மாற்றும் என்றும் ஆய்வு கூறுகிறது.
போதைப் பழக்கம்
கோபத்தால் ஏற்படும் மன அழுத்தம் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளதாம். எனவே கோபம் கொள்ளக் கூடாது. வீடியோ கேம்ஸ் விளையாட்டுகள் கோபத்திற்கும், தீவிர உணர்வு களுக்கும் ஒரு காரணம் என்று நம்பப்பட்டது. 

ஆனால் விளையாட்டு நேரத்தில் மட்டுமே அவை தீவிர எண்ணத்தை உருவாக்குவ தாக அறியப்பட்டு உள்ளது. விளையாட்டும், உடற்பயிற்சி யும் கோபத்தை கட்டுப் படுத்தும் என்றே ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 

பழு தூக்கும் பயிற்சியைவிட, நீச்சல் பயிற்சி பலமடங்கு கோபத்தை கட்டுப்படுத்து கிறதாம். உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது என உணர்ந்தால் விளையாட்டிலாவது, உடற்பயிற்சி யிலாவது கவனம் செலுத்துங்கள்.

ஆண்களின் பாலின ஹார்மோன்க ளான டெஸ்டோஸ் டிரோன்கள், கோபத்தை அதிகம் தூண்டுவதாக அறியப் படுகிறது.

டிஸ்னி லேண்ட் உள்ளிட்ட பொழுது போக்கு பூங்காக்கள் நிறைந்த அமெரிக்க நகரங்களான ஆர்லாண்டோ மற்றும் புளோரிடா போன்றவை அதிக கோபக்காரர்கள் வசிக்கும் பகுதியாக கணக் கெடுப்பில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியான உண்மையாகும். 

ரோவியோ நிறுவனம் ‘அங்கிரிபேர்டு’ விளை யாட்டையும், சினிமாவையும் உருவாக்கி புகழ்பெற்றது. 

‘அங்கிரிபேர்டு’ சினிமா அதிகம் வசூல் செய்த சினிமா படங்களில் ஒன்றாக விளங்குகிறது. ‘இன்டர்லுகின்-6’ என்ற வைட்டமின்கள் குறைவு கோபத்தை தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது. 
வைட்டமின் பற்றாக் குறை
இந்த வைட்டமின் பற்றாக் குறையால் இதய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். வைட்டமின்கள் நிரம்பிய காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால் இதன் பற்றாக் குறையை ஈடு செய்யலாம்.

கோபத்தை கட்டுப் படுத்தும் பயிற்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகப் படுத்துவதா கவும் உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் வெற்றி யாளராக உயர விரும்பினால் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

கோபத்தை குறைப்பது எப்படி?

பேசுவதில் கவனம் வையுங்கள். இனிமையாக பேசுங் கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர் மனதை காயப் படுத்தாத வகையில் இருந்தால் அவர்களும் உங்க ளை கோபப்படும் அளவுக்கு காயப்படுத் தமாட்டார்கள்.
விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது மனதை பக்குவப் படுத்தும். சவாலான நேரங்களை யும் எதிர் கொள்ளும் பக்குவத்தை எட்டும்.

சிறிது நேரம் வெளியே சென்று வாருங்கள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். நான் சரியாகத்தான் நடந்து கொண்டேன், எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போன்ற கர்வ நடத்தைகளை தவிருங்கள்.

வேலையில் மூழ்கி மனவருத்தங் களில் இருந்து விடுதலை பெறுங்கள். மூச்சுப் பயிற்சியும் மனநிலை மாற்றத்திற்கு துணை செய்யும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)