ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு !

0
இஸ்லாமியர் களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. 
குர்பானி ஆடு ரூ.8 லட்சம்




குர்பான் என்னும் பலி கொடுக்கும் கடமையை நிறைவேற்று வதற்காக பல இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வற்றை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக உள்ளனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முஹம்மது நிஜாமுதீன் என்பவர் உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க தனது ஆட்டுக்கு 8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித் துள்ளார்.
ரூ.8 லட்சம் விலையில் குர்பானி ஆடு




’சல்மான்’ என்று நாங்கள் பெயரிட்டு செல்லமாக வளர்த்த இந்த ஆட்டின் உணவுக்காக நாங்கள் தினந்தோறும் 85 ரூபாய் வரை செலவு செய்து வந்திருகிறோம். 
மேலும், அதன் ரோமத்தில் உள்ள ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துக் காகவே இதை நாங்கள் குறிப்பிட்ட விலைக்கு யாராவது வாங்கிச் செல்வார்கள் என்று நம்பிக்கை யுடன் கூறுகிறார், முஹம்மது நிஜாமுதீன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)