அஜித் ஆலோசனையில் உருவான ஆளில்லா விமானம் - சாதனை !

0
இயற்கை பேரிடர்கள், ஆபத்து காலங்களில் மக்களை மீட்க முடியாமல் தவிப்போரு க்கு உதவியாக இருக்கும்


தொழில்நுட்ப நண்பனாக விளங்குபவை ஆளில்லா குட்டி விமானங்கள்.

ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பொது மக்களுக்கு எவ்வாறு உதவுவது

என்பது தொடர்பான தொடர் ஆராய்ச்சி களை மாணவர்கள் செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்த கட்டங் களை எட்டி வரும் இந்த குட்டி விமானங் களின் வளர்ச்சிப் பாதையில்

அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் ஒரு மைல்கல்லை அடைந் துள்ளனர்.

ஏரோ நாடிக்கல் படிக்கும் மாணவர் களின் குட்டி விமானங்கள் உருவாக்கும் திறனை ஊக்கு விக்கும் 

விதமாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் SAE ISS ஏரோ டிசைன் சேலஞ்ச் 2018 நடைபெற்றது. 

இதில் இந்தியா முழுவதிலும் உள்ள 111 பொறியியல் கல்லூரி களைச் சேர்ந்த 100 குழுக்களைக் 

கொண்ட 700 இளநிலை மற்றும் பட்டதாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சியில் ஆளில்லா விமானங் களின் அடுத்த கட்ட படைப்புகள், 
யூஏவி ஹெலிகாப்டர், குவாட்காப்டர் உள்ளிட்டவை வரிசைப் படுத்தி வைக்கப் பட்டிருந்தன.
கண்காட்சி யில் அனைத்து மாணவர் களின் கண்டு பிடிப்பு களையும் பின்னு க்குத் தள்ளி யுள்ளது 

அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்ஐடி கேம்பஸ் ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி மைய மாணவர் களின் ஆளில்லா குட்டி விமானம். 


ஏரோநாடிகல் மாணவர் களின் தக்‌ஷா குழுவினர் உருவாக்கி யுள்ள ஆளில்லா குட்டி விமானம்

பல சாதனை களை செய்து மற்றவர் களை ஆச்சரிய த்தில் ஆழ்த்தி யுள்ளது.
பொதுவாக ஆளில்லா விமானங்கள் அதிக நேரம் வானில் பறக்காது, 
ஆனால் அதனை முறியடித்து தக்‌ஷா ஆளில்லா விமானம் தொடர்ந்து 6 மணி நேரம் 
7 நிமிடங்கள் வானில் பறந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
பெட்ரோலை மின்சாரமாக மாற்றும் முறை கையாளப் பட்டுள்ள தால் இந்த ட்ரோன் 

அதிக நேரம் வானில் வட்ட மிடுவதாக் கூறுகிறார் திட்ட இயக்குனர் தாமரைச் செல்வி. 

மேலும் வழக்கமாக இயக்கப்படும் ரிமோட் மூலம் இயக்கப் படாமல் கணினி மூலம் 

இயக்கப் படுவதால் எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்பதை

துள்ளிய மாக செய்ய முடியும் என்பது தக்‌ஷா குட்டி விமானத்தின் சிறப்பு என்கிறார் அவர்.

2015 சென்னை பெருவெள்ள வெள்ள மீட்புப் பணி, உத்தர காண்ட் வெள்ளம், 

தமிழகத்தில் கல்குவாரி ஆய்வு என பல இடங்களில் இந்த ஆளில்லா விமானம் பயன்படு த்தப்பட்டு இருக்கிறது. 

குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கிய போது ஆட்கள் எளிதில் சென்று விட முடியாத 

