மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற அரசு !

0
புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கும் கள்ளக்குறிச்சி பல முக்கிய சிறப்பம் சங்களை கொண்ட மாவட்டம் ஆகும். தமிழகத்தின் புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப் பட்டுள்ளது. கள்ளக் குறிச்சி 33வது மாவட்டமாக அறிவிக்கப் பட்டு இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாகி உள்ளது. கள்ளக் குறிச்சிக்கு விரைவில் மாவட்ட ஆட்சியர் அறிவிக்கப்பட உள்ளார்.

கோரிக்கை


கள்ளக்குறிச்சி மக்கள் நீண்ட வருடங்களாக இந்த தனி மாவட்ட கோரிக்கையை வைத்து வந்தனர். எந்த அரசு தொடர்பான வேலை என்றாலும் அவர்கள் விழுப்புரம் செல்லும் நிலை இருந்து வந்தது. 
மக்களின் கோரிக்கை
77 கிமீ வரை அவர்கள் ஆட்சியர் அலுவலகம் செல்லவும், அரசு ஆவணங்களை பெறவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. இதனால் மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

மாற்றினார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்று இருக்கிறது. தமிழகத்தில் 33 ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப் பட்டுள்ளது. அம்மாவட்ட மக்கள் இதை பெரிய வெற்றியாக கொண்டாடி வருகிறார்கள்.

எப்படி இருக்கும்

கள்ளக்குறிச்சி யில் மொத்தம் 36,742 மக்கள் வசிக்கின் றார்கள். கள்ளக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும். தமிழகத்தில் கல்வி அறிவு அதிகம் உள்ள மாவட்டங்களில் நல்ல மாவட்டமாக தற்போது கள்ளக்குறிச்சி மாறியுள்ளது. 
கள்ளக்குறிச்சி அரசு
தமிழகத்தில் குழந்தைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் தற்போது கள்ளக் குறிச்சியும் ஒன்றாகி உள்ளது. இங்கு 11% குழந்தைகள் இருக்கிறார்கள்.


எம்எல்ஏ, எம்.பி
எம்எல்ஏ, எம்.பி
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வாக அதிமுகவை சேர்ந்த பிரபு இருக்கிறார். இவர் அதிமுக என்றாலும் அமமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத் தக்கது. கள்ளக் குறிச்சி எம்.பியாக அதிமுகவை சேர்ந்த டாக்டர் கே.காமராஜ் இருக்கிறார்.

சூப்பர் பாஸ்
கள்ளக்குறிச்சி
ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் பெரிய பஸ் ஸ்டான்ட் இருக்கிறது. பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல கள்ளக்குறிச்சியும் ஒரு வழிதான் என்பதால், கள்ளக்குறிச்சி நன்றாகவே முன்னேறி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதால் இன்னும் வேகமாக முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம்.

மேகம் நீர்வீழ்ச்சி சிறப்பு

அதேபோல் கள்ளக்குறிச்சியில் உள்ள மேகம் நீர்வீழ்ச்சி அந்த மாவட்டத்தின் முக்கிய சிறப்பம்ச மாக மாற போகிறது. கள்ளக்குறிச்சி யில் கஞ்சிராயப் பாக்கத்திற்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள மேகம் நீர்வீழ்ச்சி இருக்கிறது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக் காலத்தில் மட்டும் இந்த அருவியில் தண்ணீர் வரும். 
மேகம் நீர்வீழ்ச்சி சிறப்பு


அதனாலே இதற்கு மேகம் நீர்வீழ்ச்சி என்று பெயர் வந்துள்ளது. 500 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் வேகத்துடன் பாய்ந்து இறங்கும் அழகே அத்தனை பிரமிப்பாக இருக்கும். இதை பார்க்க நிறைய மக்கள் வருவதும் குறிப்பிடத் தக்கது.

கல்வராயன் மலை

விழுப்புரத்தில் இருந்த கல்வராயன் மலை தற்போது கள்ளக்குறிச்சி க்குள் வருகிறது. சவ்வாது மலையின் தெற்கு முனையி லிருந்து 40 கிமீ தொலைவில் கல்வராயன் மலைத்தொடர் உள்ளது. கள்ளக்குறிச்சியின் சங்கரா புரத்திற்குள் கல்வராயன் மலை வருகிறது. 
கல்வராயன் மலை
இந்த மலை இந்தியா முழுக்க பிரபலம் என்பதாலும், இதை சுற்றி சில தொழிற் சாலைகள் உருவாக இருப்பதாக தகவல்களும் வருவதாலும் கள்ளக்குறிச்சி வேகமாக வளர வாய்ப்புள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)