டெங்கு மரணம் அதிகரிக்க காரணம் என்ன?

0
புவி வெப்ப மடைதலின் விளைவாகவே அதிக கொசுக்களின் இனப்பெருக்கம் நடை பெறுவதாகச் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித் துள்ளார். 
டெங்கு மரணம் அதிகரிக்க காரணம் என்ன?
இந்தக் கொசு உற்பத்தி மற்றும் டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு செய்ய வேண்டிய 10 வழி முறை களையும் அவர் விளக்கி யுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, தமிழகத்தின் பல பகுதிகளிலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவலான பாதிப்புகளை மட்டுமன்றி உயிரிழப்பு களையும் ஏற்படுத்தி வருகிறது. 

எனது மருத்துவ மனையில் நாள் ஒன்றுக்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 நபர்கள் வரும் நிலையில்  

அரசு தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 10,000 பேர் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப் படுவதாகச் சொல்வது வேடிக்கை யாக உள்ளது. 

சில முக்கிய நடவடிக்கை களை அரசு தீவிரமாக மேற்கொண்டாலே டெங்கு கொசுக் களை கட்டுப் படுத்த முடியும்.
1) டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளை உறுதிப்படுத்திய உடன் அது ஏற்கெனவே உள்ள வைரஸ் தானா அல்லது மாற்றம் (Mutation) அடைந்த வைரஸா என்பதை அரசு முதலில் உறுதி செய்ய வேண்டும். 

இதை தான் பல உலக நாடுகள் செய்து வருகின்றன. உலகச் சுகாதார நிறுவனமும் (WHO) இதையே வலியுறுத்து கிறது.

2) அடுத்த படியாக எந்த மருந்து வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது என உறுதிப்படுத்த வேண்டும். 

நிலவேம்புக் குடிநீர், கபசுர குடிநீர், அன்னாசி பூ , டெமிப்ளூ மாத்திரை இவற்றுள் எவை வைரஸைக் கட்டுப் படுத்தும் திறன் கொண்டுள்ளது என்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

3) இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 1996-ல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெங்கு வைரஸ்  அதற்கு முன்னதாக இந்தியாவில் இல்லை என்பது ஆய்வின் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. 

பொதுவாக டெங்கு பாதிப்பினால் 1% உயிரிழப்பு மட்டுமே இருக்கும் போது டெல்லியில் உயிரிழப்பு 4 சதவிகித மாக இருந்தது. 

அது ஏன் உயிரிப் போர் முறை தந்திரமாக இருக்கக் கூடாது என்ற திசையில் ஆய்வுகள் இருக்க வேண்டும்.

4) சென்னையில் 2015-ல் வெளிவந்த மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் 93% சென்னை மக்கள் டெங்குவால் பாதிக்கப் பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. 
டெங்கு மரணம் அதிகரிக்க காரணம் என்ன?
மேலும் டெங்குவால் 1% உயிரிழப்பு ஏற்படும் என்பதை கணக்கில் கொண்டால் சென்னையில் மட்டும் 1 வருடத்துக்கு 2280 பேர் மரணமடைய நேரிடும் என்ற செய்தியும் அந்த ஆய்வுக் கட்டுரையில் உள்ளது. 

அரசு, சுகாதாரத்துறை, மருத்துவர்கள் இதை ஏன் மறைக்க வேண்டும்?

5) டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்க மருந்து இல்லாத நிலையில் அதைக் கட்டுப் படுத்துவதைப் பற்றி அரசு தீவிரமாக யோசிக்க வேண்டும். 

மழைக் காலத்தில் நீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி வளராமல் அதைக் கட்டுப்படுத்த உரிய முன் ஏற்பாடு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். 

சென்னையில் 56% குடியிருப்புப் பகுதிகளுக்கு உரிய மழைநீர் வடிகால் வசதி இல்லை இப்படியிருக்க கொசுக்கள் வளர்வதை எப்படிக் கட்டுப்படுத்த முடியும். 
மேலும் கொசுவின் முட்டைகளை உண்ணும் கம்பூசியா வகை மீன்களைத் தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் விட அரசு முயற்சி செய்ய வேண்டும். 

