ஈஷா அம்பானியின் மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி யின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி 
மற்றும் ஸ்லோக்கா மேத்தா ஆகியோரின் திருமணச் செய்தியின் அதிர்வுகளை 

அடங்குவதற்கு முன்பே மற்றொரு மகிழ்ச்சியான செய்தி அம்பானி வீட்டில் நடந்துள்ளது.


ஆகாஷ் அம்பானி யின் திருமணச் செய்தியை தொடர்ந்து முகேஷ் அம்பானி யின் 

ஓரே மகளான ஈஷா அம்பானி க்குத் திருமணம் உறுதியாகி யுள்ளது. அதுவும் காதல் திருமணம்.

ஆனந்த் பிராமல்

நாட்டின் மிகப்பெரிய பணக்காரரின் ஓரே மகளான ஈஷா அம்பானி யிடம் 
ஆனந்த பிராமல் தனது காதலை மகாபலேஷ்வர் கோவில் கூறி யுள்ளார். 

இதை எவ்விதமான தயக்கமும் இல்லாமல் உடனடியாக ஏற்றுள்ளார் ஈஷா அம்பானி.

கொண்டாட்டம்

இதனைக் கொண்டாடும் வகையில் ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல்யின் இரு குடும்பமும் இணைந்து மதிய உணவு சாப்பிட்டு ள்ளனர். 
ஈஷாவின் காதலுக்கு எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல் முகேஷ் அம்பானி உடனே ஒப்புக் கொள்ள என்ன காரணம்.? யார் இந்த அனந்த் பிராமல்.

பிராமல் குரூப்

ஹெல்த்கேர் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனங் களுள் பிராமல் குரூப் ஒன்று.


இந்நிறுவனம் தற்போது ஹெல்த்கேர், லைப் சையின்ஸ், மருந்து கண்டுப் பிடிப்பு, 
ஹெல்த்கேர் இன்பர்மேஷன் மேனேஜ்மென்ட், ஸ்பெஷாலிட்டி கிளாஸ் பேக்கிங், 

நிதியியல் சேவை, ரியல் எஸ்டேட் ஆகிய துறையில் சிறந்து விளங்குகிறது.

அஜய் பிராமல்

பிராமல் குரூப் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அஜய் பிராமல் 5.6 பில்லியன் டாலர் 

சொத்து மதிப்புடன் சிறப்பான வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளார். 
2020 -ஆம் ஆண்டுக்குள் இக்குழுமத்தின் மொத்த வருமான அளவை 20 பில்லியன் டாலர் 

அளவிற்கு உயர்த்துவதே இவரின் இலக்காகவும் கொண்டுள்ளார். 

அஜய் பிராமல் மற்றும் ஸ்வாதி பிராமல் தம்பதிக்கு ஆனந்த் பிராமல், நந்தினி பிராமல் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

ஆனந்த் பிராமல்

நந்தினி பிராமல், பிராமல் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் 
நிலையில், ஆனந்த் பிராமல், பிராமல்குரூப்-இன் நிர்வாகத் தலைவராக உள்ளார், 

இது மட்டும் அல்லாமல் பிராமல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவராக வும் உள்ளாப் ஆனந்த்.

ஸ்டார்ட் அப்


பிராமல் குரூப் -இல் சேருவதற்கு முன்பு ஆனந்த் பிராமல் இந்திய கிராமங் களில் 
தினமும் 40,000 பேருக்கு மருத்துச் சிகிச்சை அளிக்கும் வகையில் Piramal Swasthya என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் துவங்கினார். 

இக்கால கட்டத்தில் இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் இளைஞர்கள் வட்டத்தின் தலைவராகவும் ஆனந்த் பிராமல்இருந்துள்ளார்.

கல்வி

ஆனந் தனது பட்டப் படிப்பை அமெரிக்கா வின் பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தில் பெற்றார். 
அதே போல் தனது தந்தையைப் போலவே ஆனந்த் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

பிராமல் ரியல் எஸ்டேட்

ஆனந்த் பிராமல் தலைமை யில் பிராமல் ரியல் எஸ்டேட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையாகாது. 
மிகவும் குறுகிய கால கட்டத்திலேயே சிறந்த அணியை உருவாக்கிப் பல திட்டங்களை முடித்து அசத்தி யுள்ளார்.

முதலீடு

இது மட்டும் அல்லாமல் கோல்மேன் சாச்சஸ் மற்றும் வார்பர்க் பின்கஸ் நிறுவனங் களிடம் இருந்து
சுமார் 434 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை யும் தனது ரியல் எஸ்டேட் நிறுவனத் திற்காக 2015இல் திரட்டினார் ஆனந்த். 

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் இதுவரை திரட்டப் பட்ட முதலீட்டில் இதுவே அதிகமான தொகை யாகும்.


ரியல் எஸ்டேட்
மேலும் 2018இல் ஹூரன் ரியல் எஸ்டேட் யூனிகார்ன் பட்டியலில் ஆனந்த் பிராமல் -க்கு விருது வழங்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

குறுஞ்செய்தி

சமீபத்தில் ஆனந்த் பிராமல் கொடுத்த ஒரு பேட்டியில் முகேஷ் அம்பானி அவர்கள் கொடுத்த 

வார்த்தைகள் தான் என்னை வர்த்தகச் சந்தைக்கு இழுத்தது எனக் கூறினார். 
தற்போது முகேஷ் அம்பானி, ஆனந்த் பிராமல் அவர்களுக்கு மாமனார் ஆகியுள்ளார். 

தற்போது ஆனந்த் பிராமல்க்கு 33 வயது ஆகும் நிலையில், ஈஷா அம்பானிக்கு 26 வயது மட்டுமே ஆகிறது.

ஈஷா அம்பானி


ஈஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவன த்தின் நிர்வாகக் குழுவில் முக்கியநபராக உள்ளார். 
2014 -இல் யேல் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பையும், ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் எம்பிஏ முடித்த ஈஷா, 

சில வருடம் மெக்கென்சி அண்ட் கம்பெனி யில் பணியாற்றிய பின்னர் ரிலையன்ஸ் நிர்வாகத்தில் சேர்ந்தார்.

வர்த்தக நோக்கம்..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் செய்யும் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறையில் பிராமல் குரூப் இருக்கிறது. 

இது தனது வர்த்தக த்தை விரிவாக் கவும், நாட்டின் அனைத்துத் துறையிலும் தனது ஆதிக்கம் இருக்க வேண்டும் 


என்பதை மனத்தில் வைத்துக் கூட இந்தத் திருமணத் திற்கு முகேஷ் அம்பானி ஒப்புக் கொண்டு இருக்கலாம். 

அதே போல் ஆகாஷ் அம்பானியின் மனைவி யாகப் போகும் ஸ்லோக்கா மேத்தா 

குடும்பமும் முற்றிலும் மாறுபட்ட துறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings