மான் வயிற்றில் இருந்த 4 கிலோ பிளாஸ்டிக் - காரணமான பார்வையாளர்கள் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016

Flash News

மான் வயிற்றில் இருந்த 4 கிலோ பிளாஸ்டிக் - காரணமான பார்வையாளர்கள் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
மேற்கு ஜப்பானில் இருக்கும் நாரா பூங்கா அங்கே இருக்கும் மான்களுக் காகப் பிரபலமானது. 1880-ம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்தப் பூங்காவில் ஆயிரத்து க்கும் மேற்பட்ட சிக்கா வகை மான்கள் சுதந்தரமாகச் சுற்றித் திரியும். 
மான் வயிற்றில் இருந்த 4 கிலோ பிளாஸ்டிக்இந்தப் பூங்காவில் வழிபாட்டுத் தலங்களும் இருப்பதால், பார்வை யாளர்களின் எண்ணிக்கை யும் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களில் 14 மான்கள் தொடர்ச்சியாக இறந்தன. அவற்றைப் பரிசோதித்த போது வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டறியப் பட்டது. 

பூங்காவுக்கு வருபவர்கள் sugar-free இனிப்பு பண்டங்களை மான்களுக் குக் கொடுப்பது வழக்கம். அதை விற்பனை செய்வதற்காகப் பூங்காவுக்கு அருகில் பல கடைகள் இருக்கின்றன. இந்த இனிப்புகள் பிளாஸ்டிக் கவர் இல்லாமல் மான்களுக்கென சிறப்பாகத் தயாரிக்கப் படுகின்றன. 
ஆனால், மக்கள் பிற பொருள்களில் இருக்கும் பிளாஸ்டிக் கவர்களை பூங்காவுக்குள் வீசி விடுகிறார்கள். அதை உண்டதால் தான் மான்கள் இறந்திருக் கின்றன. அதை நாரா மான்கள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் யோஷிடக்கா அஷிமுரா (Yoshitaka Ashimura) உறுதிப்படுத்தி யிருக்கிறார். 
`ஒன்பது மான்கள் இறப்புக்கான காரணம் அவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக் இருந்தது தான். அதனால் செரிமானக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு மானின் வயிற்றி லிருந்து 4 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன" எனத் தெரிவித்தி ருக்கிறார்.

மேலும், இங்கே வரும் பார்வை யாளர்களில் சிலர் பிளாஸ்டிக் கவர்களை வெளியில் வீசிவிட்டுச் சென்று விடுகிறார்கள். அதை மோந்து பார்க்கும் மான்கள் உணவுப் பொருள்கள் என நினைத்து அதைத் தின்று விடுகின்றன. 
குப்பைகளைக் கீழே போட வேண்டாம் என்பதை உணர்த்துவதற் காகப் பூங்காவில் அறிவிப்புப் பலகைகளை வைத்திருக் கிறோம். மேலும், பல மொழிகளிலும் அதைக் குறிப்பிட்டிருக் கிறோம். ஆனால், அவை எதையுமே பார்வை யாளர்கள் கண்டு கொள்வதில்லை என்றும் வருத்தம் தெரிவித்திரு க்கிறார் யோஷிடக்கா அஷிமுரா
மான் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக்தொடர்ச்சியாக மான்கள் இறந்ததைத் தொடர்ந்து பூங்காவைச் சுத்தப்படுத்தும் வேலையை நாரா மான் பாதுகாப்பு இயக்கம் கடந்த புதன் கிழமையன்று தொடங்கியது. இப்படி ஒரு நடவடிக்கை பூங்காவில் மேற்கொள்ளப் படுவது கடந்த 8 வருடங்களில் இதுவே முதல் முறை. 
100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பூங்கா முழுவதிலும் இருந்து 116 கிலோ அளவுக்குக் குப்பைகளைச் சேகரித்திருக் கிறார்கள். அதில் 30 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகளே இருந்திருக் கின்றன.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause