விமானங்களில் ஆக்சிஜன் எப்படி கிடைக்கிறது? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

விமானங்களில் ஆக்சிஜன் எப்படி கிடைக்கிறது?

Subscribe Via Email

விமானங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு செல்லப் படுவதில்லை. இருப்பினும் ஆபத்து நேரங்களில், ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்தப் படுகின்றது.
விமானங்களில் ஆக்சிஜன்


விமானத்தில் பொதுவாக அதிக எடையுடைய பொருட்கள் ஏற்றப்படுவ தில்லை. அதிக சுமையுடன் விமானம் பறப்பது ஆபத்து. இதன் காரணமாக, ஆக்சிஜன் சிலிண்டர் களை கொண்டு செல்வதில்லை.

ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், ஆக்சிஜன் மாஸ்க் எப்படி வேலை செய்யும்? ஆபத்து நேரத்தில் ஆக்சிஜன் மாஸ்க்கை பயன் படுத்தியே மக்கள் உயிர் தப்பிக்க முடியும்.

ஆக்சிஜனை உருவாக்க, விமானங்களில் ஆக்சிஜன் கேண்டில் என்கின்ற தொழில் நுட்பமுறை பயன்படுத்தப் படுகிறது. 
அதாவது, சில வேதிப் பொருட்களை கொண்டு அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் ஜெனரேட் செய்யப் படுகின்றது.

சோடியம் குளோரைடு அல்லது பேரியம் பெராக்சைடு வேதிப் பொருளை வெப்பப் படுத்தும் போது அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் உருவாக்கப் படுகிறது. 

அப்படி உருவாக் கப்படும் ஆக்சிஜன்கள், எமர்ஜென்சி மாஸ்க்குகள் வழியாக பயணிகளுக்கு கொடுக்கப்படும்.


ஆக்சிஜன் மாஸ்க்குகளை 10 முதல் 30 வினாடி களுக்குள் அணிந்து விடுவது உயிருக்கு பாதுகாப்பு. இல்லை யெனில், பதற்றத்தில் மயக்க மடைய நேரிடும். உயிரிழக்கவும் வாய்ப்புகள் உண்டு.

இந்த ஆக்சிஜன் சப்ளை 20 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். அதற்குள் விமானி, விமானத்தின் உயரத்தை குறைத்து ஆக்சிஜன் மட்டத்தை அடைந்து விடுவார்.

மேலும்
ஒரு வேளை, விமானி சுயநினை விழந்து ஆக்சிஜன் மட்டத்தை அடைய வில்லை யெனில், ஆக்சிஜன் தீர்ந்து அனைவரும் உயிரிழக்கும் நிலை உருவாகும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close