சவுதியில் இளவரசர், இளவரசிகளுக்கு அஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

0
மன்னராட்சிக்குப் புகழ்பெற்ற நாடு சவுதி அரேபியா. ஆசியாவில் ஐந்தாவது பெரிய நாடு. 
இந்த நாட்டில் கடந்த 1938-ம் ஆண்டில் பெட்ரோல் கண்டு பிடிக்கப் பட்டது.

அப்போ திருந்தே செல்வத்தில் கொழிக்கத் தொடங்கியது சவுதி. நாட்டின் முதல் மன்னர்


அப்துல் அசீஸ். கிங் அப்துல்லாசிஸ் என பரலாக அழைக்கப் பட்டவர்.

பெட்ரோலிய வளத்தை முறையாகப் பயன்படுத்தி சவுதி அரேபியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்ற வித்திட்டவர் இவர்தான்.

இரண்டாம் உலகப் போரின் போது, உலகம் முழுக்க பெட்ரோலின் தேவை அதிகமாக, 

அதைப் பயன்படுத்தி பாலைவனத் தேசத்தை பணக்கார பூமியாக மாற்றினார் கிங் அப்துல்லாசிஸ்.

இவருக்கு மட்டும் 17 மனைவிகள் வழியாக 36 குழந்தைகள் உண்டு. 

இப்படி தான் சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பம் உருவாகத் தொடங்கியது.

சவுதியின் இரண்டாம் அரசரான கிங் சாத்துக்கு (கிங் அப்துல் லாசிசின் மகன்) மகன்கள் மட்டும் 53 பேர்.

ஆயிரக் கணக்கில் உறவினர்கள். சவுதி அரேபிய மன்னர் குடும்பம் பற்றி, ஜோசம் ஏ. கென்சியன், 

‘சவுதி அரசமைப்பு வரலாறு ‘என்ற புத்தகத்தில் சவுதி அரேபியா வில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இளவரசர், இளவரசிகள் இருப்ப தாகக் கணக்கிட் டுள்ளார்.

கிங் சாத்தின் மகள், இளவரசி பாஸ்மா பின் சாத், ராயல் நம்பர் 15000 எனவும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
சவுதியைப் பொறுத்த வரை 13 மாகாணங்கள் உள்ளன. 

அதனை நிர்வகிக்கும் உரிமைகள் பெரும்பாலும் மூத்த இளவரசர்கள் கையில் ஒப்படைக்கப் படுகிறது.


நாட்டின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகப் பொறுப்பு களிலும் மூத்த இளவரசர் களே நியமிக் கப்படுகி றார்கள்.

சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர், அப்துல்லா 1963-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 

தேசிய பாதுகாப்புப் படைத் தலைவராக இருந்தவர் தான். 

பின்னர் மன்னராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் அந்தப் பதவியைத் துறந்தார்.

தற்போது இந்த நாட்டின் மன்னராக கிங் சல்மான் இருக்கிறார். கிங் சல்மான், கடந்த 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்துள்ளார்.

மன்னர் அப்துல்லா சிஸின் 25-வது குழந்தை சல்மான். இவரது தாய், ஹாசா அல் சுதாரிதான் கிங் அப்துல்லாசிசின் ஃபேவரைட் மனைவி என்று சொல்லப்படுகிறது.

கிங் அப்துல்லாசிஸ் – ஹாசா அல் சுதாரிக்கு இடையே 7 குழந்தைகள் உண்டு. 

கிங் சல்மான், சவுதியின் பாராம் பரியமான உடை அணிந்தாலும் இளம் பருவத்தில் மேற்கத்திய உடைகளை விரும்பி அணிவாராம்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ரியாத் மாகாண கவர்னராக இருந்திருக் கிறார். 

இவரது காலத்தில்தான் ரியாத் நகரை ஒட்டிய பாலை வனங்களில் பிரமாண்ட மான 

வானளவு உயர்ந்த கட்டங்கள் எழுப்பப்பட்டு மக்கள் வசிக்கு மளவுக்கு புறநகர் பகுதியாக உருவாக்கப் பட்டது.

தற்போது நாட்டில் மொத்தம் 15 ஆயிரம் இளவரசர் – இளவரசிகள் இருக்கின்றனர்.

ராஜ குடும்பத்து க்கு இப்போது கிங் சல்மான் தான் தலைவர். தற்போது சவுதியே பொருளாதார நெருக்கடி யில் சிக்கி யுள்ளது.


ஏராளமான வெளி நாட்டுத் தொழிலாளர் களுக்கு சம்பளம் கொடுக்க 

முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் அவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றன.

இதற்கிடையே சவுதி அரச குடும்பத்தினர் சுகபோக வாழ்க்கையில் வாழ்வதாக 

வெளிநாட்டு மீடியாக்கள் கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன.

அரச குடும்பத்தினர் சுவிஸ் வங்கியில் பணம் போடுகின்றனர். 

ஐரோப்பிய நாடுகளில் ஆடம்பரப் படகுகளில் உல்லாசமாக வலம் வருகின்றனர் என்ற செய்திகளைப் பார்க்க முடிகிறது.

கிங் சல்மான் பெயர் கூட கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளி யிடப்பட்ட பனமா பேப்பரில் இடம் பெற்றுள்ளது.

லக்ஸ்ம்பர்க் மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் நிறுவனங்கள், லண்டனில் 

சொத்துக்கள், பிரமாண்ட மான படகுகள் வைத்திரு க்கிறார் என பனாமா பேப்பர் சொல்கிறது.

சவுதியின் முக்கிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின்

ஒட்டு மொத்த வருவாய் முழுவதுமே சவுதி அரசக் குடும்பத் தினர் செலவுக் காகத் தான் ஒதுக்கப் படுவதாக சொல்கி றார்கள்.

அதாவது தினமும் 10 லட்சம் பேரல்கள் குரூட் ஆயில் விற்பனை மூலம் கிடைக்கும் 


வருவாய் இளவரசர்கள் – இளவரசிகள் செலவுக் காக ஒதுக்கப் படுகிறதாம்.

அரசக் குடும்பத்திலும் நேரடி இளவரசர் களுக்கும் உறவு முறையில் வலம் வருபவர்க ளுக்கும் 

வழங்கப்படும் படிகள் உள்ளிட்ட விஷயங்களில் அனேக வித்தி யாசங்கள் இருக்கின்றன.

நேரடி உறவுகளு க்கும் மறைமுக உறவுகளு க்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால்…

நேரடி உறவுகள் லம்போகினி, புகாட்ரி ரக கார்களில் வந்தால், மறைமுக உறவுகள் ரேஞ்ச் ரோவர், மெர்சிடெஸ் பென்ஸ் கார்களில் வருவார்கள்.

அரசரின் நேரடி மகனுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மாதம் ஒன்றுக்கு செலவுக் காக வழங்கப்படும்.

பேரக்குழந்தை களுக்கு மாதம் 8 ஆயிரம் டாலர்கள் கிடைக்கும். 

அரச வாரிசு களுக்குத் திருமணம் நடந்தால் 3 மில்லியன் டாலர்கள் வரை அரண்மனைக் கட்டிக் கொள்ள திருமணப் பரிசாக வழங்கப்படும். 

கடந்த ஐந்து ஆண்டு களுக்கு முன் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் இது.


சவுதி அரேபியா வின் மொத்த பட்ஜெட் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 

அதில், 2 பில்லியன் டாலர்கள் அரசக் குடும்பத்தின் செலவு களுக்காக ஒதுக்கப் படுகிறது.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கு எதிலும் முன்னுரிமை. அரசு துறைகளில் 

நல்ல பணிகள் ஒதுக்கப் படும், நிர்வாக ரீதியிலான பதவிகள் வழங்கப் படும்.

எண்ணெய் நிறுவனங் களில் கௌரவத் தலைவர்கள் பதவியில் இருப்பார்கள். 

அதில் இருந்து படிகள் கிடைக்கும். மற்றபடி செல்போன் பில்லில் இருந்து 

சவுதி ஏர்லைன்சில் நினைத்த நேரம் பயணம் செய்யும் வசதி வரை உண்டு.

ஆனால் இந்தத் தகவல்களை சவுதி அரசின் செய்தித் தொடர்பாளர் குவாசேயர் மறுக்கிறார். 

இது குறித்து அவர் கூறுகையில்,” மன்னர் குடும்பத் துக்கு மட்டுமே 

ஆண்டுக்கு 2.7 பில்லியன் டாலர்கள் செலவாகிறது என சொல்லப் படுவது தவறானது.

சவுதியின் அரச பரம்பரையின் அமைப்பைத் தெரிந்தவர் களுக்கு அதனை விளக்கத் தேவை யில்லை. 

நாட்டின் பல மாகாணங் களில் பூர்வக் குடிகள் உள்ளனர்.


அந்த பூர்வக்குடித் தலைவர் களுக்கு பெரும் தொகை போய் சேர்கிறது” எனக் கூறி யுள்ளார்.

தற்போதைய சவுதி மன்னர் சல்மான் செலவு களைக் கட்டுப் படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். 

அமைச்சர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.

மன்னரால் நியமிக் கப்படும் சவுரா கவுன்சில் உறுப்பினர் களின் சம்பளத்தில் 15 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது.

வழங்க ப்படும் படிகள் உள்ளிட்ட இதர செலவு களையும் கட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)