லிபோமா எனப்படும் கொழுப்பு கட்டி கரைய மருத்துவம் !

0
சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலை தான் இது. 
லிபோமா எனப்படும் கொழுப்பு கட்டி கரைய மருத்துவம் !
இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிக ளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும்.

சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டு மானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டு பிடிக்கப்பட வில்லை.
மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப் படியான கொலஸ்ட்ரால் போன்ற வற்றால் வர வாய்ப்புள்ள தாக கருதப் படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. 

அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும். இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சை களைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப் பார்கள். 

இருப்பினும் இந்த சிகிச்சைக ளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது.

அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளது, மேலும் இவற்றில் உள்ள அமிலத் தன்மை, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பயன் படுகின்றது. 
லிபோமா எனப்படும் கொழுப்பு கட்டி கரைய மருத்துவம் !
எனவே கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.

ஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெ யில் அந்த முடிப்பை தோய்த்து, 

ஒரு தோசைக் கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.

கொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகை யாகும். இந்த மூலிகையால் செய்யப்பட்ட தைலம் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.

இதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.
கொழுப்பு கட்டி கரைய வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து, இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)