சிறுநீரக கற்களில் எத்தனை வகைகள் உள்ளது? எப்படி உருவாகிறது?

0
நமது உடல் சீராக இயங்க வேண்டுமெனில் அதற்கு நமது சிறுநீரகம் சீராக செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப் பட்டால் தான் நமது உடலின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக செயல்படும். 
சிறுநீரக கற்களில் வகைகள்



அதனை வெளியேற்றுவது தான் நமது சிறுநீரகத்தின் பணியாகும். ஆனால் நமது சீரற்ற வாழ்க்கை முறையாலும், உணவு முறையாலும் சிறுநீரகம் பழுதுபட வாய்ப்புள்ளது.

சிறுநீரகத்தில் அதிகமாக ஏற்படும் பிரச்சினை என்றால் அது சிறுநீரக கற்கள் தான். சிறுநீரக கற்கள் சிறு நீரகங்களின் செயல் பாடுகளில் தலையிட்டு நமது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற விடாமல் செய்கிறது. 
சிறுநீரக கற்களில் பல வகைகள் உள்ளது, அவற்றை எப்படி வெளியேற்றலாம் என்ற வழி முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுநீரக கற்களின் வகைகள்

சிறுநீரகக் கல் என்பது சிறுநீரகப் பாதையில் உப்பு அல்லது கால்சியம் போன்ற தாதுக்கள் சிறிய வடிவில் உருண்டைக ளாக உருவாவது தான். சிறுநீரகக் கற்களில் பல வகைகள் உள்ளது, 
சிறுநீரக கற்கள்
அவை கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம் மற்றும் சிஸ்டைன் கற்கள். சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஆக்சலேட் அளவு

சிறுநீரகக் கற்களால் பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் உணவுகளில் ஆக்சலேட்டின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கால்சியம் ஆக்சலேட் கற்களால் பாதிக்கப் பட்டவர்கள் இதனை செய்ய வேண்டும். 
கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம்




மேலும் இவர்கள் சோடியம் மற்றும் புரோட்டின் அதிகம் இருக்கும் உணவு களைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக ஆக்சலேட்டுகள் கீரை மற்றும் நட்ஸ் வகைகளில் அதிகம் உள்ளது.

சோடியம் அளவு
எம்டி பிரியாணி செய்முறை !
பொதுவா சோடியம் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவுகளில் அதிகம் இருக்கிறது. இதனை அதிகம் சாப்பிடுவது நேரடியாக சிறுநீரக கற்களுடன் தொடர் புடையதாகும். 
சோடியம் அளவு
உங்கள் உடலில் இருக்கும் சோடியத்தின் அளவை சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2300மிகி அளவிற்கு மேல் ஒருவர் சோடியத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

சோடியம் உணவுகள்

நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவின் கவரிலும் இருக்கும் சோடியத்தின் அளவை குறித்துக் கொள்ள வேண்டும். மேலும் மறைமுகமான சோடியம் மூலப்பொருள் களான சோடியம் பைகார்பனேட் (பேக்கிங் சோடா), பேக்கிங் பவுடர், 
சோடியம் உணவுகள்




மோனோ சோடியம் குளூட்டமேட், டிஸோடியம் பாஸ்பேட், சோடியம் ஆல்ஜினேட், சோடியம் நைட்ரேட் போன்ற பொருள்களையும் சரிபார்க்க வேண்டும். சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் கண்டிப்பாக சோடியத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.
தாவர புரோட்டின்

சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் இறைச்சி மற்றும் அது சார்ந்த பொருள்களை தவிர்த்து தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரோட்டின் களை எடுத்துக் கொள்ள வேண்டும். 
தாவர புரோட்டின்
இறைச்சி மற்றும் அதிலிருந்து கிடைக்கும் புரோட்டின் களை அதிகமாக உட்கொள்ளும் போது அது சிறுநீரகக் கற்களுக்கு வழிவகுக்கும். எனவே அவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.

பால் பொருட்கள்

பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களான பாலாடைக்கட்டி, தயிர், சீஸ் போன்ற பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை உள்ளவர் களுக்கு தேவைப்படும் அளவை விட அதிகளவு கால்சியம் பால் பொருட்களில் உள்ளது. 
பால் பொருட்கள்
கால்சியம் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துவதன் மூலம் செரிமான பாதையில் பல சிக்கல்களை உண்டாக்கும்.

கொழுப்பு அளவு
எடை அதிகமாக இருப்பது கூட சிறுநீரகக் கற்கள் உண்டாக காரணமாக அமைகிறது. எனவே அதிகளவு கொழுப்பு இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். 
கொழுப்பு அளவு




சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள் குறைவான கொழுப்பு இருக்கும் உணவுகளாக தேர்ந்தெடுத்து தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர்

சிறுநீரக பிரச்சினை யால் பாதிக்கப் படுபவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய முக்கியமான மாற்றம் அதிக நீர்சத்துக் களை சேர்த்துக் கொள்வது, குறிப்பாக தண்ணீரை. 
தண்ணீர்
ஏனெனில் இதுவே உங்களின் பாதி பிரச்சினையை தீர்த்து விடும். இந்த டயட் மாற்றங் களுடன் சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால் விரைவில் நீங்கள் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை யிலிருந்து குணமடைந்து விடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)