முதல் ஏசி ஹெல்மெட் கண்டுபிடித்த இந்திய இளைஞர் !

0
ஹெல்மெட்டில் பயன்படுத்தப் படக்கூடிய சிறிய ரக ஏசியை இந்திய இளைஞர் கண்டு பிடித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
ஏசி ஹெல்மெட் கண்டுபிடித்த இந்திய இளைஞர்
இந்தியர்கள் பெரும் பாலனோர் குளிர்ச்சியான சூழலையே அதிகம் விரும்பு கின்றனர். இதை நாட்டில் விற்பனை யாகும் ஏசியின் எண்ணிக் கையைப் பார்த்தாலே நமக்கு புரிந்து விடும். 

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கடுமையான குளிர்ச்சியான சூழல் நிலவுகின்றது. ஆனால், பெரும்பாலான மாநில மக்கள் கடும் வெயிலில் சிக்கித் தவித்து வருகின்றனர். 
அதே சமயம், ஒரு மாநிலங்களில் வெயில் மற்றும் குளிர் அவற்றின் கடுமையான தாக்கத்தை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. 

ஆகையால், பகலில் ஏசியையும் இரவில் வெப்பத்தையும் மக்கள் நாடி வருகின்றனர்.இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயிலில் நம்மால் பகல் நேரங்களில் பயணிக்கவே முடியாது. 
ஏசி ஹெல்மெட்
அதிலும், ஏசியில்லா வாகனத்தில் பயணிப்பது என்பது மிகவும் கொடுமையான ஓர் விஷயம் ஆகும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்வது கொடுமையிலும் கொடுமை. 

இத்தகைய சூழலுக்கு தீர்வு காணும் விதமாக இளைஞர் ஒருவர் ஹெல்மெட்டில் பயன்படுத்தக் கூடிய ஏசி-யைக் கண்டு பிடித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சந்தீப் தஹியா.
மெக்கானிக்கல் இஞ்ஜினியர் பட்டதாரியான இவர் சிறிய ரக, ஹெல்மெட்டுடன் பொருத்திக் கொள்கின்ற வகையிலான ஏசி-யை கண்டு பிடித்துள்ளார். 
இது குளிர்ந்த காற்றை மட்டு மல்லாமல் சூடான காற்றையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆகையால், இது இந்தியாவின் அனைத்து சீதோஷ்ண நிலையிலும் உதவியளிக்கும். 

முக்கியமாக குளிர் மற்றும் கோடைக் காலங்களில் அது அதிக பட்ச பயனை அளிக்கும். இதற்கு வடனகுள் என்ற பெயரை அவர் வைத்துள்ளார். இது வடமொழி சொல்லாகும்.

இதன் அர்த்தம் ஏர்-கன்டிஷனர் ஆகும். சிறிய ரகத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்த ஏர் கூலர் இயந்திரம், ஒரு தோள்பட்டை பையில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 
ஏர்-கன்டிஷனர்
ஆகையால், ஒரு துளை வழியாக குழாய் மூலம் குளிர்ந்த காற்றை ஹெல்மெட்டிற்கு அந்த இயந்திரம் கடத்துகின்றது. 

இந்த சிறிய ரக ஏசி எப்படி வேலை செய்கின்றது என்பதை அந்த இளைஞர் வீடியோ வாயிலாக விளக்கி யுள்ளார். 

அதனை நீங்கள் கீழே காணலாம்.

சிறிய ரக ஏசி வெறும் 125 கிராம் எடைக் கொண்டதாக இருக்கின்றது. ஹெல்மெட் மற்றும் தோள்பட்டை பை ஆகிய வற்றுடன் சேர்த்து பார்க்கும் போது இதன் எடை 1,800 கிராமாக உயர்கின்றது. 
ஆகையால், இது பெரியளவில் சுமையை உங்களுக்கு வழங்காது. இந்த ஏசி பைக்கின் பேட்டரியில் திறனைப் பெற்று இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 
ஏசி பைக்
ஆகையால், இதற்கான தனி பிளக் பாயிண்ட் வழங்கப் பட்டுள்ளது. மேலும், ஏசியின் அளவைக் கட்டு படுத்தும் வகையில், சிறிய கன்ட்ரோல் ஸ்விட்ச் நிறுவப் பட்டுள்ளது. 

இது தேவைக்கேற்ப ஏசியின் அளவை கூட்டியோ அல்லது குறைத்தோ பயன்படுத்திக் கொள்ள உதவும். ஆகையால், இதனைக் கட்டு படுத்திக் கொள்ளும் இரு விதமான மோட்கள் வழங்கப் பட்டுள்ளன. 
அதில், குளிர்ச்சியான மோடை பயன்படுத்து ம்போது நீல நிற மின் விளக்கும், சூடான மோடை பயன்படுத்தும் போது சிவப்பு நிற மின் விளக்கும் எரிகின்றது. 

இது இயந்திரத்தின் தன்மையை வெளிப்படுத் துவதுடன், உணர்விற்கு சூழலை மாற்றி யமைக்கின்றது.
டிசி பவர் மூலம் இயங்குகின்றது
இந்த சிறிய ரக ஏசி 12 வோல்ட் திறன் கொண்ட டிசி பவர் மூலம் இயங்குகின்றது. இந்த திறனை பைக்கின் பேட்டரியில் இருந்து அது பெற்றுக் கொள்கின்றது. 

இந்த பயன்பாட்டால் பைக்கின் பேட்டரிக்கு ஏதேனும் கேடு ஏற்படுமா என்பது தெரியவில்லை. அதே சமயம், அந்த பேட்டரி கூடுதல் திறனை வெளிப்படுத்தும் வகையில் மாற்றி யமைக்கப் படவும் இல்லை. 

சந்தீப் ஒரு எம்என்சி நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வருகின்றார். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது பெங்களூரு ஆர்டி நகரில் வசித்து வருகின்றார்.
ஏசி ஹெல்மெட்
தன்னுடைய பணி நேரத்தைத் தவிர்த்து நேரங்களில் பைக்கு களைப் பயன் படுத்துவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். 

அவ்வாறு, பைக்கை பயன்படுத்தும் போது ஏற்பட்ட சிரமத்திற்கு முற்றிலுமாக இந்த பயனுள்ள ஹெல்மெட் ஏசியை அவர் கண்டு பிடித்துள்ளார்.
இந்த ஏசியை உருவாக்குவ தற்காக கடந்த நான்கரை ஆண்டுகளாக இவர் பணியாற்றி வந்ததாக கூறப்படு கின்றது. 

அந்த வகையில், இது வரை அவர் 8க்கும் மேற்பட்ட மாடல்களை உருவாக்கி யிருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. 

தற்போது, சந்தீப் அதில் ஒன்றை தான் அவரது பயண நேரத்தின் போது பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)