துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவர் நாடு கடத்தல் !

0
துபாயில் நடந்த சாலை விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியான விபத்துக்கு காரணமாக இருந்த டிரைவருக்கு சிறைத் தண்டனை, நாடு கடத்தல் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப் பட்டுள்ளன. 
துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவர்
கடந்த ஜூன் 6-ம் தேதி ஓமனி லிருந்து துபாய்க்கு பேருந்து ஒன்று வந்தது. துபாயில் பேருந்து களுக்கு ஒதுக்கப்படாத பகுதிக்குள் நுழைந்த பேருந்து, சிக்னல் இரும்புக் கம்பி மீது மோதியது. 

அதில், பேருந்தின் இடது ஓரத்தில் இருந்த பயணிகள் 17 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 13 பேர் காயமடைந்தனர். 
பலியானவர் களில் இரு பாகிஸ்தானியர்கள், ஓமன், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்கும். இந்த விபத்து தொடர்பாக துபாய் போக்குவரத்து நீதிமன்றம் விசாரித்து வந்தது. 

விசாரணையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த டிரைவர் முகமது அலி தமாமி (வயது 53) மீது தவறு இருப்பது உறுதி செய்யப் பட்டது. 

தொடர்ந்து டிரைவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. 

மேலும், துபாய் நிர்வாகத்து க்கு 13,000 யு.எஸ் டாலர்கள் அபராதம் செலுத்தவும், பலியானவ ர்கள் குடும்பத்துக்கு 92,500 யு.எஸ் டாலர்கள் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப் பட்டது.
துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவர் நாடு கடத்தல்
கேரள மாநிலம் தலசேரியைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் மரணமடைந்தார். அவரின் குடும்பத்தினர் கூறுகையில், மிகவும் நேர்மை யாகவும் விரைவாகவும் விசாரிக்கப் பட்டு தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. 
இழப்பீடு தொகை எங்களுக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும்' என்றனர். 

சிறைத் தண்டனை முடிந்ததும் டிரைவர் ஓமன் நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார். ஒரே மாதத்தில் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)