பலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

பலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
பாலியல் பலாத்காரங் களுக்கு உலக நாடுகளால் பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தாலும் இன்று வரை அதிகமான பலாத்கார சம்பவங்களே அரங்கேறி வருகின்றன.
பலாத்காரம்
ஆனால், ஒரு சில நாடுகள் பலாத்கார குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றன.
இப்படியொரு ஒரு கேவலமான செயலில் ஈடுபடுபவர் களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால், பாலியல் பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க முடியும்.

இல்லா விட்டால், குற்றவாளிகள் சிறை தண்டனை தானே என்று சாதாரண மாக எண்ணி மீண்டும் மீண்டும் அச்செயலில் ஈடுபடுவார்கள்.

சீனா
ஆண் விதைகள் நீக்கப்படும்
சீனாவில் பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இன்னும் சில மோசமான குற்றவாளி களுக்கு, ஆண் விதைகள் நீக்கப்படும்.

ஈரான்

இந்த நாட்டில் கற்பழிப்பில் ஈடுபவர்கள் தூக்கிலிடப் படுவார்கள் அல்லது தலையில் சுட்டுக் கொல்லப் படுவார்கள். 
இப்படி கடுமையான தண்டனை இருந்தால் தான், இம்மாதிரி யான செயலில் யாரும் ஈடுபட மாட்டார்கள் என அந்நாட்டில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்
சுட்டுக் கொல்லப்படுவார்கள்
ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளி களுக்கு நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து, நான்கு நாட்களில் தலையில் சுட்டுக் கொல்லப் படுவார்கள் அல்லது தூக்கிலிட்டு மரணத்தை பரிசாக வழங்குவார்கள்.
வட கொரியா

வட கொரியாவில் இம்மாதிரி யான செயலில் ஈடுபட்டால் உடனே தண்டனை வழங்கப்படும். அதுவும் குற்றவாளியை அப்போதே நெற்றில் சுட்டு கொல்வார்கள் அல்லது ஆணுறுப்பை வெட்டி விடுவார்கள்.

சவுதி அரேபியா

உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மோசமான மற்றும் அச்சத்தை வரவழைக்கும் படியான தண்டனை வழங்கப் படுகிறது எனலாம். 
தலையை வெட்டி விடுவார்கள்
ஏனெனில் அங்கு இச்செயலில் ஈடுபட்டால், பொது மக்கள் முன்னிலையில் தலையை வெட்டி விடுவார்கள்.

நெதர்லாந்து

நெதர்லாந்து நாட்டில் தவறு செய்தவரின் வயதை பொறுத்து நான்கு முதல் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி முத்தமிட்டாலும் அது பலாத்கார மாகவே கருதப்படும்.

இந்தியா

இந்தியாவில் பாலியல் சம்பவங்கள் அதிகமான முறையில் அரங்கேறி வருகின்றன. பலாத்கார குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப் படாததே இதற்கு ஒரு காரணம் ஆகும்.
தூக்கு தண்டனை
இப்படி கொடிய செயலில் ஈடுபட்ட குற்றவாளி களுக்கு சில வருடங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்குவதால், அச்சமின்றி மீண்டும் இச்செயலில் பலர் ஈடுபடுகின்றனர்.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close