சதுப்பு நிலக்காடுகள் இல்லை என்றால் என்னாகும்? #WorldMangroveDay

0
உப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நிலக்காடுகள் பல வகைப்பட்ட உயிரினங்களின் உறைவிடமாகவும், அவற்றின் உணவாகவும் பயன்பட்டு வருகின்றன.
சதுப்பு நிலக்காடுகள் இல்லை என்றால் என்னாகும்? #WorldMangroveDay
அலையிடைக் காடுகள், கடலோர மரக்காடுகள், கடலில் நடக்கும் காடுகள், கடலின் வேர்கள், கடலின் மழைக் காடுகள், 

அலையாத்திக் காடுகள், தில்லைவனம், சுரப்புன்னைக் காடுகள், கண்டன் காடுகள் என பலவகை பெயர்களால் அழைக்கப்படும் 

இந்தச் சதுப்பு நிலக் காடுகள் புயல், வெள்ளம், மண் அரிப்பு, கடல் நீர் வெள்ளப் பெருக்கு போன்ற வற்றிலிருந்து மனிதர்களைக் காக்கும் தலையாய பணியைச் செய்து வருகின்றன. 

மனிதர்களுக்கு நேரும் இத்தகைய துயர்களைப் போக்கும் சதுப்பு நிலக் காடுகளுக்கான நாள் இன்று. 

2015-ம் ஆண்டு முதல் ஜூலை 26-ம் தேதியை யுனெஸ்கோ அமைப்பு உலக சதுப்பு நிலக் காடுகள் தினமாக கடைப் பிடித்து வருகிறது. 
தனித்த சிறப்பு மிக்க சதுப்பு நிலக் காடுகளைப் பாதிப்பிலிருந்து மீட்கவும், அதன் நிலையான வளர்ச்சிக்கான தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நாளில் உலகம் தொடங்கி உள்ளூர் வரை உள்ள சதுப்பு நிலக் காடுகள் குறித்து விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார் ராமநாதபுரம் வனச்சரகத்தின் வனச்சரகர் சதீஷ்.
பூமிக்கு கீழ் செல்லக் கூடிய கேபிள் வேர்களைப் பெற்றுள்ள சதுப்பு நிலக் காடுகள் தாங்கு வேரின் மூலம் தாய் மரத்தினை தாங்கிப் பிடிக்கும் தன்மை கொண்டிருப்பதால் மண் அரிப்பு ஏற்படாமலும், 

புயல் மற்றும் வெள்ளம் அபாயத்தின் போது கடல் நீர் ஊருக்குள் புகாதவாறும் தடுக்கின்றன. புயல் காற்றின் வேகமும் இவற்றால் கட்டுப் படுத்தப் படுகிறது. 

இத்தகைய சூழலில் மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதிகபட்ச பயன்பாட்டினாலும் சதுப்பு நிலக்காடுகள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன.
சதுப்பு நிலக்காடுகள் இல்லை என்றால் என்னாகும்? #WorldMangroveDay
உப்புத் தண்ணீரில் வளரும் இக்காடுகளின் இளம் பருவத்தின் போது சிறிது நன்னீரும் தேவை யுள்ளது.  மழைக் காலங்களில் அதிகபட்ச நன்னீர் கிடைக்கும் போது பெரும்பாலான மரங்கள் தனது விதைகளை முதிர்ச்சி அடையச் செய்கின்றன.

இவை கிடைக்காத போது அதிக உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்ப்பகுதிகளில் உள்ள மரங்கள் வளர முடியாமல் மடிந்து போகும் நிலையும் உள்ளது. 

மேலும், முகத்துவாரம் தடைப்படுதல், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், கால்நடை மேய்ச்சல், இறால் பண்ணை அமைத்தல், துறைமுகங்கள் உருவாக்குதல், மாசு படுதல் போன்ற வற்றினாலும் இவை அழிவுக்குள்ளாகி வருகின்றன.
சளிக்கு உடனடி நிவாரணம் சீரகம்
இது போன்ற அழிவுகளில் இருந்து சதுப்பு நிலக் காடுகளை காக்கவே உலக சதுப்பு நிலக் காடுகள் தினம்' கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

மனித மற்றும் வன உயிரின சமுதாயத்தைக் காக்க உதவும் சதுப்பு நிலக் காடுகளைக் காக்கும் பணியில் நாமும் கை கோப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)