ரூ.200 கடனுக்காக 30 ஆண்டு கடனைச் செலுத்த இந்தியா வந்த கென்ய எம்.பி !

0
கென்யாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் டோங்கி. 1985 முதல் 1989-ம் ஆண்டு வரை இந்தியாவில் அவுரங்கபாத் நகரில் உள்ள மெளலானா ஆசாத் கல்லூரியில் படித்தார். 
ரூ.200 கடனுக்காக 30 ஆண்டு கடனைச் செலுத்த இந்தியா வந்த கென்ய எம்.பி !
அப்போது, அவுரங்க பாத்தில் மளிகைக்கடை வைத்திருந்த காசிநாத் காவ்லி என்பவர், ரிச்சர்டுக்கு பல வழிகளில் உதவி புரிந்துள்ளார். 

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரிச்சர்ட், பார்ட் டைமாக வேலை பார்த்துக் கொண்டே படித்தார். பல சமயங்களில் வாடகை கொடுக்கக் கூட பணம் இருக்காது. 

உணவு சமைக்க சமையல் பொருள்களும் இருக்காது. அப்போது, சமையல் செய்ய உணவுப் பொருள்களைக் கடனாகக் கொடுத்து காவ்லி உதவினார். 

தனக்குத் தெரிந்தவர் களிடத்தில் கூறி, வாடகை வீடு ஒன்று ரிச்சர்டுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். `வாடகை கொடுக்கும் போது வாங்கிக் கொள்ளுங்கள். 

படிக்கும் மாணவரை நெருக்க வேண்டாம்' என்று வீட்டு உரிமை யாளர்களிடம் ரிச்சர்ட் குறித்து காவ்லி கூறியுள்ளார். இப்படி, பல வழிகளில் மாணவர் ரிச்சர்டுக்கு ஆதரவாக இருந்தார் காவ்லி . 

ரிச்சர்ட், தன் படிப்பை முடித்து கென்யா கிளம்பிய போது, காசிநாத் காவ்லிக்கு 200 ரூபாய் கடன் கொடுக்க வேண்டி யிருந்தது. 
கென்யா திரும்பிய ரிச்சர்ட் அரசியலில் ஈடுபட்டு தற்போது அந்த நாட்டு எம்.பி-யாக உள்ளார். 

பல்வேறு விதமான வேலைகள் காரணமாகவும் நேர மின்மையாலும் காசி நாத்துக்கும் ரிச்சர்டுக்கும் 30 வருடங்களாக தொடர்பே இல்லாமல் போய் விட்டது. 

காசிநாத் காவ்லியிடம் வாங்கிய 200 ரூபாய் கடன் மட்டும் ரிச்சர்டின் மனதை உறுத்திக் கொண்டே யிருந்தது. 

சில நாள்களுக்கு முன், கென்ய எம்.பி-க்கள் குழு டெல்லி வந்து பிரதமர் மோடியைச் சந்தித்தது. இந்தக் குழுவில் ரிச்சர்ட் டோங்கியும் இடம் பெற்றிருந்தார். 

டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு, ரிச்சர்ட் தன் மனைவி மிச்செலுடன் அவுரங்க பாத்துக்குச் சென்றார். 

சுமார் 30 வருடங்களு க்குப் பிறகு அவுரங்கபாத் வந்ததால், அவரால் உடனடியாகக் காசிநாத் காவ்லியைக் கண்டுபிடிக்க இயலவில்லை.  

அவுரங்கபாத் நகரில் இரண்டு நாள் தங்கியிருந்து, கடந்த திங்கள்கிழமை அன்று காசிநாத் காவ்லியைக் கண்டுபிடித்தார். 
ரூ.200 கடனுக்காக 30 ஆண்டு கடனைச் செலுத்த இந்தியா வந்த கென்ய எம்.பி !
காவ்லியைச் சந்தித்து தான் யார் என்று அறிமுகப் படுத்திக் கொண்ட ரிச்சர்ட், இந்தியாவில் படித்த போது காவ்லி செய்த உதவிகளை நினைவு கூர்ந்தார். 

தன்னிடம் உதவி பெற்றுப் படித்த ஒருவர் எம்.பி-யாக வந்து, தன் முன் நிற்பதை கண்டு காவ்லியால் நம்பவும் முடியவில்லை... 

நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பிறகு, இருவரும் பழங்கதை களைப் பேசி மகிழ்ந்தனர். 

தான் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 19,200 ரூபாயைக் காவ்லியிடம் கொடுத்தார் ரிச்சர்ட். ஆனால், காசிநாத் காவ்லியோ பணத்தை வாங்க மறுத்து விட்டார்.

கென்ய நாட்டு எம்.பி தங்கள் வீட்டில் சாப்பிடுவாரோ இல்லையோ..!' என்று நினைத்த காசிநாத் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிப்பதற்காக ஹோட்டலில் உணவு ரகங்களை ஆர்டர் செய்தனர். 
ஆனால், ரிச்சர்ட் தம்பதி `வீட்டில் சமைத்த உணவையே தங்களுக்கு பரிமாற வேண்டும்' என்று அன்புக் கட்டளை யிட்டனர். 

தொடர்ந்து, வீட்டில் சமைத்த உணவை மகிழ்வுடன் உண்ட கென்ய தம்பதிக்கு, இந்தியப் பாரம்பர்ய உடையான வேட்டி -சட்டை மற்றும் பட்டுப் புடவையை பரிசாக அளித்து மகிழ்ந்தனர் காவ்லி குடும்பத்தினர்.

நீர் தளும்பிய விழிகளுடன் சந்திப்பு குறித்து ரிச்சர்ட் கூறுகையில், காவ்லி குடும்பத்தினர் எனக்கு எண்ணற்ற உதவிகளைச் செய்துள்ளனர். 

எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் உதவினர். என்னை, ஒரு வெளி நாட்டவராக அவர்கள் நடத்தியதே கிடையாது. என் பிரச்னை அறிந்து ஆதரவாக இருந்தனர். 
ரூ.200 கடனுக்காக 30 ஆண்டு கடனைச் செலுத்த இந்தியா வந்த கென்ய எம்.பி !
என்னால் எந்த நன்றிக்கடனும் திருப்பிச் செலுத்த முடியாது. இந்தியா வந்ததிலிருந்தே காவ்லி குடும்பத்தி னரைச் சந்திக்க வேண்டும் என்று உள்மனம் சொல்லிக் கொண்டே யிருந்தது. 

அவுரங்கபாத்தே இப்போது அடையாளம் தெரியாமல் மாறி விட்டது. அதனால், என்னால் உடனடியாக அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

காவ்லிக்கும் என்னை யார் என்றே தெரியவில்லை. எனக்கு காவ்லி செய்த உதவிகளை நினைவு படுத்திய பிறகே, அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். 
எனக்கு காவ்லி செய்த உதவிகளை நினைவு படுத்திய பிறகே, அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். இந்தியா, அன்பு நிறைந்த மனிதர்கள் கொண்ட நாடு. ரிச்சர்ட் டோங்கி , கென்ய எம்.பி
இந்தியா, அன்பு நிறைந்த மனிதர்கள் கொண்ட நாடு. இந்தியர்கள், இப்போது என்னை நேர்மை யானவனாகக் கருதுவார்கள் என்கிறார் நெகிழ்வுடன். 

தற்போது 70 வயதான காவ்லிக்கு அவுரங்க பாத்தின் வாங்கீட் நகரில் நான்கு அடுக்கு மாடி வீடு சொந்தமாக உள்ளது. 
காவ்லியின் சிறிய மளிகைக்கடை அவரின் மனதைப் போலவே விசாலமான தாக மாறியுள்ளது. அதாவது மிகப் பெரிய ஸ்டோராக உருவெடுத்துள்ளது. 

ஒரு நாள் முழுவதும் காசிநாத் காவ்லி குடும்பத்தி னருடன் தங்கி இருந்த ரிச்சர்டு தம்பதி, தங்கள் நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் போது, 

கென்யாவு க்கு வந்து தங்களின் விருந்தினராக சில நாள் தங்க வேண்டும் என்று காசிநாத் காவ்லி குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். செய் நன்றி மறவாத கென்யர்!

ரூ.200 கடனுக்காக வந்த கென்ய எம்.பி
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)