தேனியில் செக்‌ஷன் 304A விபத்து ஏற்படும் இடங்களில் – புதிய முயற்சி !

0
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்று. தினமும், வியாபாரத்துக் காகவும், தொழில் சம்பந்த மாகவும், மலைத் தோட்டங்களில் வேலை செய்வதற் காகவும் ஆயிரக் கணக்கான மக்கள் தேனி எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் செல்கின்றனர். 
தேனியில் செக்‌ஷன் 304A விபத்து ஏற்படும் இடங்களில்



அதே போல, மருத்துவம், வியாபாரம் போன்ற காரணத்துக் காக கேரளாவினரும் தேனிக்குள் வருகின்றனர். இதனால், எப்போதும் பரபரப்பாக காட்சி யளிக்கிறது தேனி. இது ஒருபுறம் என்றால், இருக்கும் பரபரப்புக்கு இணையாக சாலை விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. 
அதை சற்று குறைக்கும் நோக்கோடு தேனி மாவட்ட காவல்துறை புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அஜாக்கிரதை யாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தால், அதற்கு இந்திய தண்டனைச்சட்டம் செக்ஷன் 304A-ன்படி தண்டனை வழங்கப் படுகிறது. 

இதை அறிவுறுத்தும் நோக்கோடு, தேனி மாவட்டத்தின் விபத்துப் பகுதிகளை கணக்கிட்டு, அந்தப் பகுதிகளில், சாலையில், மஞ்சள், வெள்ளை நிற பெயின்ட் மூலம் விபத்துப்பகுதி என எழுதி, அதில் பொம்மை பொறிக்கப் பட்டு, 304A என எழுதப் படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பாஸ்கரனிடம் பேசியபோது, ``தேனி மாவட்டத்தில் அதிகம் விபத்து ஏற்படுத்தும் பகுதிகளில், பேரிகேட், வேகத்தடை, ஒளிரும் பட்டை என எல்லா வற்றையும் பயன்படுத்திப் பார்த்தோம், அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்து பவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 
செக்‌ஷன் 304A



விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. அதனால் தான், விபத்துப் பகுதிகளில் இது போன்று எழுதுகிறோம். ஏதோ எழுதி யுள்ளனர் என தங்கள் வேகத்தை அப்போதாவது குறைப்பார்கள் என எண்ணித் தான் இதைச் செய்துள்ளோம். 
மேலும், அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தக் கூடாது. அது தண்டனைக் குரிய குற்றம் என அறிவுறுத்தவும் இதைச் செய்திருக் கிறோம். விபத்துகள் குறையும் என எதிர் பார்க்கிறோம்.” என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)