வெள்ளத்தில் மூழ்கிய இளைஞரை துணிச்சலுடன் காப்பாற்றிய காவலர் !

0
பயங்கரமான கங்கை வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப் படுவதை பொதுமக்கள் திக்திக் மனதோடு வேடிக்கை பார்த்த நிலையில், துணிச்சலாக சீரிப்பாய்ந்து வெள்ளத்தில் நீந்தி உத்தரகாண்ட் போலீஸ்காரர் ஒருவர், அந்த இளைஞரை காப்பாற்றி உள்ளார்.
வெள்ளத்தில் மூழ்கிய இளைஞரை காப்பாற்றிய காவலர்



தென்மேற்கு பருவ மழையால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இமய மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் விஷால் என்ற இளைஞர் அண்மையில் நீராட சென்றார்.. அப்போது திடீரென கால் தடுக்கி விஷால் கீழே விழுந்தார். 

இதனால் ஆற்றங் கரையில் இருந்த மக்கள், கங்கை வெள்ளத்தில் இளைஞர் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து கூச்சலிட்டனர். எல்லோரும் கடவுளே அவரை காப்பாற்றுங்கள் என்று கதறியடி அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

அந்நேரத்தில் சரியாக ஒரு நிமிடங்கள் கூட இருக்காது. வெள்ளத்திற்கு பாய்ந்த போலீஸ்காரர் சன்னி, அதிவேகமாக நீந்தி சென்று சென்று விஷாலை இழுத்து பிடித்தார். 



அப்படியே வெள்ளத்தின் போக்கிலேயே நீந்தி, சில நொடிகளில் ஒரு கரை யோரத்திற்கு விஷாலை கொண்டு வந்தார். இதன் மூலம் நீரில் அடித்து செல்லப்பட்ட விஷாலை சமார்த்தியமாக போலீஸ்கார் சன்னி காப்பாற்றி விட்டார்.

இது தொடர்பான வீடியோவை உத்தரகாண்ட் காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.. இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
உயிரை துச்சமாக நினைத்து, ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வரை காப்பாற்றிய போலீஸ்காரை பலரும் பாராட்டி வருகிறார்கள்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)