திருமணமான 4 மாதத்தில் குழந்தை - கேரள ஆசிரியை !

0
பேறுகால விடுப்புக்குச் சென்ற தன்னை மீண்டும் பணியில் சேர்க்க அரசுப் பள்ளி நிர்வாகம் மறுப்பதாகக் கேரள ஆசிரியை ஒருவர் புகார் தெரிவித் துள்ளார். 
திருமணமான 4 மாதத்தில் குழந்தை



கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சமீபத்தில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றைத் தெரிவித்தார். அதில், ``பேறுகால விடுப்புக்குச் சென்ற தன்னை மீண்டும் பணியில் சேர்க்கப் பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. 

மேலும் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்கிலும் என்னை அவதூறாகப் பேசி அவமானப் படுத்தினார்கள்" எனப் புகார் தெரிவித்தார். அவரின் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் உண்மை நிலவரம் என்னவென தெரிய வந்தது. 
அதாவது, புகார் கொடுத்த ஆசிரியை அந்தப் பள்ளியில் கடந்த ஐந்து வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித் திருந்துள்ளார். விவாகரத்து க்கு விண்ணப் பித்திருந்த அதே வேளையில் இரண்டாவது திருமணத்து க்குத் தயாராகி வந்துள்ளார். 

ஆனால், விவாகரத்து தாமதாகவே இரண்டாவது திருமணம் செய்ய விருந்த கணவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் திருமணத்து க்கு முன்பே கர்ப்ப மடைந்துள்ளார். ஒரு வழியாக விவாகரத்தும் கிடைக்க அந்த நபரைத் திருமணம் செய்துள்ளார். 

திருமணம் செய்த கையோடு நான்கே மாதத்தில் பேறுகால விடுப்பு எடுத்துள்ளார். விடுப்பு எடுத்த இரண்டாவது நாளே ஆசிரியைக்குக் குழந்தை பிறந்துள்ளது. 



இதற்கிடையே, பேறுகால விடுப்பு முடிந்து தற்போது பள்ளியில் மீண்டும் பணிக்கு சேர வந்த போது தான் அவரை பணியில் சேர விடாமல் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தடுத்துள்ளனர். 
அதற்குக் காரணமாக அவர்கள் கூறுவது ``திருமணமான நான்கு மாதங்களில் மகப்பேறு விடுப்பு கோரியதைத் தான்''. இதற்குத் தகுந்த விளக்கம் கூறியும் அவரை பணியில் சேரவிடாமல் தடுத்து வருகின்றனர். 

இதனால் தான் ஆசிரியை போலீஸில் புகார் கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் நல ஆணையத்தி லும் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)