போலி நல்லெண்ணெய் விழிப்புணர்வு !

0
மாடுகள் சுற்றிவர செக்குகளில் ஆட்டியெடுத்த இந்த எள் எண்ணெய் கால மாற்றத்தில் பவர்கனி, லோட்டரி மிஷின், எக்ஸ்பிளர் என இயந்திரச் செக்குகளில் இப்போது ஆட்டியெடுக்கப் படுகிறது.
முந்திரி கழிவெண்ணெய்
முன்பு 10 கிலோ எள்ளுக்கு அரை கிலோ கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்து ஆட்டி நல்லெண்ணெய் தயாரானது.

இப்போது வணிக வருவாய் கருதி கிலோ ரூ.120 வரை விற்பதால் கருப்பட்டிக்குப் பதில் கிலோ ரூ.20க்குள் கிடைக்கும் மொலாசஸ் என்ற சர்க்கரை ஆலைக் கழிவைக் கொட்டி ஆட்டி நல்லெண்ணெய் எடுக்கப் படுகிறது.

இதை விட கொடுமையாக, சமீபகாலமாக எள் இல்லாமலேயே நல்லெண்ணெய் தயாரித்து விற்கும் மோசடி தலைதூக்கி இருக்கிறது. 

குப்பையில் கொட்ட வேண்டிய நாள்பட்ட கெட்டுப்போன முந்திரிப் பருப்பை வாங்கி, அதனை செக்கிலிட்டு நசுக்கி கழிவெண்ணெய் எடுக்கப்படுகிறது.

விலை குறைந்து விற்கும் பாமாயில் அல்லது ரைஸ் ஆயில் 15 கிலோவுடன், அரைலிட்டர் முந்திரி கழிவெண்ணெய் கொட்டிக் கலந்தால் நல்லெண்ணெய் வாசத்தில், வண்ணத்தில் கலப்பட எண்ணெய் கிடைக்கிறது.

ரூ.60க்குள் தயாராகும் இந்த போலி எண்ணெய்யை, நல்லெண்ணெய் என்ற பெயரில் மூன்று மடங்கு விலையில் லிட்டர் ரூ.180க்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

இந்த கலப்பட எண்ணெய்யை அதிகாரிகள் கண்டு பிடித்தாலும், குற்ற நடவடிக்கை களில் இருந்து தப்புவதற்காக 
சிலர் இந்த எண்ணெய் டின் மீது பார்வைக்குத் தெரியாத ஒரு ஓரத்தில் தீப உபயோகத்திற்கு மட்டும் 

எனும் பொருள்பட லைட்டிங் பர்ப்பஸ் என போட்டுக் கொள்கின்றனர்.பொதுவாக அடர்த்தியான பிரவுன் நிறத்திலான தரமான நல்லெண்ணெய்யை பிரிட்ஜில் வைத்தால் உறையாது. 

ஆனால் பாமாயில், முந்திரி கழிவெண்ணெய்யில் தயாராகும் இந்த போலி நல்லெண்ணெய் பிரிட்ஜில் வைத்ததும் உறைந்து விடும்.

எனவே பிறர் போலி என்று கண்டு பிடிக்காமல் இருக்க கலப்படக் கும்பல் ஒரு நூதன வழியைக் கையாள்கிறது. 

அதாவது, பாம் ஒலி பெயரில் ரீபைண்ட் செய்யப்பட்ட பாமாயில் விற்கிறது. இதனை கும்பல் வாங்கி, இதனுடன் முந்திரிக் கழிவெண்ணெய் கலந்து போலி நல்லெண்ணெய் தயாரிக்கின்றன. 
போலி நல்லெண்ணெய் விழிப்புணர்வு !
இந்த எண்ணெய் தெளிவாக இருப்பதால் இதனை தும்பை எள் எண்ணெய் எனக்கூறி லிட்டர் ரூ.290 வரை விற்று ஐந்து மடங்கு லாபம் பார்க்கின்றனர்.

இவ்வகையில் தயராகும் போலி நல்லெண்ணெய் பிரிட்ஜில் வைத்தால் உறைவதில்லை. மக்களும், அதிகாரிகளும் இதைப் போலி என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நல்லெண்ணெய் யாகவே இது இருக்கிறது.

நம் பண்பாட்டு அடையாளமாக, மருந்தே உணவாக உள்ள நல்லெண்ணெய் வாங்குவோர் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து, போலி எண்ணெய்யைத் தவிர்ப்பது அவசியம். 

அதே போல், இது போன்ற போலி எண்ணெய் தயாரித்து விற்போர் மீது அரசு கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் மிக அவசியம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)