புட் டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி - நம்பிக்கையின் உச்சம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016

Flash News

புட் டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி - நம்பிக்கையின் உச்சம் !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
என்னடா வாழ்க்கை என்று புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், இது போன்ற மனிதர்களின் செயல்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிய வைக்கிறது. அவர்கள் தான் வாழ்க்கையோடு எதிர் நீச்சல் போடும் ஹீரோக்களா கவும் தெரிகின்றனர்.
புட் டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளிஇன்று இந்தியா முழுவதும் புதிய வேலை களைக் கட்டத் தொடங்கி யுள்ளது என்றால் அது ஃபுட் டெலிவரி வேலை தான். குறிப்பாக இளைஞர் களை மட்டுமன்றி பெண்களையும் கவர்ந்துள்ளது தான் ஆச்சரியம். அப்படி இன்று பல பெண்களும் ஃபுட் டெலிவரி உமனாக வேலை செய்து தன் சொந்தக் காலில் நிற்கின்றனர்.
ஆண்களுக்கு நிகரான சமத்துவத்தைப் பெண்கள் தற்போது முன்னெடுத்து வருவதால், அதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தாக இருந்தாலும், தற்போது முளைத்திரு க்கும் மற்றொரு ஆச்சரியம் அனைவருக்கும் ஊக்க மளிக்கிறது.

ஆம், ராஜஸ்தானைச் சேர்ந்த ராமு ஜி என்னும் மாற்றுத் திறனாளி இளைஞர், ஸொமாட்டோ நிறுவனத்தின் ஃபுட் டெலிவரி பாயாக வேலை செய்கிறார். தன்னுடைய மூன்று சக்கர வாகனத்தின் முன்புறம் டெலிவரிக் காக வைக்கப் பட்டிருக்கும் உணவுப் பொட்டலப் பையை வைத்துக் கொண்டு விரைந்து கொடுக்க வேண்டிய காரணத்தால் வேகமாக ஓட்டிக் கொண்டு செல்கிறார்.இதைக் கண்ட அப்பகுதி இளைஞர் ஒருவர் அவரை வீடியோ எடுத்து இவர் என்னுடைய நாளை அர்த்தமாக்கி யுள்ளார். இவர்களைப் போன்ற வர்களைக் காணும் போது வாழ்க்கையில் ஊக்கமும், உற்சாகமும் பிறக்கிறது என்று எழுதி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் பலராலும் ரீட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause