சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் !

0
சிகரெட் பிடிப்பதனை நிறுத்துவதற்கு பழக்கப் பட்ட பலருக்கும் ஒருவித அச்சம் இருக்கின்றது. ஆனால், உறுதியாய் முழு மனதாய் இதனை தைரியமாய் செய்யும் அநேகருக்கு...
சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால்



* உடல் சக்தி கூடுகிறது.

* வாசனை, சுவை இவற்றினை நன்கு அறிய முடிந்தது.

* சரும நிறம் கூடியது.

* சுய மரியாதையும், சுய நம்பிக்கையும் கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் மருத்துவ ரீதியாக
* சிகரெட்டை நிறுத்திய 20 நிமிடங்களிலேயே நாடித்துடிப்பு சீராகின்றது.

* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீர்படுகிறது.

* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் நிகோடின் அளவு 90 சதவீதம் குறைகிறது.

* 24 மணி நேரத்தில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப் படுகின்றது.

* இருதய பாதிப்பு அபாயம் குறையத் தொடங்குகின்றது.

* 48 மணி நேரத்தில் சுவை, வாசனை இவற்றினை நன்கு உணர முடிகிறது.

* 5-10 நாட்களில் புகை பிடிக்க வேண்டும் என்ற வெறி வெகுவாய் குறைகிறது.

* 72 மணி நேரத்தில் நுரையீரல் எளிதாய் சுவாசிக்கிறது.

* 2-12 வாரங்களில் இருமல், மூச்சு வாங்குதல் வெகுவாய் குறைகின்றது.

* உடல் செயல்பாடுகள் எளிதாகின்றது.

சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள்

மூன்று முதல் ஒன்பது மாதங்களில்

* மூக்கடைப்பு

* சோர்வு

* சைனஸ்



* மூச்சு வாங்குதல்

* சுவாச மண்டல தாக்குதல்கள் மறைந்தே போகின்றன

ஐந்து வருடங்களில்

* பக்க வாத அபாயம் வெகுவாய் குறைகின்றது.

* உடல் தன்னைத் தானே ஆற்றிக் கொண்டு ரத்த குழாய்கள் சீராய் செயல்பட தொடங்குகின்றன.
ஒரு வருடத்திலேயே சளியினை வெளி தள்ளும் சக்தியினை நுரையீரல் பெறுகின்றது.

சிகரெட், புகையிலை நிறுத்திய 10 வருடத்தில் தொண்டை, வாய், கணைய புற்றுநோய் பாதிப்பு வாய்ப்புகள் 50 சதவீதம் குறைகின்றன.

15 வருடத்தில் இருதய நோய் பாதிப்புகள் குறைகின்றன.

இருபது வருடத்தில் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)