வீட்டு வாடகையாக உறவு போதும் !

0
இளம் வயதினர் மற்றும் பாதிக்கப் படக்கூடியவர் களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந் துள்ளது.
வீட்டு வாடகையாக செக்ஸ்




கிரேய்க்ஸ் லிஸ்ட் போன்ற இணைய தளங்களில் இது போன்ற விளம்பரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவை தான். 

ஆனால், இது போன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணி த்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கைல் இதனை சட்ட விரோதமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
வாடகைக்கு பதிலாக பாலியல் உறவு என்ற தனக்கு இருந்த ஒரே வழியை நினைத்து தான் எப்படி உணர்ந்தார் என்பதை வர்ணிக்கிறார் மாணவி ஒருவர்.

அவர் என்னை வீட்டிலிருந்த அறைக்கு அழைத்து சென்றார், குடிப்பதற்கு பானம் வழங்கினார். அதன் பிறகு என்னை மேல் தளத்திற்கு அழைத்து சென்று அறையை காட்டினார். என்றார் அந்த பெண்.

தொடர்ந்து பேசியவர், தான் என்ன செய்ய நினைத்தாரோ அதை கட்டாயப் படுத்தி செய்வார். எனக்கும் அது பழக்கப்பட்டு விட்டது. மூன்று முறை உறவுக்குப் பிறகு, நான் உடல் ரீதியாக சுகவீனம் அடைந்து விட்டேன்.
 மூன்று முறை உறவு
மெயிட்ஸ்டோனி லிருந்து நபர் ஒருவர் தன் பெண் தோழியைப் போல நடித்து தன்னுடம் தங்கிக் கொள்ள பெண் ஒருவர் வேண்டும் என்றும், 

மற்றொரு விளம்பரத்தில் இளம் ஆண்களை குறி வைத்து சேவைகள் பதிலாக ரோசெஸ்டர் மற்றும் பிரைட்டனில் அறைகள் உள்ளன போன்ற விளம்பரங் களை பிபிசியால் பார்க்க முடிந்தது.




தன்னுடன் தங்க 'குறும்புக்கார பெண்' வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரப் படுத்தி யிருந்தார்.
இவ்வாறான விளம்பரங் களை பதிந்துள்ள உரிமை யாளர்கள் இந்த வேலை எப்படி ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்  டுள்ளனர்.

வாரத்திற்கு ஒருமுறை என்று நினைக்கிறேன் அதுமாதிரி, பாலியல் உறவு இருக்கும் வரை எனக்கு சந்தோஷம் தான் என்றார் வீட்டு உரிமையாளர் ஒருவர்.
படத்தின் காப்புரிமை தன்னுடைய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கை உடன் பிபிசியிடம் பேசிய வீட்டு உரிமையாளர் ஒருவர், இது போன்ற விளம்பரங் களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி இதனால் இருதரப்பின ருக்கு நன்மையே என்றார்.

காலியாக இருக்கும் வீட்டிற்கு அதிக வாடகை வாங்குவது குறித்து கூட சாதக மாக்கிக் கொள்வது குறித்து நீங்கள் வாதிடலாம். கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுப்பட வேண்டும் என்று கட்டாய மில்லை. 

இதில் உள்ள உண்மை நிலையை அறிந்தே தான் எல்லோரும் இதில் செல்கிறார்கள். நான் அதில் கடைசி வகையான நபர், சூழலை சாதகமாக்கிக் கொள்ள நினைப்பவன். 
இருதரப்பும் மற்றவர் என்ன விரும்புகிறார் என்பதை ஒருவருக் கொருவர் தெரியும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமு மில்லை. பிரைட்டன் ஓயாசிஸ் திட்டத்தி லிருந்து பெண் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மெல் போட்டர் இதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளார்.
வாடகை செக்ஸ்




மேலும், இவ்வகை யான விளம்பரங்கள் ஒருவரை சிக்க வைக்கும் திறன் படைத்தது மட்டுமின்றி வன்முறை மற்றும் வன்கொடுமை ஏற்படுவ தற்கான அபாயங்களும் அதிகம் என்று கூறியுள்ளார்.

அன்சீன் என்ற அடிமை எதிர்ப்பு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அண்ட்ரூ வாலிஸ் கூறுகையில், இது போன்ற விளம்பரங்கள் சட்டத்தை மீறாத வகையில் சட்ட விளிம்பிற்கு நெருங்கி செல்கிறது.
இதை தன்னார்வமாக தேர்ந்தேடுத் துள்ளதாக சம்பந்தப் பட்டவர்கள் வாதிடுவார்கள். சுலபமாக பாதிக்கக்கூடிய நபர் இருக்கும் போது தான் பிரச்சனை தொடங்குகிறது, அப்போது தேர்வுக்கான கருத்து மறைந்து விடுகிறது.

வீடற்ற தொண்டு நிறுவனமான சென்டர் பாயிண்ட்டை சேர்ந்த பால் நோப்லெட், இணையதள உரிமை யாளர்கள் இது மாதிரியான விளம்பரங் களுக்கு தங்களுக்கு தாங்களே ஒரு விதியை பின்பற்றி அதன் மூலம் விளம்பரங்களை கண்காணித்து அகற்ற வேண்டும் என்று கூறி யுள்ளார்... பிபிசி....
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)