அந்தப் பகுதியில் தீயின் அடர்த்தி எவ்வளவு, எந்தப் பகுதியில் சென்று சிக்கியவர் களை


மீட்க முடியும் உள்ளிட்ட வற்றை இந்த ட்ரோன் பயன்படுத்தி உதவி இருக்கிறது தக்‌ஷா குழு.
இந்த விமானத்தல் பொருத்தப் பட்டுள்ள தெர்மல் கேமரா வெப்பநிலை மாற்றங் களையும், 
உயர் தரம் வாய்ந்த எச்டி கேமரா காட்சிகளை தெளிவாக வும் படம் பிடித்துக் காட்டுபவை.
”விபத்து நடக்கும் பகுதிக்கே சென்று மீட்புக் குழுவினரு க்கு நாங்கள் ட்ரோன் மூலம் உதவி செய்து வருகிறோம், 
அதனால் மீட்புப் பணியில் என்ன பிரச்னை வருகிறது என்பதை 
அறிந்து கொண்டு அதனை சரி செய்வதற் கான அடுத்தகட்ட ஆராய்ச்சியில் இறங்குவோம், 
இப்படி தொடர் ஆராய்ச்சி களின் விளை வாகவே தற்போது புதிய உலக சாதனையை எட்டி யுள்ளோம்,” என்கிறார் திட்ட இயக்குனர் தாமரைச் செல்வி.
செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா வின் குவின்ஸ் லேண்டில் நடக்கும் யூஏவி மெடிக்கல் சேலஞ்ச் 2018 இறுதிச் சுற்றுக் காக 

இந்த ட்ரோனை உருவாக்கும் குழுவின் ஆலோசகராக திரைப்பட நடிகர் அஜித்குமார் நியமிக் கப்பட்டுள் ளார். 

ஏரோ மாடலிங்கில் பள்ளிப் பருவம் முதலே ஆர்வமாக இருந்தார் அஜித்குமார். நடிகர், பைக் ரேசர் 

என பன்முகம் கொண்ட வராக திகழ்ந் தாலும் ரிமோட் மூலம் இயக்கும் 

வாகனங் களை உருவாக்கு வதில் அவருக்கு இருந்த ஆர்வம் குறைய வில்லை.

இதனால் தாமாக முன் வந்து எம்ஐடியின் தக்‌ஷா குழுவினரு க்கு யூஏவி சேலஞ்ச் போட்டியில் பங்கேற்கும் 

ஆளில்லா குட்டி விமான த்தை உருவாக்கும் முயற்சியில் தன்னை இணைத்துக் கொண் டுள்ளார்.
அஜித்குமார் ஒவ்வொரு முறையும் ஆலோசனை க்காக வருவதற்கு ஊதியமாக அவருக்கு ரூ.1000 நிர்ணயி க்கப்பட் டுள்ளது,
அந்தத் தொகை யையும் அவர் எம்ஐடியின் ஏழை மாணவர்கள் கல்விச் செலவிற் காக அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா வில் நடக்கும் யூஏவி சவாலானது ஒவ்வொரு ஆண்டும் 

ஏரோஸ்பேஸ் துறை, அரசு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங் களால் நடத்தப் படுகிறது. 
உலகம் முழுவதிலும் இருந்து 100 நாடுகள் பங்கேற்றா லும் 55 நாடுகள் மட்டுமே 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன, 

அதில் அண்ணா பல்கலைக் கழகத்தின் தக்‌ஷா ட்ரோனும் ஒன்று.


ஆளில்லா விமானங் களை உருவாக்கு வதில் அஜித் குமாருக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து 

தற்போது 6 மணி நேரம் 7 நிமிடங்கள் ட்ரோன் பறக்கும் சாதனையை இந்தக் குழு செய்துள்ளது.
அடுத்த கட்டமாக 30 கிலோ மீட்டர் தொலைவு பறந்து சென்று நோயாளி யின் ரத்த மாதிரிகளை சேமித்து வந்து பரிசோதனை நிலையத்தில் அளிக்க முடியுமா என்ற ஆராய்ச்சி யில் இறங்கி யுள்ளது இந்தக் குழு.
இதே போன்று 10 கிலோ எடையை தூக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள குட்டி விமானம் மூலம் 

வாகன நெரிசலான நேரத்தில் ஒரு மருத்துவ மனையில் இருந்து மற்றொரு மருத்துவ மனைக்கு உறுப்புகளை கொண்டு செல்லும் 

மருத்துவ வாகனமாக இதனை பயன் படுத்த முடியுமா என்றும் தக்‌ஷா குழுவினர் ஆராய்ச்சியில் இறங்கி யுள்ளனர்.

ஒரு நிமிடத்தி ற்கு 1 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் இந்த ட்ரோன் காவல் துறையினரின் அனுமதி 

மறுப்பால் 200 மீட்டர் உயரம் வரையில் மட்டுமே வட்டமிடும் வகையில் கண்காட்சி யில் பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் 45 நிமிடங்கள் வானில் பறக்கும் 4 ஆளில்லா விமானங் களை 

காவல் துறையின ருக்கு உருவாக்கிக் கொடுத் துள்ளனர் என்பது இந்த மாணவர்களின் 

திறனை அதிகாரிகள் அங்கீகரித் ததற்கான உதாரணம் என்றும் சொல்லாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)