விளக்கேற்றும் எண்ணெயிலும் கலப்படம் !

0
அந்தக் காலத்தில் விளக்கு ஏற்றும் எண்ணெய் தயாரிக்க வேண்டிய மூலப்பொருள் களை விளைவிக்க மட்டுமே நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை கோவில் களுக்கு எழுதி வைத்து இறைக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வந்தனர் அரசர்கள். இதற்குச் சான்றாக பல கல்வெட்டுகளும் அகழ்வாராய்ச்சி யில் கிடைத்துள்ளன. 
விளக்கு ஏற்றும் எண்ணெய் தயாரிக்க



தெய்வ வழிபாட்டில் தீபமேற்றி வழிபடும் சடங்கு நம் வழக்கங்களில் ஒன்றாக இருந்து வந்ததை இது தெரிவிக்கிறது. இது மட்டுமல்லாது எல்லாவித எண்ணெயையும் ஊற்றி நம் மக்கள் தெய்வத்துக்கு தீப வழிபாடு செய்ததில்லை, மாறாக குறிப்பிட்ட வகை எண்ணெய்களை மட்டுமே மிகத் தூய்மையாக தயாரித்து பயன்படுத்தி வந்தனர். 
காரணம், அக்காலத்தைய கடுமையான தெய்வ அனுஷ்டான விதிகள் அப்படி... இப்போ தெல்லாம் இப்படிக் கடுமையான இறை வழிபாட்டுக் கொள்கை களை யாரும் கடைப் பிடிப்பதாய்த் தெரிய வில்லை, இதைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக்கி காசு பார்க்கும் வேலையில் இறங்கி விட்டனர். 

ஆம், விளக்கேற்றும் எண்ணெயில் தான் இந்த அநியாயம் அரங்கேறி வருகிறது... கடைக்குச் செல்கிறோம், 'விளக்கு ஏற்றும் எண்ணெய் வேண்டும்' எனக் கேட்கிறோம், ஒரு நல்ல பிராண்டின் பெயரைச் சொல்லி அந்த எண்ணெயைக் கேட்க, கடைக்காரர் தன் கைவசமுள்ள பிறிதொரு மலிவு விலை எண்ணெயைக் கொடுக்கிறார். 

'குறைந்த விலையாக உள்ளதே!' எனப் பெயர் தெரியாத ஏதோ வொரு கம்பெனி பெயர் பொறிக்கப் பட்ட விளக்கு ஏற்றும் எண்ணெயைக் கப் சிப் என வாங்கி வந்து விடுகிறோம். இந்த எண்ணமும் கவனக் குறைவும் தான் தரமற்ற விளக்கு ஏற்றும் எண்ணெய் களை விற்கச் சிலரைத் தூண்டுகிறது. 

குறைந்த பட்சம் நாம் வாங்கும் விளக்கேற்றும் எண்ணெய் பேக்கெட்டில் உள்ள மூலப் பொருள் பற்றிய விவரத்தைப் (Ingredients) பார்த்தாலே இதைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் இப்படிப்பட்ட தரமற்ற எண்ணெய்களில் இந்த விவரங்கள் கொடுக்கப் படுவதில்லை என்பதி லிருந்தே இவர்களின் குட்டு உடைகிறது. 

மேலும், சில நிறுவனங்கள் 'இது சுத்திகரிக் கப்பட்ட பாமாயில்' என நேரடியாகவே அச்சிட்டு விற்பனை செய்கின்றன. 

சந்தையில் விற்கப்படும் பாமாயில் விலை மிகக் குறைவே, அதை விளக்கேற்றும் எண்ணெய் எனச் சொல்லி, 20 முதல் 30 ரூபாய் கூட்டி விற்பனை செய்கின்றனர்! விளக்கு ஏற்றும் எண்ணெய்க் கான கிராக்கியைப் பயன்படுத்தி விலை குறைந்த பாமாயிலை இப்படி ஊடுருவ விடுகின்றனர்.

விளக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?

தூய்மையான பூஜைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டியது நம் கடமை. பாமாயில் மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களைக் கொண்ட தரமற்ற போலி விளக்கேற்றும் எண்ணெய்களில் விளக்கேற்று வதைத் தவிர்த்து, தரமான தீப எண்ணெய்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். 
விளக்கேற்றும் எண்ணெயிலும் கலப்படம்



தரமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய் களைச் சரியான விகிதத்தில் கலந்து வழங்கப்படும் 'தீபம்' பிராண்ட் பஞ்ச தீப எண்ணெய் பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் நன் மதிப்பைப் பெற்றுள்ளது. 
இதில் சுகந்த திரவியங்கள் இருப்பதால் விளக்கேற்றும் போது வரும் தெய்வீகமான நறுமணம் நமக்கு தெய்வீக உணர்வைக் கொடுக்கிறது, இதற்குக் காரணம் தூய்மை தான்! 

சிறந்த நிறம், நறுமணம் மற்றும் சரியான பாகுத்தன்மை கொண்டது 'தீபம்' பஞ்ச தீப எண்ணெய், நீண்ட நேரம் நீடித்து எரியக் கூடிய தன்மையும் புகை யின்மையும் இதன் சிறப்பம் சங்களாகும். நீங்களும் கூட 'தீபம்' எண்ணெயில் விளக்கேற்றி இதை அறிந்து கொள்ளலாம்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)