ஆபத்தான சமூக வலைதளங்கள் !

0
சமூக வலை தளங்களில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் 3 வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.
ஆபத்தான சமூக வலைதளம்




சமூக வலை தளங்களில் பரவும் போலியான செய்திகள் மற்றும் போலி கணக்குகள் மூலம் நடக்கும் தனிநபர் தாக்குதலை கட்டுப் படுத்த சமூக வலை தளங்கள் மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை கட்டு பாட்டுக்குள் இருக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சமூக வலை தளங்களில் ஆதார் எண்ணை இணைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தரப்பில் கூறியதாவது: 

சமூக வலை தளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானதாக மாறி வருகிறது. சமூக வலைதள குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 




இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் செய்தி களுக்கு வழிகாட்டுதல் களை மத்திய அரசு உருவாக்க வேண்டும். 
இவ்வாறு நீதிபதிகள் கூறினர். வழிகாட்டுதல் முறைகளை 3 வாரத்திற்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்த ரவிட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)