சிறு மழை வந்தாலும் சாலைகளில் நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை களை அரசு எடுக்க வேண்டும்.

6) புவி வெப்பமடைதலால் தான் (GLOBAL WARMING) கொசுக்கள் அதிகம் இனப்பெருக்கம் செய்கின்றன. 

புவி வெப்ப மடைதலை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்காவிடில் கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல்களை எப்படிக் கட்டுப் படுத்த முடியாது.

7) தமிழகத்தின் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காய்ச்சலைக் கண்டறிய இலவசப் பரிசோதனை வசதி, உரிய அறிவியல் ஆய்வுகள் மூலம் எந்த மருந்து வைரஸைக் கட்டுப் படுத்துகிறது என 
டெங்கு மரணம் அதிகரிக்க காரணம் என்ன?
அறிந்து அம்மருந்தை இலவசமாக அனைவரு க்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டறியாமல் ``மர்மக் காய்ச்சல்" என அரசுத் தரப்பில் கூறுவது எப்படிச் சரியாகும்?

8) இந்தியாவில் 2014-2015-ம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸின் 3 இடங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்தது. 

மேலும் அது ராம் சசி சேகரன் என்பவரால் ஆய்வுப் பத்திரிகையில் கட்டுரை வெளி வந்துள்ளது. 

இந்த மாற்றங்கள் காரணமாக அந்த வைரஸ் நுரையீரலில் அதிகமாக ஒட்டிக் கொண்டு மோசமான பாதிப்புகளையும், 

உயிரிழப்பு களையும் ஏற்படுத்தும் தன்மையைப் பெற்று இருப்பதும், தடுப்பூசிகளு க்கு அது எளிதில் கட்டுப் படாமல் போகும் என்பதும் தெரிய வந்துள்ளது.
9) பல உலக ஆய்வுகளில் ( COCHRANE) பன்றிக் காய்ச்சலைக் கட்டுப் படுத்துவதாகச் சொல்லப்படும் டெமிப்ளூ மாத்திரை பன்றிக் காய்ச்சலை பெரும் அளவு தடுக்காது என்றும், 

மருத்துவமனை அனுமதிப்பு களைக் குறைக்காது என்றும், குறிப்பாக உயிரிழப்பு களைக் கொஞ்சம் கூடக் குறைக்க வில்லை என்றும் தெரிய வந்துள்ள நிலையில், 

அரசு கொசு தடுப்பு நடவடிக்கை களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் டெமிப்ளூ மாத்திரையை மட்டும் முதன்மைப் படுத்துவது சரியானது இல்லை.

10) தற்சமயம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் பாதிப்புகளில் 5 வயதிற்குக் குறை வானவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ளவர் களைத் தவிர்த்து நல்ல நிலையில் உள்ளவர்களும் கூட பாதிப்பின் போது உயிரிழந்துள்ளனர். 

வைரஸ் மாற்றம் அடைந்து இருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் பலரும் கூறிய நிலையில் முதலில் இதை மறுத்த தமிழக நோய் தடுப்புத்துறை பின்னர் ஏற்றுக் கொண்டது வரவேற்கத் தக்கது. 

இறுதியாகத் தமிழகத்தில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரையின் பேரில் இயங்கி வந்த தேசிய ப்ளூ கண்காணிப்பு மையம் 
டெங்கு மரணம் அதிகரிக்க காரணம் என்ன?
குன்னூரில் இயங்கி வந்த நிலையில் அந்த நிறுவனமும் 1950-57 இடைப்பட்ட காலத்தில் ப்ளு வைரஸ் தொடர்பாக 

பல பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில் அந்த நிறுவனத்தை அரசு இழுத்து மூடியுள்ளது. 

நாம் வைரஸ் ஆய்வுக்காக மாதிரிகளை பூனாவுக்கு அனுப்பி வருகிறோம். அத்தகைய வசதி உள்ள ஆய்வகத்தைத் தமிழகத் திலேயே ஏற்படுத்த வேண்டும். 

மக்களும் இது தொடர்பாக அரசை நிர்பந்திக்கும் முயற்சியில் ஈடுபட முன் வருவதே பிரச்னையைத் தீர்க்க உதவும்” எனத் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)